மார்ச் 2 - வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

மார்ச்சு 2 (March 2) கிரிகோரியன் ஆண்டின் 61 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 62 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 304 நாட்கள் உள்ளன.

வரலாற்று நிகழ்வுகள்:

986 – பிரான்சின் மன்னராக ஐந்தாம் லூயி முடிசூடினார்.

1127 – பிளாண்டர்சு ஆட்சியாளர் முதலாம் சார்லசு கொல்லப்பட்டார்.

1498 – வாஸ்கோ ட காமா மொசாம்பிக் தீவை வந்தடைந்தார்.

1657 – தோக்கியோ நகரில் ஏடோ என்ற இடத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் மூன்று நாட்களில் 10,000-இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

1797 – இங்கிலாந்து வங்கி முதலாவது ஒரு-பவுண்டு, இரண்டு-பவுண்டு வங்கித்தாள்களை வெளியிட்டது.

1807 – அமெரிக்க சட்டமன்றம் புதிய அடிமைகளை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தடை விதித்தது.

1815 – கண்டி ஒப்பந்தம் மூலம் கண்டி இராச்சியம் பிரித்தானியருக்குக் கொடுக்கப்பட்டது; இலங்கை முழுவதும் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. விக்கிரம ராசசிங்கன் வேலூர்க் கோட்டைக்கு அனுப்பப்பட்டார்.

1823 – தமிழ் நாடு, திருப்பெரும்புதூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

1825 – கடைசிக் கரிபியன் கடல் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

1836 – டெக்சாஸ் குடியரசு மெக்சிக்கோவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1855 – இரண்டாம் அலெக்சாண்டர் உருசியாவின் பேரரசராக (சார்) முடி சூடினார்.

1859 – இரண்டு நாள் அடிமை விற்பனை ஐக்கிய அமெரிக்காவில் ஆரம்பமானது.

1882 – விக்டோரியா மகாராணி வின்ட்சர் நகரில் படுகொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.

1896 – எதியோப்பியா ஆட்வா என்ற இடத்தில் வைத்து இத்தாலியைத் தோற்கடித்தது. ஓர் ஆபிரிக்க நாடொன்றினால் குடியேற்ற நாடொன்றின் படைகள் தோற்கடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

1903 – பெண்களுக்கு மட்டுமான முதலாவது உணவு விடுதி, மார்த்தா வாசிங்டன் ஓட்டல், நியூயார்க் நகரில் திறக்கப்பட்டது.

1917 – புவேர்ட்டோ ரிக்கோ மக்களுக்கு ஐக்கிய அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டது.

1919 – முதலாவது பொதுவுடைமை அனைத்துலகம் மாஸ்கோவில் நடைபெற்றது.

1930 – மகாத்மா காந்தி உப்புச் சத்தியாகிரகம் ஆரம்பிப்பதற்காக தண்டியை நோக்கி 240 மைல் நடைப் பயணத்தைத் துவக்கினார்.

1935 – சியாம் மன்னர் பிரஜாதிபோக் முடி துறந்ததையடுத்து ஆனந்த மகிதோல் மன்னரானார்.

1939 – கர்தினால் இயூசினோ பசெலி பன்னிரண்டாம் பயசு என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1941 – இரண்டாம் உலகப் போர்: முதலாவது செருமனியப் படைகள் பல்கேரியாவினுள் நுழைந்தன.

1943 – இரண்டாம் உலகப் போர்: பிஸ்மார்க் கடல் சமரின் போது அமெரிக்க மற்றும் ஆத்திரேலியப் படைகள் சப்பானியக் கப்பல்களை தாக்கி மூழ்கடித்தன.

1946 – ஹோ சி மின் வட வியட்நாமின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1955 – கம்போடியா மன்னர் நொரடோம் சீயனூக் பதவி விலகினார். நொரடோம் சுராமரித் மன்னரானார்.

1956 – மொரோக்கோ பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1958 – தி.மு.க. (DMK) இந்திய மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.

1962 – பர்மாவில் இராணுவத் தளபதி நெ வின் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.

1969 – பிரான்சின் துலூஸ் நகரில் கான்கோர்டு விமானம் தனது முதலாவது சோதனைப் பறப்பில் ஈடுபட்டது.

1970 – ரொடீசியா பிரித்தானியாவிடம் இருந்த பிணைப்பைத் துண்டித்து தன்னைக் குடியரசாக அறிவித்தது.

1972 – நாசாவின் பயனியர் 10 விண்கலம் வெளிக் கோள்களை ஆராய்வதற்காக ஏவப்பட்டது.

1978 – விளாதிமிர் ரெமேக் விண்வெளிக்குச் சென்ற முதலாவது உருசியர் அல்லது அமெரிக்கர் அல்லாத விண்வெளி வீரர் என்ற பெயரைப் பெற்றார்.

1989 – அனைத்து குளோரோபுளோரோகார்பன்களின் (CFC) தயாரிப்பையும் இந்நூற்றாண்டுக்குள் தடை செய்ய 12 ஐரோப்பிய நாடுகள் உடன்பாட்டுக்கு வந்தன.

1990 – ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவராக நெல்சன் மண்டேலா தெரிவு செய்யப்பட்டார்.

1991 – இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன தானுந்துக் குண்டு ஒன்றின் மூலம் கொலை செய்யப்பட்டார்.

1992 – திரான்சுனிஸ்திரியா போர் ஆரம்பமானது.

1992 – ஆர்மீனியா, அசர்பைஜான் உள்ளிட்ட 9 நாடுகள் ஐநாவில் இணைந்தன.

1995 – யாகூ! (Yahoo!) நிறுவனமயப்படுத்தப்பட்டது.

1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவ நிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது.

2002 – அனகோண்டா நடவடிக்கை: ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை ஆரம்பமானது.

2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன.

பிறப்புகள்:

1876 – பன்னிரண்டாம் பயசு (திருத்தந்தை) (இ. 1958).

1896 – ரா. பி. சேதுப்பிள்ளை, புகழ்பெற்ற தமிழறிஞர் (இ. 1961).

1918 – ரஞ்சன், தமிழகத் திரைப்பட நடிகர் (இ. 1983).

1920 – கே. கணேஷ், இலங்கை மலையக எழுத்தாளர் (இ. 2004).

1923 – சுந்தரிபாய், தமிழக நகைச்சுவை நடிகை.

1931 – மிக்கைல் கொர்பச்சோவ், சோவியத் ஒன்றியத்தின் கடைசி அதிபர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 2022).

1935 – குன்னக்குடி வைத்தியநாதன், பிரபல வயலின் இசைக்கலைஞர் (இ. 2008).

1949 – தினேஷ் குணவர்தன, இலங்கை அரசியல்வாதி.

1963 – வித்தியாசாகர், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்.

1968 – டேனியல் கிரெய்க் (ஜேம்ஸ் பாண்ட்), புகழ்பெற்ற நடிகர்.

1972 – சுபாஸ்கரன் அல்லிராஜா (Lyca Productions), தொழிலதிபர்.

1981 – தர்சன் தர்மராஜ், இலங்கைத் திரைப்பட, நாடக நடிகர் (இ. 2022).

இறப்புகள்:

274 – மானி, பாரசீக இறைவாக்கினர் (பி. 216).

1930 – டி. எச். லாரன்ஸ், ஆங்கிலேய புதின எழுத்தாளர், கவிஞர் (பி. 1885).

1939 – ஹாவர்ட் கார்ட்டர், துட்டன்காமன் கல்லறையைக் கண்டுபிடித்த தொல்லியலாளர் (பி. 1874).

1949 – சரோஜினி நாயுடு, இந்தியாவின் நைட்டிங்கேல், முதல் பெண் ஆளுநர் (பி. 1879).

1991 – ரஞ்சன் விஜேரத்ன, இலங்கை அரசியல்வாதி (பி. 1931).

2016 – இரா. செல்வக்கணபதி, தமிழறிஞர், பேச்சாளர் (பி. 1940).

சிறப்பு நாள்:

வான்படை நாள் (இலங்கை).

தகவல் உதவி: விக்கிப்பீடியா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!