பெப்ரவரி 18 (February 18) கிரிகோரியன் ஆண்டின் 49 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 316 (நெட்டாண்டுகளில் 317) நாட்கள் உள்ளன.
1229 – 6-வது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக்கு எருசலேம், நாசரேத்து மற்றும் பெத்லகேம் ஆகிய புனித நகரங்களை ஒப்பந்தம் மூலம் மீளப்பெற்றார்.
1478 – இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு மன்னருக்கு எதிராகச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கிளாரன்சு இளவரசர் ஜோர்ஜிற்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
1637 – எண்பதாண்டுப் போர்: எசுப்பானியக் கடற்படை மிக முக்கியமான 44 ஆங்கிலோ-டச்சு வணிகக் கப்பல்களை வழிமறித்துத் தாக்கி அழித்தது.
1861 – இரண்டாம் விக்டர் இம்மானுவேல் இத்தாலியின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1911 – உலகின் முதலாவது அதிகாரபூர்வமான வான்வழி கடிதப் போக்குவரத்து இந்தியாவின் அலகாபாத் நகரில் இருந்து நைனி நகருக்கு (10 கி.மீ.) வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
1930 – வானியலாளர் கிளைட் டோம்பா புகைப்பட ஆய்வுகள் மூலம் புளூட்டோ கோளைக் கண்டுபிடித்தார்.
1946 – மும்பைத் துறைமுகத்தில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராகக் கடற்படை மாலுமிகளின் பம்பாய் கலகம் வெடித்தது.
1948 – மகாத்மா காந்தியின் அஸ்தியின் ஒரு பகுதி இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது.
1965 – காம்பியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது.
1992 – கும்பகோணம் மகாமக குளம் நெரிசல்: முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா பங்கேற்ற நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் 60 பேர் வரை உயிரிழந்தனர்.
2007 – அரியானாவின் பானிப்பத் நகரில் ‘சம்ஜோதா எக்ஸ்பிரஸ்’ தொடருந்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 68 பேர் கொல்லப்பட்டனர்.
2014 – இராஜீவ் காந்தி கொலை வழக்கு: முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.