இலங்கை வவுனியா பல்கலைக்கழகம் (University of Vavuniya), அதன் மாணவர் விடுதிகளைப் பராமரிப்பதற்கும் நிருவகிப்பதற்கும் தகுதியுள்ள இலங்கைப் பிரஜைகளிடமிருந்து உப காப்பாளர் (Sub-Warden – Male) பதவிக்கான விண்ணப்பங்களைக் கோருகிறது. இது ஒரு தற்காலிக நியமனம் (Assignment Basis) என்ற போதிலும், பல்கலைக்கழக நிருவாக அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள விரும்பும் பட்டதாரிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். குறிப்பாக, விடுதி நிருவாகத்தில் அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை (Degree) பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரர்களின் வயது 45க்கு மிகாமல் இருக்க வேண்டும். தெரிவு செய்யப்படும் அதிகாரிகள் பல்கலைக்கழக விடுதிகளிலேயே தங்கியிருந்து (Full-time resident) கடமைகளைச் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.