இன்றைய நாள்: பெப்ரவரி 19 - வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்
பெப்ரவரி 19 (February 19) கிரிகோரியன் ஆண்டின் 50 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 315 (நெட்டாண்டுகளில் 316) நாட்கள் உள்ளன.
வரலாற்று நிகழ்வுகள்:
356 – உரோமைப் பேரரசர் இரண்டாம் கான்ஸ்டன்டியசு பேரரசில் உள்ள அனைத்து பாகன் கோவில்களையும் மூடிவிட கட்டளை பிறப்பித்தார்.
1594 – போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்தின் மன்னர் மூன்றாம் சிகிசுமண்டு சுவீடன் மன்னராக முடி சூடினார்.
1600 – பெருவின் உவாய்நப்பூட்டினா என்ற சுழல்வடிவ எரிமலை வெடித்தது.
1649 – இரண்டாம் குவாராராப்பசு சமர் ஆரம்பமானது. பிரேசிலில் இடச்சு குடியேற்றம் முடிவுக்கு வந்தது.
1674 – இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டதில் மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் போர் முடிவுக்கு வந்தது. இதன்படி இடச்சு குடியேற்றப் பகுதியான நியூ ஆம்ஸ்டார்டாம் இங்கிலாந்துக்குக் கொடுக்கப்பட்டு நியூ யோர்க் எனப் பெயர் மாற்றப்பட்டது.
1807 – அமெரிக்காவின் முன்னாள் துணை அரசுத்தலைவர் ஆரன் பர் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
1815 – கண்டிப் போர்கள்: கண்டியின் கடைசி மன்னர் விக்கிரம ராஜசிங்கன் பிரித்தானியரால் தூம்பறை என்ற இடத்தில் கைது செய்யப்பட்டார்.
1876 – யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் ஆங்கில இதழ் வெளியிடப்பட்டது.
1878 – கிராமபோனிற்கான காப்புரிமத்தைத் தாமசு ஆல்வா எடிசன் பெற்றார்.
1884 – 60-க்கும் மேற்பட்ட சுழல் காற்றுகள் ஐக்கிய அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளைத் தாக்கின.
1913 – பெத்ரோ லாசுகுராயின் மெக்சிக்கோவின் அரசுத்தலைவராக 45 நிமிட நேரம் மட்டும் பதவியில் இருந்தார். உலகில் மிகக் குறைந்த நேரம் பதவியில் இருந்த அரசுத்தலைவர் இவரே.
1915 – முதலாம் உலகப் போர்: கலிப்பொலி போர் ஆரம்பமாயிற்று. ஆங்கிலோ-பிரெஞ்சுக் கூட்டுப் படைகள் உதுமானியப் படைகள் மீது தாக்குதல் நடத்தின.
1942 – சப்பானிய அமெரிக்கர்களை இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்க அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் உத்தரவிட்டார்.
1942 – ஆத்திரேலியாவின் டார்வின் மீது சப்பானியப் போர் விமானங்கள் குண்டுகளை வீசியதில் 243 பேர் கொல்லப்பட்டனர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: தூனிசியாவில் கேசரைன் கணவாய் சண்டை ஆரம்பமானது.
1945 – இவோ ஜீமா சண்டை: 30,000 ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் சப்பானின் இவோ ஜீமா தீவில் தரையிறங்கினர்.
1948 – விடுதலைக்காகப் போராடும் தென்கிழக்காசியாவின் இளையோர் மற்றும் மாணவர் மாநாடு கல்கத்தாவில் ஆரம்பமானது.
1954 – கிரிமியாவை உருசிய சோவியத் குடியரசில் இருந்து உக்ரைன் சோவியத் குடியரசிற்கு கையளிக்க சோவியத் உயர்பீடம் முடிவெடுத்தது.
1959 – ஐக்கிய இராச்சியம் சைப்பிரசுக்கு விடுதலையை வழங்கியது.
1965 – தெற்கு வியட்நாமில் நியூவென் கானின் ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட இராணுவப் புரட்சி தோல்வியடைந்தது.
1978 – சைப்பிரசின் லனார்க்கா விமான நிலையத்தில் கடத்தப்பட்ட எகிப்திய விமானத்தை விடுவிக்கும் முயற்சியில் 15 எகிப்திய அதிரடிப் படையினர் கொல்லப்பட்டனர்.
1985 – வில்லியம் சுரோடர் செயற்கை இதயம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டு மருத்துவமனையில் இருந்து வெளியேறிய முதலாவது நபரானார்.
1985 – எசுப்பானியாவின் போயிங் விமானம் விபத்துக்குள்ளானதில் 148 பேர் கொல்லப்பட்டனர்.
1986 – சோவியத் ஒன்றியம் மீர் (Mir) விண்வெளி நிலையத்தை விண்ணுக்கு ஏவியது.
1986 – உடும்பன்குளம் படுகொலைகள்: அம்பாறையின் உடும்பன்குளத்தில் 80 தமிழ் விவசாயிகள் இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டனர்.
2002 – நாசாவின் மார்சு ஒடிசி விண்ணுளவி செவ்வாய்க் கோளின் மேற்பரப்பை வரைய ஆரம்பித்தது.
2003 – ஈரானில் இராணுவ விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 275 பேர் உயிரிழந்தனர்.
2006 – மெக்சிக்கோவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பில் 65 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
2012 – மெக்சிக்கோ சிறைச்சாலை வன்முறைகளில் 44 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்:
1473 – நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், போலந்து கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1543).
1630 – சிவாஜி, மராட்டியப் பேரரசர் (இ. 1680).
1821 – ஆகஸ்ட் சிலெய்ச்சர், செருமானிய மொழியியலாளர் (இ. 1868).
1855 – உ. வே. சாமிநாதையர் (தமிழ்த் தாத்தா), தமிழறிஞர் (இ. 1942).
1859 – சுவாந்தே அறீனியசு, நோபல் பரிசு பெற்ற சுவீடன் வேதியியலாளர் (இ. 1927).
1906 – மாதவ சதாசிவ கோல்வால்கர், இந்திய இந்துத்துவவாதி (இ. 1973).
1922 – தரம்பால், உத்தரப் பிரதேச காந்தியவாதி, வரலாற்றாளர் (இ. 2006).
1922 – பியான்ட் சிங், பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் (இ. 1995).
1930 – கே. விஸ்வநாத், இந்தியத் திரைப்பட இயக்குநர் (இ. 2023).
1941 – டேவிட் கிராஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்.
1947 – பாண்டு, தமிழகத் திரைப்பட நகைச்சுவை நடிகர் (இ. 2021).
1953 – கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் தெ கிர்ச்னர், அர்ச்செந்தீனாவின் முன்னாள் அரசுத்தலைவர்.
1960 – இளவரசர் ஆண்ட்ரூ, யார்க் கோமகன்.
1989 – சரண்யா மோகன், தென்னிந்திய நடிகை.
1993 – விக்டோரியா ஜஸ்டிஸ், அமெரிக்க நடிகை.
இறப்புகள்:
1553 – எராசுமசு இரீன்கோல்டு, செருமானிய வானியலாளர் (பி. 1511).
1897 – கார்ல் வியர்ஸ்ட்ராஸ், செருமானியக் கணிதவியலாளர் (பி. 1815).
1915 – கோபால கிருஷ்ண கோகலே, இந்திய விடுதலைப் போராட்டச் செயற்பாட்டாளர் (பி. 1866).
1916 – எர்னெசுட் மாக், ஆத்திரிய இயற்பியலாளர் (பி. 1838).
1937 – சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை, தமிழக நாதசுவர இசைக் கலைஞர் (பி. 1884).
1950 – சைமன் கிரகரி பெரேரா, இலங்கை வரலாற்றாளர் (பி. 1882).
1962 – ஜியார்ஜியோ பாபனிகொலாவு, மருத்துவர் (பி. 1883).
1981 – ஜி. நாகராஜன், தமிழகச் சிறுகதை எழுத்தாளர் (பி. 1929).
1988 – எஸ். வி. சகஸ்ரநாமம், தமிழக நாடக, திரைப்பட நடிகர் (பி. 1913).
1997 – டங் சியாவுபிங், சீன அரசியல்வாதி (பி. 1904).
2003 – ஜேம்ஸ் ஹார்டி, அமெரிக்க மருத்துவர் (பி. 1918).
2016 – உம்பெர்த்தோ எக்கோ, இத்தாலிய எழுத்தாளர் (பி. 1932).
2016 – ஹார்ப்பர் லீ, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1926).
2020 – திருவாளப்புத்தூர் டி. ஏ. கலியமூர்த்தி, தமிழகத் தவில் கலைஞர் (பி. 1948).
2023 – மயில்சாமி, தென்னிந்திய நகைச்சுவை நடிகர் (பி. 1965).
சிறப்பு நாள்:
பேரரசர் சிவாஜி ஜெயந்தி (மகாராட்டிரம்).
தகவல் உதவி: விக்கிப்பீடியா