Today in history March 7, 2026 Rawfan

இன்றைய நாள்: மார்ச் 7 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

மார்ச் 7 - வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

மார்ச்சு 7 (March 7) கிரிகோரியன் ஆண்டின் 66 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 67 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 299 நாட்கள் உள்ளன.

வரலாற்று நிகழ்வுகள்:

  • 161 – உரோமைப் பேரரசர் அந்தோனினசு பயசு இறந்தார். மார்க்கசு ஒரேலியசு, லூசியசு வெர்சசு ஆகியோர் புதிய பேரரசர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

  • 321 – உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் ஞாயிற்றுக்கிழமையை ஐரோப்பாவில் ஓய்வு நாளாக அறிவித்தார்.

  • 1573 – உதுமானியப் பேரரசுக்கும் வெனிசுக் குடியரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது; சைப்பிரசு உதுமானியரின் ஆளுமைக்குக் கீழ் வந்தது.

  • 1799 – நெப்போலியன் பொனபார்ட் பாலத்தீனத்தின் யோப்பா பகுதியைக் கைப்பற்றினான்.

  • 1814 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் உருசியர்களுக்கும் புருசியர்களுக்கும் எதிரான போரில் வெற்றி பெற்றான்.

  • 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஆர்கன்சாவில் அமெரிக்கப் படைகள் கூட்டமைப்புப் படையினரை வென்றனர்.

  • 1876அலெக்சாண்டர் கிரகாம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமம் பெற்றார்.

  • 1900 – கம்பியில்லா சமிக்கைகளை கரைப் பகுதிக்கு அனுப்பிய முதலாவது கப்பலாக செருமனியின் ‘கைசர் விலெம் டெர் குரொசி’ சாதனை படைத்தது.

  • 1902 – இரண்டாம் பூவர் போர்: தென்னாபிரிக்காவின் பூவர்கள் பிரித்தானியர்களுக்கு எதிரான கடைசிச் சமரில் வெற்றியீட்டினர்.

  • 1912 – தென் முனையைத் தாம் 1911 டிசம்பர் 14 இல் அடைந்ததாக ருவால் அமுன்சென் அறிவித்தார்.

  • 1914 – அல்பேனியாவின் இளவரசர் வில்லியம் மன்னராக முடிசூட அல்பேனியா வந்து சேர்ந்தார்.

  • 1918 – முதலாம் உலகப் போர்: பின்லாந்து செருமனியுடன் கூட்டுச் சேர்ந்தது.

  • 1936 – இரண்டாம் உலகப் போர்: ஒப்பந்த மீறலாக செருமனி ரைன்லாந்து பகுதியை ஆக்கிரமித்தது.

  • 1941 – செருமனியின் யு-47 நீர்மூழ்கி அதன் மாலுமிகளுடன் காணாமல் போனது.

  • 1951 – ஈரான் பிரதமர் அலி ரசுமாரா தெகுரான் பள்ளிவாசல் ஒன்றில் வைத்து இசுலாமிய அடிப்படைவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  • 1951 – கொரியப் போர்: கொரியாவில் ஐநாப் படைகள் சீனப் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர்.

  • 1965 – அலபாமா மாநிலத்தில் மனித உரிமை போராளிகள் மீது மாநிலக் காவல்துறை கடுமையான தாக்குதலை மேற்கொண்டது.

  • 1968 – வியட்நாம் போர்: அமெரிக்க, தென் வியட்நாம் படைகள் வியட்கொங் படைகளை வெளியேற்ற போர் நடவடிக்கையை ஆரம்பித்தன.

  • 1971சேக் முஜிபுர் ரகுமான் டாக்காவில் தனது வரலாற்றுப் புகழ் மிக்க உரையில், “இந்த முறை போராட்டம் நமது விடுதலைக்கானது,” என அறிவித்தார்.

  • 1986 – சாலஞ்சர் விண்ணோட விபத்து: பயணியர் அறை கடலடியில் கண்டுபிடிக்கப்பட்டது.

  • 1987 – தைவானிய இராணுவம் 19 வியட்நாமிய ஏதிலிகளைப் படுகொலை செய்தனர்.

  • 1989 – மக்கள் சீனக் குடியரசு திபெத்தின் லாசா பகுதியில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தது.

  • 1996 – பாலத்தீனத்தில் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.

  • 2006 – லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் வாரணாசியில் நடத்திய குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

  • 2007 – பிரபுக்கள் அவையின் உறுப்பினர்கள் 100% தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் என ஐக்கிய இராச்சிய மக்களவை வாக்களித்தது.

  • 2007 – இந்தோனேசியாவின் கருடா விமானம் விபத்துக்குள்ளானதில் 49 பேர் உயிரிழந்தனர்.

  • 2009 – வட அயர்லாந்தில் குடியரசு இராணுவப் போராளிகள் இரண்டு பிரித்தானியப் போர்வீரர்களை சுட்டுக் கொன்றனர்.

பிறப்புகள்:

  • 1765 – யோசெப் நிசிபோர் நியெப்சு, ஒளிப்படவியலைக் (Photography) கண்டுபிடித்த பிரான்சியர் (இ. 1833).

  • 1837 – என்றி டிரேப்பர், அமெரிக்க மருத்துவர், வானியலாளர் (இ. 1882).

  • 1853 – வே. அகிலேசபிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (இ. 1910).

  • 1866 – கல்லடி வேலுப்பிள்ளை, ஈழத்து எழுத்தாளர், ஆசுகவி (இ. 1944).

  • 1919எம். என். நம்பியார், தென்னிந்தியப் புகழ்பெற்ற திரைப்பட நடிகர் (இ. 2008).

  • 1938 – டேவிட் பால்டிமோர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியலாளர்.

  • 1949 – குலாம் நபி ஆசாத், இந்திய அரசியல்வாதி.

  • 1952விவியன் ரிச்சர்ட்ஸ், மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட ஜாம்பவான்.

  • 1960 – பரத்வாஜ், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்.

  • 1968 – ராஜூ சுந்தரம், இந்திய நடன இயக்குநர்.

  • 1970 – ரேச்சல் வய்ஸ், ஆங்கிலேய-அமெரிக்க நடிகை.

இறப்புகள்:

  • 1274 – புனித தாமஸ் அக்குவைனஸ், இத்தாலிய மெய்யியலாளர் (பி. 1225).

  • 1832இரண்டாம் சரபோஜி, தஞ்சாவூர் மராத்திய இராச்சிய மன்னர் (பி. 1777).

  • 1952 – பரமஹம்ச யோகானந்தர், இந்திய ஆன்மீகக் குரு (பி. 1893).

  • 1961 – கோவிந்த் வல்லப் பந்த், உத்தரப் பிரதேசத்தின் 2வது முதலமைச்சர் (பி. 1887).

  • 1990சுத்தானந்த பாரதியார், கவிஞர், தமிழிசைப் பாடலாசிரியர் (பி. 1897).

  • 1999 – இசுட்டான்லி குப்ரிக்கு, உலகப்புகழ் பெற்ற அமெரிக்க இயக்குநர் (பி. 1928).

  • 2020க. அன்பழகன் (பேராசிரியர்), தமிழக அரசியல்வாதி (பி. 1922).

சிறப்பு நாள்:

  • ஆசிரியர் நாள் (அல்பேனியா).


தகவல் உதவி: விக்கிப்பீடியா