
சனவரி 26 (January 26) கிரிகோரியன் ஆண்டின் 26 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 339 (நெட்டாண்டுகளில் 340) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்:
- 661 – கடைசி கலீபா அலீயின் படுகொலையுடன் ராசிதீன் கலீபாக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
- 1500 – எசுப்பானிய நாடுகாண் பயணி விசென்டே பின்சோன் பிரேசிலில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியர் என்ற பெருமையைப் பெற்றார்.
- 1531 – போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 30,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
- 1564 – ஊலா நகரப் போரில் லித்துவேனியா உருசியாவை வென்றது.
- 1564 – இத்தாலியின் கத்தோலிக்க டிரெண்ட் பேரவை கத்தோலிக்க மற்றும் சீர்திருத்தத் திருச்சபைகளுக்கிடையேயான வேறுபாட்டை வரையறுத்தது.
- 1565 – தலைக்கோட்டை சமரில் விஜயநகரப் பேரரசு தோல்வி கண்டது; இது இந்தியாவின் பெரும்பகுதி இசுலாமியரின் கட்டுப்பாட்டுக்குள் வரக் காரணியானது.
- 1700 – வட அமெரிக்காவின் மேற்குக் கரையில் 8.7–9.2 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
- 1788 – சிட்னியில் பிரித்தானியக் கைதிகளின் முதலாவது தொகுதி தரையிறங்கியது; இது ஆஸ்திரேலிய நாளாகக் கொண்டாடப்படுகின்றது.
- 1837 – மிச்சிகன் அமெரிக்காவின் 26-வது மாநிலமாக இணைந்தது.
- 1838 – அமெரிக்காவில் டென்னிசி மாநிலம் முதலாவதாக மதுவிலக்கை அமுல்படுத்தியது.
- 1841 – ஐக்கிய இராச்சியம் ஆங்காங்கை அதிகாரபூர்வமாக ஆக்கிரமித்தது.
- 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: லூசியானா மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது.
- 1870 – வர்ஜீனியா மீண்டும் அமெரிக்கக் கூட்டணியில் இணைந்தது.
- 1905 – 3,106.75 கரட் எடையுள்ள ‘கலினன்’ என்ற உலகின் மிகப்பெரிய வைரம் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1924 – சென் பீட்டர்ஸ்பேர்க் நகரம் ‘லெனின்கிராட்’ எனப் பெயர் மாற்றப்பட்டது.
- 1926 – ஜான் லோகி பைர்டு முதலாவது தொலைக்காட்சிப் பெட்டியைக் காட்சிப்படுத்தினார்.
- 1930 – இந்திய தேசியக் காங்கிரஸ் சனவரி 26-ஐ இந்தியாவின் விடுதலை நாளாக (பூரண சுயராஜ்ய நாள்) அறிவித்தது.
- 1934 – செருமனி மற்றும் போலந்து இடையே அமைதி உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.
- 1939 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: பிரான்சிஸ்கோ பிராங்கோவுக்கு ஆதரவான படைகள் பார்செலோனாவைக் கைப்பற்றின.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படையினர் முதற்தடவையாக ஐரோப்பாவை (வட அயர்லாந்து) அடைந்தனர்.
- 1950 – இந்தியா குடியரசு நாடானது. ராஜேந்திர பிரசாத் முதலாவது குடியரசுத் தலைவரானார்.
- 1952 – எகிப்தின் கெய்ரோ நகர மையப்பகுதி தீயினால் பெரும் அழிவைச் சந்தித்தது.
- 1962 – ரேஞ்சர் 3 விண்கலம் நிலவை நோக்கி ஏவப்பட்டது.
- 1965 – இந்தி இந்தியாவின் அதிகாரபூர்வ மொழியானது.
- 1980 – இசுரேலும் எகிப்தும் தூதரக உறவைத் தொடங்கின.
- 1986 – உகாண்டா அரசு தேசிய எதிர்ப்பு இயக்கத்தினரால் கவிழ்க்கப்பட்டது.
- 1991 – சோமாலியாவில் சியாத் பாரியின் அரசு கலைக்கப்பட்டது.
- 1992 – அமெரிக்க நகரங்கள் மீது அணுவாயுத ஏவுகணைகள் செலுத்தப்படமாட்டாது என உருசிய அதிபர் பொரிஸ் யெல்ட்சின் அறிவித்தார்.
- 2001 – குஜராத்தில் ஏற்பட்ட 7.7 அளவு நிலநடுக்கத்தில் சுமார் 20,000 பேர் உயிரிழந்தனர்.
- 2015 – எசுப்பானியாவில் வான்படை விமானம் விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்:
- 1667 – என்றிக் சுவார்டெக்குரூன், டச்சுக் கிழக்கிந்தியத் தீவுகளின் ஆளுநர்.
- 1763 – காருல் யோவான், சுவீடன் நோர்வே அரசர்.
- 1799 – பெனாய்ட் பால் எமிலி கிளாபிரான், பிரெஞ்சு இயற்பியலாளர்.
- 1880 – டக்ளசு மக்கார்த்தர், அமெரிக்க இராணுவத் தளபதி.
- 1892 – பெசி கோல்மன், அமெரிக்க விமானி.
- 1917 – சி. டி. ராஜகாந்தம், தமிழக நகைச்சுவை நடிகை.
- 1921 – சித்திரசேன, இலங்கை நடனக் கலைஞர்.
- 1921 – அக்கியோ மொறிட்டா, சோனி நிறுவனத்தை நிறுவிய சப்பானியத் தொழிலதிபர்.
- 1924 – மணியம், தமிழக ஓவியர்.
- 1937 – வீரபாண்டி எஸ். ஆறுமுகம், தமிழக அரசியல்வாதி.
- 1944 – அஞ்செலா டேவிசு, அமெரிக்கச் செயற்பாட்டாளர்.
- 1956 – பி. சி. ஸ்ரீராம், தமிழகத் திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர்.
- 1956 – பாரத லக்சுமன் பிரேமச்சந்திர, இலங்கை அரசியல்வாதி.
- 1958 – எல்லேன் டிஜெனிரெஸ், அமெரிக்க நடிகை.
- 1966 – அனிதா நாயர், ஆங்கிலப் புதின எழுத்தாளர்.
- 1968 – ரவி தேஜா, இந்திய நடிகர்.
- 1986 – நவ்தீப், தெலுங்குத் திரைப்பட நடிகர்.
இறப்புகள்:
- 1823 – எட்வர்ட் ஜென்னர், பெரியம்மைத் தடுப்பூசியைக் கண்டுபிடித்த ஆங்கிலேய மருத்துவர்.
- 1891 – நிக்கோலஸ் ஓட்டோ, உள் எரி பொறியைக் கண்டுபிடித்த செருமானியப் பொறியாளர்.
- 1895 – ஆர்தர் கெய்லி, ஆங்கிலேயக் கணிதவியலாளர்.
- 1903 – வில்லியம் ஸ்கீன், ஆங்கிலேய-இலங்கை நூலாசிரியர்.
- 1946 – அதிரியான் வான் மானன், இடச்சு-அமெரிக்க வானியலாளர்.
- 1954 – எம். என். ராய், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், புரட்சியாளர்.
- 1963 – நீடாமங்கலம் என். டி. எம். சண்முக வடிவேல், தமிழகத் தவில் கலைஞர்.
- 1964 – ப. அ. தோமசு, யாழ்ப்பாணம் தோலகட்டி சுவாமிகள்.
- 1990 – லூயிசு மம்ஃபோர்டு, அமெரிக்க சமூகவியலாளர்.
- 2008 – ஜோர்ஜ் அபாசு, பாலஸ்தீனத் தலைவர்.
- 2010 – சாயி, இந்திய நடனக் கலைஞர்.
- 2010 – ஜியோப்ரி உரொனால்டு பர்பிட்ஜ், ஆங்கிலேய வானியலாளர்.
- 2012 – பாரூக் மரைக்காயர், புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர்.
- 2015 – ஆர். கே. லட்சுமண், இந்தியாவின் புகழ்பெற்ற கேலிச் சித்திர ஓவியர்.
சிறப்பு நாள்:
- குடியரசு நாள் (இந்தியா).
- ஆஸ்திரேலியா நாள் (ஆத்திரேலியா).
- விடுதலை நாள் (உகாண்டா).
தகவல் உதவி: விக்கிப்பீடியா
Hashtags: