பெப்ரவரி 4 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

பெப்ரவரி 4 - வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

பெப்ரவரி 4 (February 4) கிரிகோரியன் ஆண்டின் 35 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 330 (நெட்டாண்டுகளில் 331) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்:

  • 211 – உரோமைப் பேரரசர் செப்டிமசு செவெரசு இயற்கை எய்தினார்.

  • 960 – சீனாவில் சொங் ஆட்சி (Song dynasty) ஆரம்பமானது; இது சுமார் மூன்று நூற்றாண்டுகள் நீடித்தது.

  • 1169 – சிசிலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

  • 1488 – பார்த்தலோமியோ டயஸ் இந்தியப் பெருங்கடலுக்கான முதலாவது ஐரோப்பியக் கடற்பயணத்தைத் தொடங்கினார்.

  • 1703 – தோக்கியோவில் 46 சாமுராய்கள் தமது தலைவரின் இறப்புக்காக சடங்குத் தற்கொலை (Seppuku) செய்து கொண்டனர்.

  • 1783 – அமெரிக்கா மீது தனது அனைத்துத் தாக்குதல்களையும் நிறுத்துவதாக ஐக்கிய இராச்சியம் அறிவித்தது.

  • 1789 – ஜார்ஜ் வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுத்தலைவராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

  • 1794 – முதல் பிரெஞ்சுக் குடியரசு முழுவதும் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.

  • 1797 – எக்குவதோரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 40,000 பேர் உயிரிழந்தனர்.

  • 1834 – இலங்கையின் ‘சிலோன் ஒப்சேர்வர்’ பத்திரிகை முதன்முதலில் வெளியிடப்பட்டது.

  • 1859 – எகிப்தில் 4-ம் நூற்றாண்டு விவிலியக் கையெழுத்துப்படி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

  • 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஆறு அமெரிக்க மாநிலங்கள் இணைந்து ‘அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பை’ உருவாக்கின.

  • 1899 – பிலிப்பைன்-அமெரிக்கப் போர் மணிலா சமருடன் தொடங்கியது.

  • 1936 – ரேடியம் E என்ற செயற்கைக் கதிரியக்கத் தனிமம் முதன்முதலாக உருவாக்கப்பட்டது.

  • 1938 – இட்லர் தன்னை செருமனியின் இராணுவ உயர் தளபதியாக அறிவித்தார்.

  • 1943 – இரண்டாம் உலகப் போர்: புகழ்பெற்ற ஸ்டாலின்கிராட் போர் முடிவுக்கு வந்தது.

  • 1945 – சர்ச்சில், ரூசவெல்ட், ஸ்டாலின் ஆகியோர் கிரிமியாவில் யால்ட்டா மாநாட்டில் சந்தித்தனர்.

  • 1948 – இலங்கை பிரித்தானியப் பொதுநலவாயத்தின் கீழ் ‘இலங்கை மேலாட்சி’ என்ற பெயரில் விடுதலை அடைந்தது.

  • 1957 – திருகோணமலையில் விடுதலை நாளைத் துக்க நாளாக அனுட்டித்த தமிழ் மக்கள் மீது காவல்துறையினர் சுட்டதில் திருமலை நடராசன் கொல்லப்பட்டார்.

  • 1961 – அங்கோலா விடுதலைப் போர் தொடங்கியது.

  • 1969 – யாசர் அரபாத் பாலத்தீன விடுதலை இயக்கத் தலைவராகப் பதவியேற்றார்.

  • 1976 – குவாத்தமாலா நிலநடுக்கத்தில் 22,000 பேர் உயிரிழந்தனர்.

  • 1978 – இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசுத்தலைவராக ஜே. ஆர். ஜெயவர்த்தனா பதவியேற்றார்.

  • 2003 – யுகோசுலாவியா அதிகாரபூர்வமாக ‘செர்பியாவும் மொண்டெனேகுரோவும்’ எனப் பெயர் மாற்றப்பட்டது.

  • 2004 – மார்க் சக்கர்பெர்க் ‘முகநூல்’ (Facebook) சமூக வலைத்தளத்தை ஆரம்பித்தார்.

  • 2007 – உருசிய-இந்திய தயாரிப்பான ‘பிரமாசு’ ஏவுகணை ஒரிசாவில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

பிறப்புகள்:

  • 1891 – அனந்தசயனம் அய்யங்கர், இரண்டாவது இந்திய மக்களவைத் தலைவர்.

  • 1906 – கிளைட் டோம்பா, புளூட்டோ கோளைக் கண்டுபிடித்த வானியலாளர்.

  • 1913 – றோசா பாக்ஸ், புகழ்பெற்ற அமெரிக்க மனித உரிமை செயற்பாட்டாளர்.

  • 1922 – பீம்சென் ஜோஷி, இந்துஸ்தானி இசைப் பாடகர்.

  • 1943 – பத்மா சுப்ரமணியம், தமிழக பரத நாட்டியக் கலைஞர்.

  • 1943 – கென் தாம்ப்சன், ‘B’ நிரலாக்க மொழியைக் கண்டுபிடித்தவர்.

  • 1948 – ராம் பரன் யாதவ், நேபாளத்தின் முதல் குடியரசுத் தலைவர்.

  • 1962 – ராஜசேகர், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்.

  • 1974 – ஊர்மிளா மடோண்த்கர், இந்திய நடிகை.

இறப்புகள்:

  • 1747 – வீரமாமுனிவர், புகழ்பெற்ற இத்தாலியத் தமிழறிஞர்.

  • 1894 – அடோல்ப் சக்ஸ், சாக்சபோன் கருவியைக் கண்டுபிடித்தவர்.

  • 1928 – என்ட்ரிக் லொரன்சு, நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர்.

  • 1974 – சத்தியேந்திர நாத் போசு, இந்திய இயற்பியலாளர் மற்றும் கணிதவியலாளர்.

  • 2015 – சின்னமணி, ஈழத்து வில்லிசைக் கலைஞர்.

  • 2023 – வாணி ஜெயராம், புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகி.

  • 2025 – புஷ்பலதா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை.

சிறப்பு நாள்:

  • விடுதலை நாள் (இலங்கை).

  • உலகப் புற்றுநோய் நாள் (World Cancer Day).

  • ஆயுதப் போராட்ட நாள் (அங்கோலா).


தகவல் உதவி: விக்கிப்பீடியா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!