இன்றைய நாள்: பெப்ரவரி 2 - வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்
பெப்ரவரி 2 (February 2) கிரிகோரியன் ஆண்டின் 33 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 332 (நெட்டாண்டுகளில் 333) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்:
880 – பிரான்சின் மூன்றாம் லூயி மன்னர் நோர்சு இராணுவத்திடம் போரில் தோல்வியடைந்தார்.
962 – முதலாம் ஒட்டோ புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.
1141 – லிங்கன் போரில் இங்கிலாந்து மன்னர் இசுட்டீவன் தோற்கடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
1822 – பிரித்தானிய இலங்கையின் ஆளுநராக சேர் எட்வேர்ட் பஜெட் நியமிக்கப்பட்டார்.
1848 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் முடிவுக்கு வர ‘குவாடுலுப் கிடால்கோ’ உடன்படிக்கை எட்டப்பட்டது.
1848 – கலிபோர்னியாவில் தங்கம் தேடுவதற்காக சீனர்கள் முதல் முறையாக சான் பிரான்சிஸ்கோ வந்தடைந்தனர்.
1868 – சப்பானியப் பேரரசு ஆதரவுப் படைகள் ஒசாக்கா கோட்டையைக் கைப்பற்றி எரித்தனர்.
1878 – துருக்கியின் மீது கிரேக்கம் போரை அறிவித்தது.
1880 – அமெரிக்காவின் இந்தியானாவில் முதலாவது மின்சார வீதி விளக்குகள் நிறுவப்பட்டன.
1899 – ஆஸ்திரேலியாவின் தலைநகரை கன்பராவில் அமைப்பதென முதலமைச்சர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
1901 – பிரித்தானியாவின் விக்டோரியா மகாராணியின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
1920 – எஸ்தோனியா மற்றும் உருசியா இடையே அமைதி உடன்பாடு கையெழுத்தானது.
1943 – இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போரில் செருமானியப் படைகள் சோவியத் ஒன்றியத்திடம் சரணடைந்தன.
1946 – அங்கேரியக் குடியரசு அதிகாரபூர்வமாக அமைக்கப்பட்டது.
1971 – ஈரநிலங்களின் பாதுகாப்புக்கான பன்னாட்டு ‘ராம்சர் சாசனம்’ ஈரானில் கையெழுத்திடப்பட்டது.
1971 – உகாண்டாவின் இராணுவப் புரட்சிக்குப் பிறகு இடி அமீன் தன்னை அதிபராக அறிவித்துக் கொண்டார்.
1972 – டப்ளினில் இருந்த பிரித்தானிய தூதரகம் தேசியவாதிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.
1982 – சிரியாவின் ஹமா நகரில் நடந்த தாக்குதல்களில் சுமார் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.
1989 – ஒன்பது ஆண்டுகால முற்றுகைக்குப் பிறகு கடைசி உருசியப் படைகள் ஆப்கானித்தானிலிருந்து வெளியேறின.
1990 – நெல்சன் மண்டேலா சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் டி கிளர்க் அறிவித்தார்.
1998 – பிலிப்பீன்சில் நிகழ்ந்த விமான விபத்தில் 104 பேர் உயிரிழந்தனர்.
2005 – கனடிய அரசு ஒருபால் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கும் மசோதாவை அறிமுகப்படுத்தியது.
2012 – பப்புவா நியூ கினியில் பயணிகள் கப்பல் மூழ்கியதில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்:
1522 – லொடோவிக்கோ பெராரி, இத்தாலியக் கணிதவியலாளர்.
1859 – ஹேவ்லாக் எல்லிஸ், பிரித்தானிய உளநலவியலாளர்.
1871 – பா. வே. மாணிக்க நாயக்கர், அறிவியல் தமிழ் வளர்த்த அறிஞர்.
1882 – ஜேம்ஸ் ஜோய்ஸ், அயர்லாந்து எழுத்தாளர் மற்றும் கவிஞர்.
1896 – வெ. அ. சுந்தரம், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
1905 – அய்ன் ரேண்ட், உருசிய-அமெரிக்க எழுத்தாளர் மற்றும் மெய்யியலாளர்.
1913 – மசனோபு புக்குவோக்கா, சப்பானிய வேளாண் அறிஞர்.
1915 – குஷ்வந்த் சிங், புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர்.
1933 – தான் சுவே, பர்மாவின் முன்னாள் பிரதமர்.
1947 – சோ. கிருஷ்ணராஜா, ஈழத்து மெய்யியலாளர் மற்றும் கல்வியாளர்.
1977 – சக்கீரா, உலகப்புகழ் பெற்ற கொலம்பியப் பாடகி.
1985 – உபுல் தரங்க, இலங்கைத் துடுப்பாட்ட வீரர்.
இறப்புகள்:
1907 – திமீத்ரி மெண்டெலீவ், தனிம அட்டவணையைத் தொகுத்த உருசிய வேதியியலாளர்.
1960 – மு. இராகவையங்கார், தமிழகத் தமிழறிஞர் மற்றும் கவிஞர்.
1970 – பெர்ட்ரண்டு ரசல், நோபல் பரிசு பெற்ற மெய்யியலாளர் மற்றும் கணிதவியலாளர்.
2009 – கே. கோவிந்தராஜ், ஈழத்து மலையகத் தமிழ் எழுத்தாளர்.
2010 – கொச்சி ஹனீஃபா, தென்னிந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குநர்.
2013 – ப. சண்முகம், புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்.
2023 – கே. விஸ்வநாத், புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர்.
சிறப்பு நாள்:
உலக சதுப்பு நில நாள் (World Wetlands Day).
ஸ்டாலின்கிராட் சமர் வெற்றி நாள் (உருசியா).
கண்டுபிடிப்பாளர் நாள் (தாய்லாந்து).
தகவல் உதவி: விக்கிப்பீடியா