Vacancies March 4, 2026 Rawfan

Company Inspector vacancy – கம்பனி பரிசோதகர் வேலைவாய்ப்பு 2026

Company Inspector vacancy - 2026

கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் நிலவும் கம்பனி பரிசோதகர் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு தகுதியுள்ள உத்தியோகத்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 2026.02.06 ஆம் திகதியிட்ட அரசாங்க வர்த்தமானி அறிவித்தலின் படி, இதற்கான முழுமையான விபரங்கள் மற்றும் மாதிரி விண்ணப்பப் படிவத்தை ஒரே அட்டவணையில் கீழே பெற்றுக்கொள்ளலாம்.

பிரிவு விபரங்கள்
நிறுவனம் கம்பனிகள் பதிவாளர் திணைக்களம்
பதவியின் பெயர் கம்பனி பரிசோதகர்
ஆட்சேர்ப்பு முறை தகைமை மதிப்பீட்டு நேர்முகப் பரீட்சை மூலம்
சம்பள விபரம் மாதாந்த அடிப்படைச் சம்பளம்: ரூபா 31,490 – 54,205/-
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து “பதிவுத் தபால்” மூலம் அனுப்ப வேண்டும்.
முடிவுத் திகதி 2026.03.06
முழுமையான விபரங்கள் 📄 அறிவித்தலைப் பதிவிறக்க
விண்ணப்பப் படிவம் 📄 படிவத்தைப் பதிவிறக்க

விண்ணப்பதாரர்கள் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளதை போன்று விண்ணப்பப்படிவத்திற்கு அமைய விண்ணப்பங்களைத் தயாரித்து அனுப்ப வேண்டும். தபாலுறையின் இடது பக்க மேல் மூலையில் “கம்பனி பரிசோதகர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பம்” எனக் குறிப்பிடுவது அவசியமாகும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: கம்பனிகள் பதிவாளர், கம்பனிகள் பதிவாளர் திணைக்களம், இலக்கம் 400, டி. ஆர். விஜேவர்தன மாவத்தை, கொழும்பு 10.