Rawfan

உணர்வுகளின் விடுகதை 03

உணர்வுகளின் விடுகதை – 03 (தொடர்கதை EP03) சிற்றன்னை கொடுத்த லிஸ்ட்படி குறித்த கடையில் பொருட்களை வாங்கி திறீவீலரில் எடுத்து சென்று ஹோலில் சேர்ப்பிக்கவும் ளுஹர் பிந்தியது. இவனும் அருகிலிருந்த பள்ளியில் தொழுதுவிட்டு வந்தான். சிற்றப்பாவும் அப்போது தொழுதுவிட்டு ஹோலுக்கு வந்தார்.  “சாச்சா நீங்க வீட்டுக்கு போங்க நான் பாத்துக்கிறேன்!”  என இவன் சொன்னதும்….  “சரி வாப்பா உன்னப்பத்தி தெரியும்தானே!”  என்று கூறியவாறு அவனது தலையை வருடிவிட்டு அவர் வீட்டுக்கு சென்றார். செல்லும்போது….  “அந்த ஸ்டாது அடிக்கிற […]

உணர்வுகளின் விடுகதை 03 Read More »

உணர்வுகளின் விடுகதை 02

(தொடர் கதை EP 02) ரமீஸ் சற்று குழம்பியுள்ளதை உணர்ந்தான். ஏதோ தப்பொன்றை செய்வது போன்ற உணர்வு அவனை வாட்டியெடுத்தது. இதிலிருந்து சேதப்படாமல் வெளியே வரவேண்டும் என நினைத்த மாத்திரத்தில் அவளின் முகம் கண்ணெதிரே வந்து புன்சிரித்து போனது.  இன்னும் கல்யாண வீட்டில் எதேச்சையாக இரண்டொரு தடவை அவள் கண்ணில்பட நிலமை மோசமானது. சிறிய தாயின் வீடு என்பதால் எல்லா இடத்திற்கும் செல்லும் சுதந்திரம் அவனுக்கிருந்தது. அந்த சுதந்திரத்திற்கு முற்றுப்புள்ளி இட்டால் நிலமை ஓரளவு சரியாகுமென நினைத்தான்.

உணர்வுகளின் விடுகதை 02 Read More »

உணர்வுகளின் விடுகதை 01

உணர்வுகளின் விடுகதை 01 (தொடர்கதை EP 01) அந்த கடிதத்தை உற்றுப்பார்த்தபடி நடந்த சம்பவத்துக்குள் ரமீஸ் சென்றான். அவன் உயர்தரம் வரை படித்துவிட்டு ஒரு N.G.O வில் field officer  ஆக பணியாற்றிக் கொண்டிருப்பவன்.  அவனது துடிப்பும் ஆற்றலும் இறை திருப்தியை மையப்படுத்திய சமூக சேவைக்கென இயங்கிக் கொண்டிருந்தது. நான் எனக்கு எனது என ஓடும் உலகில் இவன் போன்ற புறநடைகள் பெரிதாக கண்டுகொள்ள படுவதில்லை. இருந்தாலும் தனிப்பட்ட உணர்ச்சிகளும் அவனுக்கென நியாயமான சில எதிர்பார்ப்புகளும் சமூகத்திடமிருந்து

உணர்வுகளின் விடுகதை 01 Read More »

சில்லென்று ஒரு காதல்…! 09

சில்லென்று ஒரு காதல் – 09 (தொடர்கதை EP 09) “எக்ஸ் கியூஸ்மி இப்போ வலதுக்கு போடவா இடதுக்கு போடவா?”  என ராசிக் கேட்டதும்….  ” இடதுக்கு போட்டு ஒரு ரெண்டு கிலோமீட்டர் போங்க அங்க இடப்பக்கமா ஒரு லேன் வரும் அதுல போட்டு முப்பது மீட்டர் போனதும் வலதுல யெலோ கலர்ல மதில் போட்ட கேட் வரை போங்க!”  என அலி சப்ரி சொன்னதும்…  ” ராசிக் அப்படியே போ!”  என்றுவிட்டு….  ” அது யாரோட

சில்லென்று ஒரு காதல்…! 09 Read More »

சில்லென்று ஒரு காதல்…!  08

சில்லென்று ஒரு காதல் – 08 (தொடர்கதை EP 08) ரொஷான் வந்தது இருந்த பதற்றத்தையும் கவலையையும் அங்கு அதிகரித்தது.  “என்ன மருமகன் திடீர்னு இந்த பக்கம்?” என்ற சம்ஹாவின் தந்தையின் விசாரிப்பு ஒரு செயற்கை தனத்தை காட்டியது. அதே ரிஆக்ஸனுடன் ” இல்ல மாமா ப்ரண்டுக்கு இன்விடேஷன் கொடுக்க வந்தேன் அத்தோட ஒரு எட்டு பாத்திட்டு போகலாம்னு தான்…. நான் வர இருக்கல அதான் ராசிக் கிட்ட சில பொருட்கள நேரப்பட அனுப்பினேன்!”  என ஒரு

சில்லென்று ஒரு காதல்…!  08 Read More »

சில்லென்று ஒரு காதல்…!  07

சில்லென்று ஒரு காதல் – 07 (தொடர்கதை EP 07) ராசிக் சம்ஹா வீட்டுக்கு அவர்களது திட்டப்படி நுழைந்தபோது சுமார் காலை எட்டு மணியிருக்கும். ரொஷானின் நண்பனென்ற வகையில் உள்வீட்டு விவகாரம் ஒரு மூடுமந்திரம் போல் மறைக்கப்பட்டது. ஆனாலும் ஏதோ அசாதாரணம் நடந்துள்ளதை ராசிக் உணர்ந்தான். சம்ஹாவும் எதையும் காட்டிக் கொள்ளாமல் கதைத்தாள். ஒரு சின்ன இடைவவெளியில் ராசிக்…..  ” ரொஷானும் வந்தீர! உங்கள சந்திக்கனுமாம்!”  என விஷயத்தை போட்டான். அவளது முகத்தில் ஆனந்தம் அதிர்ச்சி கேள்விக்குறியென

சில்லென்று ஒரு காதல்…!  07 Read More »

சில்லென்று ஒரு காதல்….!  06

சில்லென்று ஒரு காதல் – 06 (தொடர்கதை EP 06) அந்த வாடகை ரூமில் சம்ஹாவின் நினைவுகளோடு இருந்த ரொஷான் நண்பன் ராசிக்கை தட்டியெழுப்பி…. “மச்சான் டைமாயிட்டு ரெடியாகு!”  என தட்டியெழுப்பவும் விழித்து கண்ணைக்கசக்கிய ராசிக் நேரத்தைப் பார்த்து திடுக்கிட்டு முறைத்தபடி…. “இவன் ஒருத்தன்! மூடிகிட்டு படுடா! மூனு மணிக்கே ரெடியாகி போய் அவங்க வீட்ல கோழியா திருடப் போறே! சத்தியமா முடியலடா!” என்றவாறு மறுபக்கம் திரும்பி படுத்தான். “மச்சான் மச்சான் சிங்கில் டவுட்டுடா! சமி வீட்ல

சில்லென்று ஒரு காதல்….!  06 Read More »

சில்லென்று ஒரு காதல்….!  05

சில்லென்று ஒரு காதல் – 05 (தொடர்கதை EP 05) திருமணத்திற்கான நாட்கள் நெருங்கி கொண்டிருந்தது. காதலில் உள்ளங்கள் கலந்தபின்பு திருமணம் ஒரு சம்பிரதாயமாவது சகஜம்தானே? அதற்கு இடையிலான பிரிவின் நாட்களும் இருவருக்கும் முற்களாக குத்தியது. இன்னொருபக்கம் சம்பிரதாயமான திருமணத்தின் பின் அங்கு காதல் பூத்து காய்த்து கனி தராவிட்டாலும் அந்த வாழ்க்கையும் ஒரு மலட்டு சடங்காகிவிடும்; என்பதும் மறுப்பதற்கில்லை. தப்பாே சரியாே திருமணத்தின் முன் உள்ளம் சேர்ந்தபின்பு அதை திருப்திப்படுத்த காதலர்கள் நியாய தர்மம் பார்ப்பதில்லை.

சில்லென்று ஒரு காதல்….!  05 Read More »

சில்லென்று ஒரு காதல்….!  04

சில்லென்று ஒரு காதல் – 04 (தொடர்கதை EP 04) நம்பிக்கை கொள்வதும் உள்ளம்! நம்பிக்கையை கொல்வதும் உள்ளம்! எல்லாவற்றுக்கும் விதி என்ற காரணத்தை மட்டும் சூடி ஆறுதல் படுவதும் உள்ளம். கண்களுக்கு தெரியாத ஏதோ ஒரு தீர்மானத்தை நோக்கி நாம் நகர்வது மட்டுமே வேடிக்கையான வாடிக்கை. ஆனால் கொண்டு வளர்த்து கொன்று விடுவது என்ற விதியின் பந்தயங்களில் சூழ்நிலைகள் மிக சுலபமாக எம்மை தோற்கடித்து விடுகிறது! அந்த தோல்வி ஆன்மாவின் ஆழம்வரை தாக்கியும் விடுகிறது. சம்ஹா

சில்லென்று ஒரு காதல்….!  04 Read More »

சில்லென்று ஒரு காதல்….!  03

சில்லென்று ஒரு காதல் – 03 (தொடர்கதை EP 03) ஆழமாக பழகும் போது அந்த அன்பு பலமாவும் பலகீனமாவும் மாறும்! அவரவருக்கென முடிவுகளை அது தீர்மானிக்கும். அதன் விளைவு தனிப்பட்ட சுதந்திரங்களிலும் இலட்சியங்களிலும் எல்லை மீறி கைவைத்து விடுகிறது. அதற்கான காரணங்களை சூழ்நிலையை ஆராயவோ நியாய தர்மங்களை சிந்திக்கவோ அவகாசம் எடுக்காத செயல்களை அது புரிந்தும் விடுகிறது. கடைசியில் உன்குற்றமா என்குற்றமா என்பதே அங்கு பேசுபொருள்! ஆராயப்பட வேண்டிய விடயம் கிடப்பில் இருக்க அர்த்தமற்ற சர்ச்சைகள்

சில்லென்று ஒரு காதல்….!  03 Read More »

error: Content is protected !!
error: Content is protected !!