உதவிக் கணக்காளர் (Assistant Accountant) வேலைவாய்ப்பு
வரையறுக்கப்பட்ட கல்விச் சேவைகள் ஊழியர்களின் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் வழங்கும் சங்கத்தின் (Education Co-operative Society) தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகங்களில் நிரந்தர அடிப்படையில் பணியாற்றுவதற்கு உதவிக் கணக்காளர் (Assistant Accountant) பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. முழு விபரம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பின்வருமாறு
| பிரிவு | விபரங்கள் |
|---|---|
| நிறுவனம் | கல்விச் சேவைகள் ஊழியர்களின் கூட்டுறவுச் சங்கம் (EDCS) |
| பதவியின் பெயர் | உதவிக் கணக்காளர் (நிறைவேற்றுச் சேவைப் பிரிவு E.3.2 – III தரம்) |
| கல்வித் தகைமைகள் |
1. வர்த்தக/நிதி முகாமைத்துவப் பட்டம் + 02 வருட அனுபவம் (அல்லது) 2. SLIATE கணக்கியல் டிப்ளோமா + 02 வருட அனுபவம் (அல்லது) 3. CASL / CIMA (2nd Level) சித்தி + 02 வருட அனுபவம் (அல்லது) 4. AAT இறுதி மட்டம் சித்தி + 05 வருட அனுபவம் |
| சம்பளம் | அடிப்படை 48,400 + வாழ்க்கைச் செலவு மற்றும் அரச கொடுப்பனவுகள் |
| விண்ணப்பிக்கும் முறை | சுயவிபரக்கோவை (CV) மற்றும் சான்றிதழ்களின் பிரதிகளுடன் “பதிவுத் தபாலில்” அனுப்ப வேண்டும். |
| முடிவுத் திகதி | 2026.03.14 |
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தமது கல்வி மற்றும் தொழில் தகைமைகளை உள்ளடக்கிய சுயவிபரக்கோவை (CV) மற்றும் சான்றிதழ்களின் நிழற்பிரதிகளை இணைக்க வேண்டும்.
பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டையின் (NIC) பிரதி கண்டிப்பாக இணைக்கப்படல் வேண்டும்.
விண்ணப்பங்களை “பதிவுத் தபால்” (Registered Post) மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.
கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “உதவிக் கணக்காளர்” (Assistant Accountant) எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: பிரதான தலைவர், வரையறுக்கப்பட்ட கல்விச் சேவைகள் ஊழியர்களின் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் வழங்கும் சங்கம் (EDCS), இலக்கம் 294, காலி வீதி, கொழும்பு 03.
📅 விண்ணப்பிக்க வேண்டிய இறுதித் திகதி: 2026.03.14