இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (சட்ட அதிகாரி) வேலைவாய்ப்பு 2026
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் சட்டப் பிரிவுகளில் நிலவும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP – சட்ட அதிகாரி) பதவிகளுக்கு தற்காலிக அடிப்படையில் ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் இப்போது கோரப்பட்டுள்ளன. 2026.02.20 ஆம் திகதியிட்ட அரசாங்க வர்த்தமானி அறிவித்தலின் படி, தகுதியுள்ள சட்டத்தரணிகள் (Attorneys-at-Law) இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
| பிரிவு | விபரங்கள் |
|---|---|
| நிறுவனம் | இலங்கை பொலிஸ் திணைக்களம் |
| பதவியின் பெயர் | உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (சட்ட அதிகாரி) – ஆண்/பெண் |
| கல்வித் தகைமை | உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக (Attorney-at-Law) சத்தியப்பிரமாணம் செய்திருத்தல் வேண்டும். |
| வயது எல்லை | 25 – 45 வயதிற்கு உட்பட்டவர்கள் (2026.03.20 ஆம் திகதியன்று) |
| சம்பளம் & கொடுப்பனவு | அடிப்படை: 74,438/- | மொத்தக் கொடுப்பனவு: 1,45,000/- இற்கும் அதிகம். |
| விண்ணப்பிக்கும் முறை | மாதிரி விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து “பதிவுத் தபால்” மூலம் அனுப்ப வேண்டும். |
| முடிவுத் திகதி | 2026.03.20 |
| விண்ணப்பப் படிவம் (PDF) | 📄 Download PDF |
இந்த நியமனமானது அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரையிலான தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான நியமனமாகும். தெரிவு செய்யப்படும் அதிகாரிகள் பொலிஸ் மா அதிபரினால் தீர்மானிக்கப்படும் பயிற்சிகளைப் பெற வேண்டும் என்பதுடன், இலங்கையின் எந்தப் பகுதியிலும் கடமையாற்றத் தயாராக இருத்தல் வேண்டும்.