இன்றைய நாள்: சனவரி 29 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

சனவரி 29 (January 29) கிரிகோரியன் ஆண்டின் 29 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 336 (நெட்டாண்டுகளில் 337) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்:

  • 661 – அலீயின் இறப்பைத் தொடர்ந்து ராசிதீன் கலீபாக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
  • 904 – மூன்றாம் செருசியசு திருத்தந்தை பதவியைக் கைப்பற்றி புனிதப்படுத்தப்பட்டார்.
  • 946 – அல்-முத்தி அப்பாசியாவின் புதிய கலிபாவாக நியமிக்கப்பட்டார்.
  • 1258 – வியட்நாமில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து மங்கோலியர்கள் அங்கிருந்து பின்வாங்கினர்.
  • 1814 – நெப்போலியன் பொனபார்ட்டின் பிரெஞ்சு இராணுவம் பிரியென் சமரில் உருசியாவை வென்றது.
  • 1819 – இசுடாம்போர்டு இராஃபிள்சு சிங்கப்பூரில் தரையிறங்கினார்.
  • 1834 – அமெரிக்க அதிபர் ஆன்றூ சாக்குசன் தொழிற்சங்க சர்ச்சையைத் தீர்க்க முதன்முதலாக உத்தரவிட்டார்.
  • 1861 – கேன்சசு ஐக்கிய அமெரிக்காவின் 34-வது மாநிலமாக இணைந்தது.
  • 1863 – ஐக்கிய அமெரிக்காவின் இடாகோ மாநிலத்தில் இராணுவத்தினரால் நூற்றுக்கணக்கான சோசோன் பழங்குடிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 1886 – செருமனியரான காரல் பென்சு பெட்ரோலினால் இயங்கும் முதலாவது தானுந்துக்கான (Automobile) காப்புரிமம் பெற்றார்.
  • 1891 – லில்லியுகலானி அவாய் இராச்சியத்தின் கடைசி ஆட்சியாளராக முடிசூடினார்.
  • 1916 – முதலாம் உலகப் போர்: பாரிசு மீது செருமனி குண்டுத்தாக்குதல் நடத்தியது.
  • 1929 – சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேற்றப்பட்ட இலியோன் திரொட்சிகி துருக்கியைச் சென்றடைந்தார்.
  • 1940 – சப்பான் ஒசாக்காவில் மூன்று தொடருந்துகள் மோதி வெடித்ததில் 181 பேர் உயிரிழந்தனர்.
  • 1944 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் சோவியத் துணை இராணுவத்தினரால் பெண்கள், குழந்தைகள் உட்பட 38 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1946 – ஐக்கிய அமெரிக்காவில் சி.ஐ.ஜி (CIG) எனப்படும் மத்திய உளவுத்துறைக் குழு அமைக்கப்பட்டது.
  • 1980 – ரூபிக்கின் கனசதுரம் (Rubik’s Cube) முதல் தடவையாக பன்னாட்டு அளவில் இலண்டனில் விற்பனைக்கு வந்தது.
  • 1989 – பனிப்போர்: அங்கேரி மற்றும் தென்கொரியா இடையே தூதரக உறவு ஏற்பட்டது.
  • 1996 – பிரெஞ்சு அதிபர் சாக்கு சிராக்கு அணுகுண்டு சோதனைகளை நிறுத்துவதாக அறிவித்தார்.
  • 1996 – இத்தாலியின் வெனிசு நகரில் உள்ள புகழ்பெற்ற லா பெனீசு ஓப்பரா மாளிகை தீயினால் அழிந்தது.
  • 2005 – 1949-ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதற்தடவையாக சீனாவிலிருந்து வர்த்தக விமானம் ஒன்று தாய்வானுக்கு வந்து சேர்ந்தது.
  • 2013 – கசக்சுதானில் விமான விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.
  • 2017 – கியூபெக் பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்:

  • 1737 – தாமஸ் பெய்ன், ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர்.
  • 1843 – வில்லியம் மெக்கின்லி, அமெரிக்காவின் 25-வது அரசுத்தலைவர்.
  • 1853 – கிடசாடோ சிபாசாபுரோ, சப்பானிய நுண்ணுயிரியலாளர்.
  • 1860 – ஆன்டன் செக்கோவ், புகழ்பெற்ற உருசிய எழுத்தாளர்.
  • 1866 – ரோமைன் ரோலண்ட், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர்.
  • 1881 – ஆலிஸ் கேத்தரின் எவன்ஸ், அமெரிக்க உயிரியலாளர்.
  • 1899 – மார்க்கண்டு சுவாமிகள், யாழ்ப்பாணம் யோகசுவாமிகளின் சீடர்.
  • 1915 – வி. வி. சடகோபன், தமிழக நடிகர் மற்றும் இசைக் கலைஞர்.
  • 1922 – ராஜேந்திர சிங், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
  • 1926 – அப்துஸ் சலாம், நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர்.
  • 1935 – விக்டர் இசுடெங்கர், அமெரிக்க இயற்பியலாளர் மற்றும் எழுத்தாளர்.
  • 1939 – ஜெர்மைன் கிரீர், ஆத்திரேலிய ஊடகவியலாளர்.
  • 1941 – காமினி ஜயவிக்கிரம பெரேரா, இலங்கை அரசியல்வாதி.
  • 1947 – லிண்டா பக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியலாளர்.
  • 1954 – ஓப்ரா வின்ஃப்ரே, புகழ்பெற்ற அமெரிக்கத் தொலைக்காட்சித் தொகுப்பாளர்.
  • 1970 – ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், இந்தியத் துப்பாக்கி சுடு வீரர் மற்றும் அரசியல்வாதி.
  • 1982 – மீரா வாசுதேவன், இந்தியத் திரைப்பட நடிகை.
  • 1995 – தீப்தி சதி, இந்தியத் திரைப்பட நடிகை.

இறப்புகள்:

  • 661 – அலீ, நான்காவது கலீபா (முகம்மது நபியின் மருமகன்).
  • 1820 – மூன்றாம் ஜார்ஜ், பிரித்தானிய மன்னர்.
  • 1859 – வில்லியம் கிரேஞ்சு பாண்டு, அமெரிக்க வானியலாளர்.
  • 1933 – சாரா டீஸ்டேல், அமெரிக்கக் கவிஞர்.
  • 1934 – பிரிட்சு ஏபர், நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர்.
  • 1963 – இராபர்ட் புரொஸ்ட், அமெரிக்கக் கவிஞர்.
  • 1980 – எஸ். வி. சுப்பையா, தமிழ்த் திரைப்பட மற்றும் நாடக நடிகர்.
  • 1983 – பிலு மோடி, இந்திய அரசியல்வாதி.
  • 1991 – வ. ந. நவரத்தினம், இலங்கை தமிழ் அரசியல்வாதி.
  • 1995 – சி. எஸ். ஜெயராமன், நடிகர் மற்றும் இசையமைப்பாளர்.
  • 1998 – பி. எஸ். பி. பொன்னுசாமி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
  • 2003 – பண்டரிபாய், தென்னிந்தியத் திரைப்பட நடிகை.
  • 2009 – கு. முத்துக்குமார், ஈழத்தமிழர்களுக்காகத் தீக்குளித்த தமிழகப் போராளி.
  • 2010 – சு. ராஜம், தமிழக ஓவியர் மற்றும் இசைக்கலைஞர்.
  • 2019 – ஜார்ஜ் பெர்னாண்டஸ், இந்திய அரசியல்வாதி.
  • 2025 – மாவை சேனாதிராஜா, இலங்கை அரசியல்வாதி மற்றும் ஈழ செயற்பாட்டாளர்.

தகவல் உதவி: விக்கிப்பீடியா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!