பெப்ரவரி 3 (February 3) கிரிகோரியன் ஆண்டின் 34 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 331 (நெட்டாண்டுகளில் 332) நாட்கள் உள்ளன.
1377 – இத்தாலியின் செசெனா நகரத்தில் பாப்பரசரின் படைகளினால் 2,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
1451 – சுல்தான் இரண்டாம் முகமது உதுமானியப் பேரரசராக முடிசூடினார்.
1488 – பார்த்தலோமியோ டயஸ் நன்னம்பிக்கை முனையைச் சுற்றி வந்து மொசெல் விரிகுடாவில் தரையிறங்கி, தூரதெற்குப் பகுதிக்குச் சென்ற முதல் ஐரோப்பியரானார்.
1509 – தியூ சமரில் உதுமானிய, குசராத்து கூட்டுப் படைகளைப் போர்த்துக்கீசக் கடற்படை வென்றது.
1661 – மராட்டியப் படைகள் பேரரசர் சிவாஜியின் தலைமையில் முகலாயப் படைகளைத் தோற்கடித்தன.
1690 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது நாணயத்தாள் மசாசூசெட்சில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1783 – ஐக்கிய அமெரிக்காவின் விடுதலையை எசுப்பானியா அதிகாரபூர்வமாக அங்கீகரித்தது.
1830 – உதுமானியப் பேரரசிடமிருந்து கிரேக்கம் முழுமையாக விடுதலை அடைவதற்கான உடன்பாடு இலண்டனில் எட்டப்பட்டது.
1870 – ஐக்கிய அமெரிக்காவில் அனைத்து இன ஆண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.
1894 – யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
1913 – ஐக்கிய அமெரிக்காவில் வருமான வரி அறவிடும் உரிமை நடுவண் அரசுக்கு வழங்கப்பட்டது.
1916 – கனடா ஓட்டாவாவில் நாடாளுமன்றத்தின் மைய வளாகக் கட்டடம் தீயினால் அழிந்தது.
1917 – முதலாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா செருமனியுடனான தூதரக உறவைத் துண்டித்தது.
1930 – வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி கவுலூனில் (ஆங்காங்) ஆரம்பிக்கப்பட்டது.
1931 – நியூசிலாந்தின் நேப்பியர் பகுதியில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் நிலநடுக்கத்தில் 258 பேர் உயிரிழந்தனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் சப்பானிடமிருந்து மார்சல் தீவுகளைக் கைப்பற்றின.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் 1,000 விமானங்கள் பெர்லின் மீது குண்டுகளை வீசின.
1966 – சோவியத் விண்கலம் லூனா 9 சந்திரனில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் என்ற சாதனையைப் படைத்தது.
1969 – யாசர் அரபாத் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (PLO) தலைவராகத் தெரிவானார்.
1972 – ஈரானைப் பெரும் பனிப்புயல் தாக்கியதில் அடுத்த ஏழு நாட்களில் சுமார் 4,000 பேர் உயிரிழந்தனர்.
1984 – சாலஞ்சர் விண்ணோடத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் விண்வெளியில் சுயாதீனமாக நடந்து சாதனை படைத்தனர்.
1998 – தம்பலகாமம் படுகொலைகள்: இலங்கையின் தம்பலகாமத்தில் சிறுவர்கள் உட்பட எட்டுத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2006 – எகிப்தியப் பயணிகள் கப்பல் செங்கடலில் மூழ்கியதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.