ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான வினா-விடைகள் (2026) – 08

ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான வினா-விடைகள் (2026) - 08

  1. இலங்கையில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீடானது எத்தனையாவது கணிப்பீடாகும்?
    விடை: 15வது

  2. இறுதியாக மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீட்டின் படி இலங்கையிலுள்ள மொத்த சனத்தொகை யாது?
    விடை: 21 781 800 / 21.78 மில்லியன்

  3. இறுதியாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி ஆண், பெண் சதவீகிதம் யாது?
    விடை: பெண்கள் – 51.7%, ஆண்கள் – 48.3%

  4. இறுதியாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி சனத்தொகை கூடிய மற்றும் குறைந்த மாவட்டங்கள் முறையே யாவை?
    விடை: கம்பஹா (கூடிய), முல்லைத்தீவு (குறைந்த)

  5. இறுதியாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் எவ்வயதுப் பிரிவினர் சனத்தொகையில் அதிக சதவீதம் காணப்படுகின்றனர்?
    விடை: 15-59 வயதுக்கிடைப்பட்டோர் (61.3%)

  6. இறுதியாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி முதல் நிலையிலுள்ள பௌத்த சமயத்தினரின் சதவீதம் யாது?
    விடை: 69.8%

  7. இலங்கையிலுள்ள மிகப்பழமையான திணைக்களம் எது?
    விடை: நில அளவைத் திணைக்களம் (1800 ஆகஸ்ட் 2 இல் நிறுவப்பட்டது)

  8. இறுதியாக வெளியிடப்பட்ட மத்திய வங்கி அறிக்கையின் படி பிறப்பு வீதம் யாது?
    விடை: 1000 ஆட்களுக்கு 10.1

  9. இறுதியாக வெளியிடப்பட்ட மத்திய வங்கி அறிக்கையின் படி வேலையின்மை வீதம் யாது?
    விடை: 4.4%

  10. இறுதியாக வெளியிடப்பட்ட மத்திய வங்கி அறிக்கையின் படி குடித்தொகை அடர்த்தி யாது?
    விடை: 1 சதுர கிலோமீற்றருக்கு 352

  11. இறுதியாக வெளியிடப்பட்ட மத்திய வங்கி அறிக்கையின் படி மொத்த உள்நாட்டு உற்பத்தி யாது?
    விடை: 5.0%

  12. மத்திய வங்கி அறிக்கையின் படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்வியின் மீதான அரசின் செலவு யாது?
    விடை: 1.6%

  13. இலங்கையின் மொத்த நிலப்பரப்பு மற்றும் மொத்தப்பரப்பு யாது?
    விடை: நிலப்பரப்பு: 62,302 சதுர கி.மீ, மொத்தப்பரப்பு: 67,240 சதுர கி.மீ

  14. இலங்கையின் தூரம் (மேற்கு-கிழக்கு மற்றும் வடக்கு-தெற்கு) யாது?
    விடை: கொழும்பு – சங்கமன்கந்தை (மே-கி): 241 கி.மீ, பருத்தித்துறை – தேவேந்திரமுனை (வ-தெ): 433 கி.மீ

  15. 2025 மனித அபிவிருத்திச் சுட்டெண்ணில் 193 நாடுகளிடையே இலங்கையின் நிலை என்ன?
    விடை: 78வது இடம் (0.780)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!