வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் (SLFEA), தனது நிருவாகக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக பல்வேறு துறைகளில் நிலவும் வெற்றிடங்களுக்குத் தகுதியுள்ள இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்களைக் கோருகிறது. இது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முழுமையான அரசுக்கு சொந்தமான ஒரு நிறுவனமாகும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு ஒரு பாதுகாப்பான மற்றும் கௌரவமான தொழில் வாய்ப்பு இங்கு காத்திருக்கிறது.
சாதாரண முகாமைத்துவ உதவியாளர் முதல் பொது முகாமையாளர் வரையான பல்வேறு பதவிகளுக்கு இங்கு ஆட்கள் சேர்க்கப்படவுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு மற்றும் விமான பயணச்சீட்டு (Air Ticket) நடவடிக்கைகளில் அனுபவம் இருப்பது கூடுதல் தகுதியாகக் கருதப்படும். அரச சம்பளத் திட்டங்களுக்கு (HM 1-3, HM 1-1, MM 1-1, MA 2-1) இணங்க கௌரவமான சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.