இன்றைய நாள்: சனவரி 25 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

சனவரி 25 (January 25) கிரிகோரியன் ஆண்டின் 25 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 340 (நெட்டாண்டுகளில் 341) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்:

  • 41 – குளோடியசு உரோமைப் பேரரசராக உரோமை மேலவையால் அறிவிக்கப்பட்டார்.
  • 750 – அப்பாசியக் கலீபக கிளர்ச்சியாளர்கள் சாப் என்ற இடத்தில் நடந்த போரில் உமையா கலீபகத்தைத் தோற்கடித்தனர்.
  • 1348 – இத்தாலியின் பிரியூலி பகுதியைப் பெரும் நிலநடுக்கம் தாக்கியதில் பெரும் சேதம் ஏற்பட்டது.
  • 1498 – போர்த்துக்கீச நாடுகாண்பயணி வாஸ்கோ ட காமா தென்கிழக்கு ஆபிரிக்காவை அடைந்தார்.
  • 1515 – பிரான்சின் மன்னராக முதலாம் பிரான்சிசு முடிசூடினார்.
  • 1533 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி ஆன் பொலினைத் தனது இரண்டாவது மனைவியாக இரகசியத் திருமணம் புரிந்தார்.
  • 1755 – மாஸ்கோ பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1765 – போக்லாந்து தீவுகளில் முதலாவது பிரித்தானியக் குடியேற்றம் எக்மண்ட் துறையில் ஆரம்பமானது.
  • 1791 – பழைய கியூபெக் மாகாணம் மேல் கனடா, கீழ் கனடா என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
  • 1881 – தாமஸ் ஆல்வா எடிசன், அலெக்சாண்டர் கிரகாம் பெல் இணைந்து ‘ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினர்.
  • 1882 – வேல்ஸ் இளவரசர்கள் அல்பேர்ட் விக்டர், ஜோர்ஜ் ஆகியோர் அரசு முறைப் பயணமாக கொழும்பு வந்தனர்.
  • 1890 – நெல்லி பிளை தனது 72 நாள் உலகம் சுற்றும் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டார்.
  • 1917 – டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள் ஐக்கிய அமெரிக்காவுக்கு $25 மில்லியன்களுக்கு விற்கப்பட்டது.
  • 1918 – உக்ரைன் போல்செவிக் உருசியாவிடமிருந்து விடுதலையை அறிவித்தது.
  • 1924 – முதலாவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பிரான்சில் ஆரம்பமானது.
  • 1942 – இரண்டாம் உலகப் போர்: தாய்லாந்து அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் மீது போரை அறிவித்தது.
  • 1945 – இரண்டாம் உலகப் போர்: பல்ஜ் சண்டை (Battle of the Bulge) முடிவுற்றது.
  • 1947 – தோமசு கோல்ட்சிமித் முதலாவது இலத்திரனியல் விளையாட்டுக் கருவியைக் கண்டுபிடித்தார்.
  • 1949 – முதலாவது எம்மி விருதுகள் (Emmy Awards) வழங்கப்பட்டன.
  • 1949 – சீனக் கம்யூனிஸ்டுகளின் படைகள் பீக்கிங்கினுள் நுழைந்தன.
  • 1949 – இசுரேலில் இடம்பெற்ற முதலாவது பொதுத் தேர்தலில் டேவிட் பென்-கூரியன் பிரதமரானார்.
  • 1955 – சோவியத் ஒன்றியம் செருமனி மீது அதிகாரபூர்வமாகப் போரை நிறுத்தியது.
  • 1971 – உகண்டாவில் மில்ட்டன் ஓபோட் அரசுத்தலைவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டு இடி அமீன் தலைவரானார்.
  • 1971 – இந்தியாவின் 18-வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • 1980 – அன்னை தெரேசாவிற்கு இந்தியாவின் ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது.
  • 1981 – மா சே துங்கின் மனைவி சியாங் சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது (பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது).
  • 1993 – வர்ஜீனியாவில் அமெரிக்காவின் சிஐஏ தலைமையகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர்.
  • 1993 – மூதூர்-திருகோணமலை பயணிகள் படகு விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
  • 1994 – நாசாவின் ‘கிளமென்டைன்’ விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.
  • 1998 – கண்டியின் தலதா மாளிகையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1999 – மேற்கு கொலம்பியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
  • 2002 – விக்கிப்பீடியா மீடியாவிக்கி மென்பொருளுக்கு மாறியது.
  • 2004 – ஆப்பர்சூனிட்டி தளவுலவி செவ்வாயில் தரையிறங்கியது.
  • 2005 – மகாராஷ்டிரா மந்திராதேவி கோயில் நெரிசலில் சிக்கி 258 பேர் உயிரிழந்தனர்.
  • 2006 – சூரியக் குடும்பத்திற்கு வெளியே பூமியிலிருந்து 21,500 ஒளியாண்டுகள் தூரத்தில் புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
  • 2009 – முல்லைத்தீவில் கல்மடு குளத்தின் அணை விடுதலைப் புலிகளால் உடைக்கப்பட்டது.
  • 2011 – எகிப்தியப் புரட்சியின் முதல் அலை ஆரம்பமானது.
  • 2013 – வெனிசுவேலாவில் சிறைச்சாலைக் கலவரம் ஒன்றில் 50 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்:

  • 1627 – இராபர்ட் வில்லியம் பாயில், அயர்லாந்து-ஆங்கிலேய வேதியியலாளர்.
  • 1736 – ஜோசப் லூயி லாக்ராஞ்சி, இத்தாலிய-பிரான்சியக் கணிதவியலாளர்.
  • 1759 – இராபர்ட் பர்ன்சு, இசுக்கொட்டியக் கவிஞர்.
  • 1783 – வில்லியம் கோல்கேட், அமெரிக்கத் தொழிலதிபர்.
  • 1824 – மைக்கேல் மதுசூதன் தத்தா, இந்தியக் கவிஞர்.
  • 1872 – பி. ஆர். ராஜமய்யர், எழுத்தாளர்.
  • 1882 – வெர்ஜீனியா வூல்ஃப், ஆங்கிலேயப் புதின எழுத்தாளர்.
  • 1920 – பித்துக்குளி முருகதாஸ், பக்திப் பாடகர்.
  • 1920 – பால்ராஜ் மாதோக், இந்திய அரசியல்வாதி.
  • 1927 – டாம் ஜோபிம், பிரேசில் இசைக்கலைஞர்.
  • 1928 – எதுவார்து செவர்துநாத்சே, ஜார்ஜியாவின் 2-வது அரசுத்தலைவர்.
  • 1933 – சில்லையூர் செல்வராசன், ஈழத்து எழுத்தாளர், நடிகர்.
  • 1933 – கொரசோன் அக்கினோ, பிலிப்பீன்சின் 11-வது அரசுத்தலைவர்.
  • 1938 – எட்டா ஜேம்சு, அமெரிக்கப் பாடகர்.
  • 1938 – விளாடிமிர் விசொட்சுக்கி, உருசியப் பாடகர், நடிகர்.
  • 1941 – செங்கை ஆழியான், ஈழத்து எழுத்தாளர்.
  • 1957 – ஜெனிபர் லீவிஸ், அமெரிக்க நடிகை.
  • 1958 – கவிதா கிருஷ்ணமூர்த்தி, இந்தியப் பாடகி.
  • 1967 – ஊர்வசி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை.
  • 1980 – சேவியர் எர்னாண்டசு, எசுப்பானியக் கால்பந்து வீரர்.
  • 1981 – அலீசியா கீசு, அமெரிக்கப் பாடகி.
  • 1988 – செதேஷ்வர் புஜாரா, இந்தியத் துடுப்பாட்ட வீரர்.
  • 1988 – அனுசிறீ, கன்னடத் திரைப்பட நடிகை.

இறப்புகள்:

  • 390 – நசியான் கிரகோரி, இறையியலாளர்.
  • 844 – நான்காம் கிரகோரி (திருத்தந்தை).
  • 1895 – தி. முத்துச்சாமி ஐயர், சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது இந்திய நீதிபதி.
  • 1918 – வில்லியம் வெட்டர்பர்ன், பிரித்தானிய இந்திய அதிகாரி.
  • 1947 – அல் கபோன், அமெரிக்கக் கடத்தல்காரர்.
  • 1951 – அலெக்சாண்டர் பிரான்சிஸ் மொலமுறே, இலங்கை அரசியல்வாதி.
  • 1960 – காவ்ரீல் திக்கோவ், சோவியத் வானியலாளர்.
  • 1964 – கீழப்பளுவூர் சின்னச்சாமி, இந்தி எதிர்ப்புப் போராளி.
  • 1983 – என். எம். ஆர். சுப்பராமன், இந்திய அரசியல்வாதி.
  • 1988 – திருவாசக சுவாமிகள், ஈழத்து சைவத் துறவி.
  • 2001 – அலெக்சாந்தர் சுதக்கோவ், உருசிய இயற்பியலாளர்.
  • 2005 – பிலிப் ஜான்சன், அமெரிக்கக் கட்டிடக் கலைஞர்.
  • 2009 – எலினார் பிரான்சிசு கெலின், அமெரிக்க வானியலாளர்.
  • 2014 – எம். உதயகுமார், இலங்கை நடிகர்.
  • 2016 – கல்பனா, மலையாள நடிகை.
  • 2019 – கிருஷ்ணா சோப்தி, இந்திய எழுத்தாளர்.
  • 2021 – சி. ஆர். பார்த்திபன், தமிழ்த் திரைப்பட நடிகர்.
  • 2024 – பவதாரிணி, தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர், பாடகி.

சிறப்பு நாள்:

  • தேசிய வாக்காளர் நாள் (இந்தியா).
  • தேசிய ஊட்டச்சத்து நாள் (இந்தோனேசியா).

தகவல் உதவி: விக்கிப்பீடிய

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!