மார்ச் 4 - வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்
வரலாற்று நிகழ்வுகள்:
மார்ச்சு 4 (March 4) கிரிகோரியன் ஆண்டின் 63 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 64 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 302 நாட்கள் உள்ளன.
51 – பின்னாளைய உரோமைப் பேரரசர் நீரோவிற்கு ‘இளைஞர்களின் தலைவன்’ என்ற பட்டம் கொடுக்கப்பட்டது.
1152 – பிரெடெரிக்கு பர்பரோசா செருமனியின் மன்னராக முடிசூடினார்.
1275 – சீன வானியலாளர்கள் முழுமையான சூரிய கிரகணத்தை அவதானித்தனர்.
1351 – சியாமின் மன்னராக முதலாம் இராமாதிபோதி முடி சூடினார்.
1461 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1493 – கடலோடி கொலம்பசு கரிபியன் தீவுகளுக்கான பயணத்தை முடித்துக்கொண்டு லிஸ்பன் திரும்பினார்.
1519 – எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் எர்னான் கோர்ட்டெசு மெக்சிகோவில் தரையிறங்கினார்.
1591 – முதலாவது ஆங்கிலேயர் ரால்ஃப் பிட்ச் என்பவர் இலங்கையில் தரையிறங்கினார்.
1665 – இரண்டாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: இங்கிலாந்து மன்னன் இரண்டாம் சார்ல்சு நெதர்லாந்து மீது போரை அறிவித்தான்.
1776 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்க விடுதலைப் படையின் பீரங்கித் தாக்குதலை அடுத்து, பிரித்தானியப் படைகள் பாஸ்டன் முற்றுகையைக் கைவிட்டன.
1789 – நியூயார்க்கில் அமெரிக்க சட்டமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெற்றது. அமெரிக்க அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1790 – பிரான்சு 83 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன.
1791 – பிரித்தானிய மக்களவையில் கனடாவை கீழ் கனடா, மேல் கனடா என இரண்டாகப் பிரிக்கும் சட்டமூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1791 – வெர்மான்ட் அமெரிக்காவின் 14-வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1804 – ஆத்திரேலியாவில் அயர்லாந்து குற்றவாளிகள் பிரித்தானிய குடியேற்ற அதிகாரிகள் மீது கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
1810 – பிரெஞ்சு இராணுவம் போர்த்துக்கல்லில் இருந்து வெளியேற்றப்பட்டது.
1813 – நெப்போலியனுடன் போரிட்ட உருசியப் படைகள் செருமனியின் பெர்லின் நகரை அடைந்தனர்.
1837 – சிகாகோ நகரம் அமைக்கப்பட்டது.
1877 – பியோத்தர் சாய்க்கொவ்ஸ்கியின் சுவான் லேக் (Swan Lake) பலே நடனம் மாஸ்கோவில் முதற் தடவையாக மேடையேறியது.
1882 – பிரித்தானியாவின் முதலாவது மின்சார டிராம் வண்டி கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது.
1890 – பிரித்தானியாவின் மிக நீளமான “போர்த் பாலம்” இசுக்கொட்லாந்தில் திறக்கப்பட்டது.
1899 – குயின்சுலாந்து குக்டவுன் என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 300 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
1908 – அமெரிக்காவின் கிளீவ்லாந்து நகரில் பாடசாலை ஒன்று தீப்பற்றியதில் 174 பேர் உயிரிழந்தனர்.
1931 – காந்தி-இர்வின் ஒப்பந்தம்: அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் உப்பை மக்கள் பயன்படுத்த அனுமதிப்பது தொடர்பாக மகாத்மா காந்தி மற்றும் ஆளுநர் எட்வர்ட் வூட் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
1941 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் லொஃபோர்ட்டன் தீவுகள் மீது கிளேமோர் நடவடிக்கையை ஆரம்பித்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து நாட்சி ஜெர்மனி மீது போரைத் தொடுத்தது.
1959 – ஐக்கிய அமெரிக்காவின் பயனியர் 4 உலகின் இரண்டாவது செயற்கைக் கோள் ஆனது.
1960 – பிரெஞ்சு சரக்குக் கப்பல் கியூபாவின் அவானா துறைமுகத்தில் வெடித்ததில் 100 பேர் உயிரிழந்தனர்.
1962 – கலிடோனியன் ஏர்வேய்சு விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 111 பேர் உயிரிழந்தனர்.
1966 – கனடாவின் பசிபிக் ஏர்லைன்சு விமானம் தோக்கியோ விமான நிலையத்தில் வெடித்ததில் 64 பேர் உயிரிழந்தனர்.
1970 – பிரான்சின் நீர்மூழ்கிக் கப்பல் யூரிடைசு கடலடியில் வெடித்ததில், அதிலிருந்த அனைத்து 547 பேரும் உயிரிழந்தனர்.
1976 – வடக்கு அயர்லாந்தின் அரசியலமைப்பு சபை கலைக்கப்பட்டது.
1977 – உருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,570 பேர் உயிரிழந்தனர்.
1980 – ராபர்ட் முகாபே சிம்பாப்வேயின் முதலாவது கருப்பின பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1985 – குருதிக் கொடைகள் அனைத்துக்கும் எயிட்சுக்கான பரிசோதனை நடத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அதிகாரம் அளித்தது.
1986 – சோவியத் வேகா 1 விண்கலம் ஏலியின் வாள்வெள்ளியின் படிமங்களை புவிக்கு அனுப்பியது.
1994 – கொலம்பியா 16 விண்ணோடம் ஏவப்பட்டது.
2001 – லண்டனில் பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னால் இடம்பெற்ற குண்டுவெடிப்பினால் 11 பேர் காயமடைந்தனர்.
2006 – பயனியர் 10 விண்கலத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடைசித் தொடர்பு தோல்வியில் முடிந்தது.
2009 – அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் சூடான் அரசுத்தலைவர் உமர் அல்-பஷீர் மீது பிடி ஆணை பிறப்பித்தது.
2012 – கொங்கோ தலைநகர் பிராசவில்லியில் வெடிபொருள் களஞ்சியம் வெடித்ததில் 250 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்:
1678 – ஆன்டோனியோ விவால்டி, இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1741).
1847 – கார்ல் பேயர், ஆத்திரிய வேதியியலாளர் (இ. 1904).
1856 – தாருலதா தத், இந்தியக் கவிஞர் (இ. 1877).
1902 – நீ. வ. அந்தோனி, ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர் (இ. 1971).
1904 – ஜார்ஜ் காமாவ், இயற்பியலாளர், அண்டவியலாளர் (இ. 1968).
1938 – அன்ரன் பாலசிங்கம், விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் (இ. 2006).
1947 – தெ. நித்தியகீர்த்தி, ஈழத்து-ஆத்திரேலிய எழுத்தாளர் (இ. 2009).
1980 – கமலினி முகர்ஜி, இந்தியத் திரைப்பட நடிகை.
1980 – ரோகன் போபண்ணா, இந்திய டென்னிசு வீரர்.
1986 – மைக் கிரிகேர், இன்ஸ்டகிராமை (Instagram) உருவாக்கியவர்.
இறப்புகள்:
1193 – சலாகுத்தீன், ஈராக்கிய-எகிப்திய சுல்தான் (பி. 1137).
1941 – லூட்விக் குயிட், நோபல் பரிசு பெற்ற செருமானிய செயற்பாட்டாளர் (பி. 1858).
1978 – நீலகண்ட பிரம்மச்சாரி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1889).
2011 – அர்ஜுன் சிங், இந்திய அரசியல்வாதி (பி. 1930).
2016 – பி. ஏ. சங்மா, இந்திய அரசியல்வாதி (பி. 1947).
2022 – சேன் வார்ன், ஆத்திரேலிய சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் (பி. 1969).
2022 – ரோட் மார்ஷ், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் (பி. 1947).
சிறப்பு நாள்:
தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் (இந்தியா).
தகவல் உதவி: விக்கிப்பீடியா