1327 – பதின்ம வயது மூன்றாம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
1329 – பொகேமியா மன்னர் ஜான் லித்துவேனியாவில் முக்கிய கோட்டையைக் கைப்பற்றி, அதன் 6,000 பாதுகாப்புப் படையினரைத் திருமுழுக்கிட்டான்.
1662 – சீனத் தளபதி கோசிங்கா ஒன்பது மாத முற்றுகைக்குப் பிறகு தைவான் தீவைக் கைப்பற்றினான்.
1788 – ஐசாக் பிறிக்ஸ் மற்றும் வில்லியம் லோங்ஸ்ட்ரீட் ஆகியோர் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றனர்.
1793 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ஐக்கிய இராச்சியம் மற்றும் நெதர்லாந்து மீது பிரான்சு போரைத் தொடுத்தது.
1814 – பிலிப்பீன்சில் மயோன் எரிமலை வெடித்ததில் 1,200 பேர் உயிரிழந்தனர்.
1832 – ஆசியாவின் முதலாவது அஞ்சல் வண்டி சேவை (Mail-coach) இலங்கையில் கண்டியில் ஆரம்பமாகியது.
1835 – மொரிசியசில் அடிமை வணிகம் ஒழிக்கப்பட்டது.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: டெக்சசு மாநிலம் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து விலகியது.
1880 – யாழ்ப்பாணத்திற்கும் பருத்தித்துறைக்கும் இடையில் முதலாவது தபால் வண்டி சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1884 – புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் (Oxford English Dictionary) முதற் பதிப்பு வெளியானது.
1893 – தாமசு ஆல்வா எடிசன் தனது முதலாவது அசையும் படத்துக்கான படப்பிடிப்பகத்தை (Movie studio) நியூ ஜேர்சியில் கட்டி முடித்தார்.
1908 – போர்த்துக்கல் மன்னன் முதலாம் கார்லோசு மற்றும் இளவரசர் லூயிஸ் பிலிப் ஆகியோர் லிஸ்பனில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1918 – உருசியா ஜூலியன் நாட்காட்டியிலிருந்து கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
1942 – அமெரிக்க அரசின் அதிகாரபூர்வ வானொலியான ‘வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா’ (Voice of America) தனது ஒலிபரப்பைத் தொடங்கியது.
1946 – நோர்வேயின் திறிகுவே இலீ ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது பொதுச் செயலராகத் தெரிவு செய்யப்பட்டார்.
1946 – அங்கேரி மன்னராட்சியை நீக்கிவிட்டு குடியரசாகத் தன்னை அறிவித்துக் கொண்டது.
1979 – 15 ஆண்டுகள் நாடு கடந்த நிலையில் வாழ்ந்த ஈரானின் மதத்தலைவர் அயத்தொல்லா கொமெய்னி தெகுரான் திரும்பினார்.
1992 – போபால் பேரழிவு: யூனியன் கார்பைட்டின் முன்னாள் முதன்மைச் செயலர் வாரன் அண்டர்சன் தலைமறைவான குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது.
1998 – கிளிநொச்சி நகரம் மீது விடுதலைப் புலிகளின் தாக்குதல் (கிளிநொச்சித் தாக்குதல், 1998) ஆரம்பமாகியது.
2003 – கொலம்பியா விண்ணோடம் பூமியின் வளிமண்டலத்தினுள் வெடித்துச் சிதறியதில் கல்பனா சாவ்லா உட்பட ஏழு விண்வெளி வீரர்கள் உயிரிழந்தனர்.
2005 – நேபாள மன்னர் ஞானேந்திரா இராணுவப் புரட்சி மூலம் நாடாளுமன்றத்தைக் கலைத்து ஆட்சியைத் தன்வசப்படுத்தினார்.
2021 – மியான்மர் இராணுவப் புரட்சியில் ஆங் சான் சூச்சி கைது செய்யப்பட்டார்; இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
1873 – பம்மல் சம்பந்த முதலியார், தமிழ் நாடகத் தந்தை.
1894 – ஜான் போர்டு, புகழ்பெற்ற அமெரிக்க இயக்குநர்.
1901 – கிளார்க் கேபிள், அமெரிக்க நடிகர்.
1905 – எமீலியோ சேக்ரே, நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர்.
1931 – போரிஸ் யெல்ட்சின், உருசியாவின் முதல் அரசுத்தலைவர்.
1936 – பொ. ம. இராசமணி, தமிழகத் தமிழறிஞர்.
1957 – ஜாக்கி செராப், இந்தியத் திரைப்பட நடிகர்.
1982 – सोயிப் மாலிக், பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர்.
1985 – கோபிகா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை.