பெப்ரவரி 23 - வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

பெப்ரவரி 23 (February 23) கிரிகோரியன் ஆண்டின் 54 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 311 (நெட்டாண்டுகளில் 312) நாட்கள் உள்ளன.

வரலாற்று நிகழ்வுகள்:

  • 532 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் ஜஸ்டினியன் கான்ஸ்டண்டினோபிலில் புதிய மரபுவழித் திருச்சபை பசிலிக்கா ஏகியா சோபியாவைக் (Hagia Sophia) கட்ட உத்தரவிட்டார்.

  • 1455 – முதலாவது மேற்கத்திய நூல் கூட்டன்பர்கு விவிலியம் நகரும் அச்சு மூலம் அச்சிடப்பட்டது.

  • 1820 – பிரித்தானிய அமைச்சர்கள் அனைவரையும் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட திட்டம் வெளிச்சத்திற்கு வந்தது.

  • 1836 – அலாமா போருக்கு முன்னோடியான அலாமா முற்றுகை அமெரிக்காவின் சான் அந்தோனியோ நகரில் ஆரம்பமானது.

  • 1847 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: புவெனா விஸ்டா நகரில் அமெரிக்கப் படைகள் மெக்சிக்கோ படைகளைத் தோற்கடித்தன.

  • 1854 – ஆரஞ்சு இராச்சியத்தின் அதிகாரபூர்வமான விடுதலை அறிவிக்கப்பட்டது.

  • 1861 – ஆபிரகாம் லிங்கன் தனக்கு எதிரான படுகொலை முயற்சியை முறியடித்த பின்னர், வாசிங்டன் டி. சி.க்கு இரகசியமாக வந்து சேர்ந்தார்.

  • 1870மிசிசிப்பியில் இராணுவ ஆட்சி முடிவடைந்து அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைக்கப்பட்டது.

  • 1885 – சீன-பிரெஞ்சுப் போர்: பிரெஞ்சு இராணுவம் வியட்நாமில் டொங் டாங் சமரில் முக்கிய வெற்றியைப் பெற்றது.

  • 1886 – சார்லஸ் மார்ட்டின் ஹால் முதலாவது செயற்கை அலுமினியத்தை உருவாக்கினார்.

  • 1887 – பிரெஞ்சு ரிவியேராவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,000 பேர் உயிரிழந்தனர்.

  • 1903 – கியூபா தனது குவாண்டானமோ விரிகுடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு முடிவற்ற குத்தகைக்குக் கொடுத்தது.

  • 1904 – ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் உரிமையை 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்குப் பெற்றுக் கொண்டது.

  • 1905 – சிகாகோவில் ரோட்டரி (Rotary) அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

  • 1917 – சென் பீட்டர்ஸ்பேர்க்கில் பெப்ரவரிப் புரட்சி ஆரம்பமானது.

  • 1927 – செருமானிய இயற்பியலாளர் வெர்னர் ஐசன்பர்க் தனது அறுதியின்மைக் கொள்கை (Uncertainty Principle) பற்றி முதற் தடவையாக வெளியிட்டார்.

  • 1934 – மூன்றாம் லியோபோல்ட் பெல்சியத்தின் மன்னராக முடிசூடினார்.

  • 1941புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டுப் பிரித்தெடுக்கப்பட்டது.

  • 1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய நீர்மூழ்கிகள் கலிபோர்னியாவின் கரையோரப் பகுதிகளில் தாக்குதல் நடத்தின.

  • 1943 – அயர்லாந்தில் அனாதை மடம் தீப்பற்றியதில் 35 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

  • 1944 – சோவியத் ஒன்றியம் செச்சினிய மற்றும் இங்குசேத்திய மக்களைக் கட்டாயமாக நாடு கடத்த ஆரம்பித்தது.

  • 1945 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சின் தலைநகர் மணிலா சப்பானியரிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.

  • 1947 – சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (ISO) ஆரம்பிக்கப்பட்டது.

  • 1954 – போலியோவிற்கு எதிரான சால்க் தடுப்பு மருந்து ஏற்றும் திட்டம் அமெரிக்காவில் ஆரம்பமானது.

  • 1966 – சிரியாவில் இராணுவப் புரட்சி மூலம் அரசு கவிழ்க்கப்பட்டது.

  • 1987 – சுப்பர்நோவா “1987ஏ” தென்பட்டது.

  • 1991 – தாய்லாந்தில் இராணுவப் புரட்சி மூலம் பிரதமர் சட்டிச்சாய் சூன்ஹாவென் பதவி நீக்கப்பட்டார்.

  • 1997 – உருசியாவின் மீர் விண்வெளி நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டது.

  • 2008 – அமெரிக்க வான்படையின் பி-2 ஸ்பிரிட் குண்டுவீச்சு விமானம் குவாமில் வீழ்ந்து நொறுங்கியது.

பிறப்புகள்:

  • 1633 – சாமுவேல் பெப்பீசு, பிரித்தானியக் கடற்படைத் தளபதி (இ. 1703).

  • 1685 – ஜார்ஜ் ஃபிரிடெரிக் ஹாண்டெல், இசைக்கலைஞர் (இ. 1759).

  • 1868 – டபிள்யூ. இ. பி. டுபோய்ஸ், அமெரிக்க வரலாற்றாளர் (இ. 1963).

  • 1883 – கார்ல் ஜாஸ்பெர்ஸ், மெய்யியலாளர் (இ. 1969).

  • 1903 – ஜுலியஸ் பூசிக், செக்கோசுலோவாக்கிய ஊடகவியலாளர் (இ. 1943).

  • 1929 – சி. வடிவேலு, மலேசியத் தமிழ் எழுத்தாளர் (இ. 1992).

  • 1954ராஜினி திராணகம, இலங்கை மனிதவுரிமைச் செயற்பாட்டாளர், மருத்துவர் (இ. 1989).

  • 1965 – மைக்கேல் டெல், அமெரிக்கத் தொழிலதிபர் (Dell Technologies).

  • 1983 – பாக்யஸ்ரீ, இந்திய நடிகை.

  • 1983 – சக்தி வாசு, தமிழக நடிகர்.

இறப்புகள்:

  • 1503அன்னமாச்சாரியார், புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகர் (பி. 1408).

  • 1719சீகன் பால்க், செருமானிய மதகுரு (பி. 1682).

  • 1821ஜோன் கீற்ஸ், உலகப்புகழ் பெற்ற ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1795).

  • 1848 – ஜான் குவின்சி ஆடம்ஸ், அமெரிக்காவின் 6வது அரசுத்தலைவர் (பி. 1767).

  • 1855கார்ல் ஃப்ரெடெரிக் காஸ், கணித மேதை (பி. 1777).

  • 1955 – மதுரை வைத்தியநாத ஐயர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1890).

  • 1969 – மதுபாலா, புகழ்பெற்ற இந்திய நடிகை (பி. 1933).

  • 1977 – ஈ. வெ. கி. சம்பத், தமிழக அரசியல்வாதி (பி. 1926).

  • 2015 – ஆர். சி. சக்தி, இந்தியத் திரைப்பட இயக்குநர்.

சிறப்பு நாள்:

  • குடியரசு நாள் (கயானா).


தகவல் உதவி: விக்கிப்பீடியா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!