பெப்ரவரி 24 - வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்
பெப்ரவரி 24 (February 24) கிரிகோரியன் ஆண்டின் 55 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 310 (நெட்டாண்டுகளில் 311) நாட்கள் உள்ளன.
வரலாற்று நிகழ்வுகள்:
1386 – நேப்பில்சு மற்றும் அங்கேரி மன்னன் மூன்றாம் சார்லசு கொல்லப்பட்டான்.
1525 – எசுப்பானிய-ஆசுத்திரிய இராணுவம் பாவியா நகர சமரில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தது.
1582 – கிரெகொரியின் நாட்காட்டி (Gregorian calendar) திருத்தந்தை 13வது கிரெகோரியினால் ஆணை ஓலை மூலம் அறிவிக்கப்பட்டது.
1739 – கர்னால் சமரில், ஈரானிய ஆட்சியாளர் நாதிர் ஷா இந்திய முகலாயப் பேரரசர் முகம்மது ஷாவின் படைகளைத் தோற்கடித்தார்.
1809 – இலண்டன் ரோயல் நாடக அரங்கு தீக்கிரையானது.
1822 – உலகின் முதலாவது சுவாமிநாராயண் கோயில் அகமதாபாத்தில் திறக்கப்பட்டது.
1826 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பர்மா மன்னர் ஆவாவுக்கும் இடையில் ஏற்பட்ட யாந்தபு உடன்பாட்டினை அடுத்து முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர் முடிவுக்கு வந்தது.
1848 – பிரான்சின் லூயி-பிலிப் மன்னர் முடிதுறந்தார்.
1854 – முதற்தடவையாக சிவப்புப் பென்னி என அழைக்கப்படும் துளைகளிடப்பட்ட அஞ்சல் தலை பிரித்தானியாவில் வெளியிடப்பட்டது.
1863 – அரிசோனா ஐக்கிய அமெரிக்காவின் பிராந்தியமாக அமைக்கப்பட்டது.
1875 – ஆத்திரேலியக் கிழக்குக் கரையில் கோத்தன்பேர்க் என்ற கப்பல் பவளத்திட்டில் மோதி முழ்கியதில் 102 பேர் உயிரிழந்தனர்.
1881 – இலி ஆற்றுப் படுகையின் கிழக்குப் பகுதியை சீனாவுக்குக் கையளிக்கும் உடன்பாடு சீனாவுக்கும் உருசியாவுக்கும் இடையில் எட்டப்பட்டது.
1895 – கியூபாவில் புரட்சி வெடித்ததை அடுத்து விடுதலைக்கான கியூபா போர் ஆரம்பமானது.
1916 – கொரிய ஆளுநர் தொழு நோயாளிகளுக்கான மருத்துவமனையை ஆரம்பித்தார்.
1918 – எஸ்தோனியா உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1920 – நாட்சி கட்சி (Nazi Party) ஆரம்பிக்கப்பட்டது.
1945 – எகிப்தியப் பிரதமர் அகமது மாகிர் பாசா நாடாளுமன்றத்தில் வைத்துக் கொல்லப்பட்டார்.
1949 – 1948 அரபு – இசுரேல் போர்: போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.
1969 – மரைனர் 6 விண்கலம் செவ்வாய் கோளுக்கு ஏவப்பட்டது.
1971 – பா. கா. மூக்கைய்யாத்தேவர் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1981 – கிரேக்கத்தில் நிகழ்ந்த 6.7 ரிக்டர் நிலநடுக்கத்தினால் 16 பேர் உயிரிழந்தனர்.
1984 – லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஆரம்பப் பள்ளி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
1989 – யுனைட்டட் ஏர்லைன்சு விமானத்தின் சரக்கு வழிக் கதவு திடீரெனத் திறந்ததில் ஒன்பது பயணிகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
1991 – வளைகுடாப் போர் ஆரம்பம்: தரைப் படைகள் சவூதி அரேபிய எல்லையைக் கடந்து ஈராக்கை அடைந்தன.
1999 – கிழக்கு சீனாவில் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 61 பேர் உயிரிழந்தனர்.
2004 – வடக்கு மொரோக்கோவில் 6.3 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 628 பேர் உயிரிழந்தனர்.
2006 – பிலிப்பீன்சு அரசுத்தலைவர் குளோரியா மகபகல்-அர்ரொயோ நாட்டில் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்தார்.
2007 – மணிப்பூர் தமெல்லாங் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
2008 – 32 ஆண்டுகளாக கியூபாவின் அரசுத்தலைவராக இருந்த பிடல் காஸ்ட்ரோ அப்பதவியில் இருந்து இளைப்பாறினார்.
2009 – வாட்சப் (WhatsApp) கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது.
2016 – கனடாவில் டாரா ஏர் விமானம் ஒன்று வீழ்ந்ததில், 23 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்:
1500 – ஐந்தாம் சார்லசு, புனித உரோமைப் பேரரசர் (இ. 1558).
1670 – சத்திரபதி இராஜாராம், மராட்டியப் பேரரசர் (இ. 1700).
1886 – ஆர். முத்தையா, தமிழ் தட்டச்சுப் பொறியை உருவாக்கிய இலங்கை-சிங்கப்பூர்த் தமிழர்.
1920 – நானம்மாள், இந்திய யோகக்கலைப் பயிற்சியாளர் (இ. 2019).
1928 – ஏ. பி. நாகராசன், தமிழகத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1977).
1942 – காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவாக், இந்திய மெய்யியலாளர்.
1948 – செல்வி ஜெ. செயலலிதா, தமிழக முன்னாள் முதலமைச்சர், புகழ்பெற்ற நடிகை (இ. 2016).
1955 – ஸ்டீவ் ஜொப்ஸ், ஆப்பிள் (Apple) நிறுவனத்தை ஆரம்பித்தவர் (இ. 2011).
1967 – பிறையன் சிமித், நோபல் பரிசு பெற்ற ஆத்திரேலிய இயற்பியலாளர்.
1977 – பிளாய்ட் மேவெதர், அமெரிக்க குத்துச்சண்டை வீரர்.
இறப்புகள்:
1810 – என்றி கேவண்டிசு, புகழ்பெற்ற இயற்பியலாளர் மற்றும் வேதியியலாளர் (பி. 1731).
1815 – ராபர்ட் ஃபுல்டன், அமெரிக்கப் பொறியாளர் (பி. 1765).
1969 – பா. தாவூத்ஷா, தமிழகப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1885).
1986 – ருக்மிணி தேவி அருண்டேல், கலாசேத்திரா நடனப் பள்ளியினை நிறுவியவர் (பி. 1904).
2001 – கிளாடு சேனன், தகவல் கோட்பாட்டின் தந்தை (பி. 1916).
2011 – அனந்து பை, இந்திய எழுத்தாளர் (பி. 1929).
2018 – ஸ்ரீதேவி, இந்தியத் திரைப்படப் புகழ்மிக்க நடிகை (பி. 1963).
சிறப்பு நாள்:
விடுதலை நாள் (எசுத்தோனியா).
தகவல் உதவி: விக்கிப்பீடியா