பெப்ரவரி 18 - வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்
பெப்ரவரி 18 (February 18) கிரிகோரியன் ஆண்டின் 49 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 316 (நெட்டாண்டுகளில் 317) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்:
1229 – 6-வது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக்கு எருசலேம், நாசரேத்து மற்றும் பெத்லகேம் ஆகிய புனித நகரங்களை ஒப்பந்தம் மூலம் மீளப்பெற்றார்.
1478 – இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு மன்னருக்கு எதிராகச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கிளாரன்சு இளவரசர் ஜோர்ஜிற்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
1637 – எண்பதாண்டுப் போர்: எசுப்பானியக் கடற்படை மிக முக்கியமான 44 ஆங்கிலோ-டச்சு வணிகக் கப்பல்களை வழிமறித்துத் தாக்கி அழித்தது.
1861 – இரண்டாம் விக்டர் இம்மானுவேல் இத்தாலியின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1911 – உலகின் முதலாவது அதிகாரபூர்வமான வான்வழி கடிதப் போக்குவரத்து இந்தியாவின் அலகாபாத் நகரில் இருந்து நைனி நகருக்கு (10 கி.மீ.) வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
1930 – வானியலாளர் கிளைட் டோம்பா புகைப்பட ஆய்வுகள் மூலம் புளூட்டோ கோளைக் கண்டுபிடித்தார்.
1946 – மும்பைத் துறைமுகத்தில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராகக் கடற்படை மாலுமிகளின் பம்பாய் கலகம் வெடித்தது.
1948 – மகாத்மா காந்தியின் அஸ்தியின் ஒரு பகுதி இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது.
1965 – காம்பியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது.
1992 – கும்பகோணம் மகாமக குளம் நெரிசல்: முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா பங்கேற்ற நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் 60 பேர் வரை உயிரிழந்தனர்.
2007 – அரியானாவின் பானிப்பத் நகரில் ‘சம்ஜோதா எக்ஸ்பிரஸ்’ தொடருந்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 68 பேர் கொல்லப்பட்டனர்.
2014 – இராஜீவ் காந்தி கொலை வழக்கு: முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.
பிறப்புகள்:
1745 – வோல்ட்டா, நவீன மின்கலத்தைக் கண்டுபிடித்த உலகப்புகழ் பெற்ற இத்தாலிய இயற்பியலாளர்.
1836 – இராமகிருஷ்ணர் (பரமஹம்சர்), விவேகானந்தரின் குரு மற்றும் புகழ்பெற்ற இந்திய ஆன்மிகத் தலைவர்.
1860 – மா. சிங்காரவேலர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் தென்னிந்தியாவின் முதல் பொதுவுடைமைவாதி.
1926 – வ. ஐ. சுப்பிரமணியம், தமிழகத்தின் மிகச்சிறந்த மொழியியல் அறிஞர்களில் ஒருவர்.
1931 – டோனி மாரிசன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பெண் எழுத்தாளர்.
இறப்புகள்:
1294 – குப்லாய் கான், மங்கோலியப் பேரரசர்.
1546 – மார்ட்டின் லூதர், கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தின் (Protestantism) தந்தை என்று அழைக்கப்படுபவர்.
1564 – மைக்கலாஞ்சலோ, உலகப்புகழ் பெற்ற இத்தாலிய சிற்பி மற்றும் ஓவியர்.
1967 – ஜெ. இராபர்ட் ஓப்பன்ஹீமர், ‘அணு குண்டின் தந்தை’ என்று அழைக்கப்படும் அமெரிக்க இயற்பியலாளர்.
1990 – ரிச்சர்ட் டி சொய்சா, இலங்கை ஊடகவியலாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்.
சிறப்பு நாள்:
விடுதலை நாள் (காம்பியா).
தேசிய சனநாயக நாள் (நேபாளம்).
தகவல் உதவி: விக்கிப்பீடியா