இன்றைய நாள்: சனவரி 21 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

சனவரி 21 (January 21) கிரிகோரியன் ஆண்டின் 21 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 344 (நெட்டாண்டுகளில் 345) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்:

  • 763 – கூஃபா என்ற இடத்தில் அலீதுகளுக்கும் அபாசியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் அபாசியர்கள் வெற்றி பெற்றனர்.
  • 1643 – ஏபல் டாஸ்மான் தொங்காவில் (Tonga) இறங்கிய முதல் ஐரோப்பியர் என்ற பெருமையைப் பெற்றார்.
  • 1720 – சுவீடனும் புருசியாவும் ஸ்டாக்ஹோம் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தி போரை நிறுத்திக் கொண்டன.
  • 1749 – இத்தாலி, வெரோனா நகரில் பிலர்மோனிக்கோ அரங்கு தீக்கிரையானது (1754-இல் இது மீண்டும் கட்டப்பட்டது).
  • 1774 – முதலாம் அப்துல் அமீது உதுமானியப் பேரரசராகவும் இசுலாமின் கலிபாவாகவும் நியமிக்கப்பட்டார்.
  • 1793 – பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அரசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக கில்லட்டின் மூலம் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.
  • 1801 – ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் முதல் தடவையாகக் கூடியது.
  • 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மேலவையிலிருந்து பதவி விலகினார்.
  • 1919 – புரட்சிகர ஐரிசு நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு அயர்லாந்துக் குடியரசு அறிவிக்கப்பட்டது.
  • 1924 – சோவியத் தலைவர் விளாதிமிர் லெனின் இயற்கை எய்தினார்.
  • 1925 – அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது.
  • 1941 – இரண்டாம் உலகப் போர்: ஆத்திரேலிய மற்றும் பிரித்தானியப் படைகள் லிபியாவின் டோபுருக் நகரைத் தாக்கின.
  • 1947 – முதலாவது சிங்களத் திரைப்படம் ‘கடவுனு பொறந்துவ’ இலங்கையில் திரையிடப்பட்டது.
  • 1948 – கியூபெக்கின் தேசியக் கொடி அங்கீகரிக்கப்பட்டு முதற்தடவையாக அதன் தேசியப் பேரவையில் பறக்க விடப்பட்டது.
  • 1954 – உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல் ‘நோட்டிலசு’ (Nautilus), அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
  • 1960 – ஜமேக்காவில் அவியாங்கா விமானம் விபத்துக்குள்ளானதில் 37 பேர் உயிரிழந்தனர்.
  • 1960 – மேர்க்குரி விண்கலத்தில் ‘சாம்’ என்ற பெண் செம்முகக் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.
  • 1960 – தென்னாப்பிரிக்காவில் நிலக்கரிச் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 435 தொழிலாளர்கள் உயிருடன் புதையுண்டனர்.
  • 1968 – பி-52 ஸ்ராடோபோட்ரெஸ் குண்டுவீச்சு விமானம் விபத்துக்குள்ளானதில் கிரீன்லாந்தின் தூலே பகுதியில் அணுக் கதிர்வீச்சுப் பாதிப்பு ஏற்பட்டது.
  • 1972 – திரிபுரா, மேகாலயா மற்றும் மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.
  • 1976 – கான்கோர்டு (Concorde) விமானம் தனது முதலாவது வணிக சேவையைத் தொடங்கியது.
  • 1995 – கொழும்பில் யோசப் வாசு அடிகளுக்கு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அருளாளர் பட்டம் வழங்கினார்.
  • 2003 – மெக்சிக்கோவின் கொலிமா மாநிலத்தில் நிகழ்ந்த 7.6 அளவு நிலநடுக்கத்தில் 29 பேர் உயிரிழந்தனர்.
  • 2004 – நாசாவின் இசுபிரிட் தளவுலவியுடன் (Spirit rover) துண்டிக்கப்பட்ட தொடர்பு பின்னர் மீண்டும் பெறப்பட்டது.
  • 2008 – அலாஸ்காவின் ‘இயாக்’ மொழி பேசும் கடைசிப் பழங்குடி இறந்தார்.
  • 2009 – செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டது.
  • 2009 – காசாக்கரையில் இருந்து இசுரேல் அதிகாரபூர்வமாக வெளியேறியது.
  • 2011 – அல்பேனியாவில் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களின் போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்தனர்.
  • 2017 – ஆந்திரப் பிரதேசம் கூனேருவில் தொடருந்து தடம் புரண்டதில் 42 பேர் உயிரிழந்தனர்.
  • 2017 – டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற முதல் நாளில் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் மில்லியன் கணக்கான பெண்கள் திரண்டு ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தினர்.

பிறப்புகள்:

  • 1863 – பிரம்மாநந்தர், தமிழக ஆன்மிகவாதி.
  • 1869 – கிரிகோரி ரஸ்புடின், உருசிய மதகுரு மற்றும் மந்திரவாதி.
  • 1908 – பெங்கித் சுட்டிராம்கிரன், தென்மார்க்கு வானியலாளர்.
  • 1919 – அரிசரண் சிங் பிரார், பஞ்சாப் அரசியல்வாதி.
  • 1923 – உலோலா புலோறேஸ், எசுப்பானியப் பாடகி.
  • 1924 – மது தண்டவதே, இந்திய இடதுசாரி அரசியல்வாதி.
  • 1928 – யீன் சார்ப், அமெரிக்க அரசியல் அறிவியலாளர்.
  • 1935 – அரவிந்தன், மலையாளத் திரைப்பட இயக்குநர்.
  • 1941 – எலைன் ஷோவால்டர், அமெரிக்க எழுத்தாளர்.
  • 1949 – துருஒங் டான் சாங், வியட்நாமின் 7-வது அரசுத்தலைவர்.
  • 1952 – பிரதீப் ரவட், இந்தியத் திரைப்பட நடிகர்.
  • 1953 – பவுல் ஆல்லென், மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர்.
  • 1957 – கி. சிவநேசன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி.
  • 1958 – உ. வாசுகி, தமிழக அரசியல்வாதி.
  • 1968 – சஞ்சய் சுப்ரமண்யன், கருநாடக இசைப் பாடகர்.
  • 1968 – சுந்தர் சி., தமிழ்த் திரைப்பட இயக்குநர், நடிகர்.
  • 1980 – சந்தானம், தமிழக நகைச்சுவை நடிகர்.
  • 1984 – லுகே கிரிமேஸ், அமெரிக்க நடிகர்.
  • 1987 – ஆயிதா ஹாஜி அலீ, சுவீடன் அரசியல்வாதி.

இறப்புகள்:

  • 1793 – பிரான்சின் பதினாறாம் லூயி (மன்னர்).
  • 1892 – ஜான் கவுச் ஆடம்சு, பிரித்தானியக் கணிதவியலாளர் மற்றும் வானியலாளர்.
  • 1924 – விளாதிமிர் லெனின், சோவியத் ஒன்றியத்தின் முதல் தலைவர்.
  • 1926 – கேமிலோ கொல்கி, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய மருத்துவர்.
  • 1945 – ராஷ் பிஹாரி போஸ், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
  • 1950 – ஜார்ஜ் ஆர்வெல், புகழ்பெற்ற பிரித்தானிய எழுத்தாளர்.
  • 1981 – விஷ்ணுராம் மேதி, அசாம் முதலமைச்சர்.
  • 1989 – பில்லி டிப்டன், அமெரிக்க இசைக் கலைஞர்.
  • 1989 – சு. வித்தியானந்தன், ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர்.
  • 1992 – எடி மாபோ, ஆத்திரேலியப் பழங்குடித் தலைவர்.
  • 2002 – சொக்கலிங்க பாகவதர், தமிழ்த் திரைப்பட நடிகர்.
  • 2013 – எம். எஸ். உதயமூர்த்தி, தமிழக எழுத்தாளர், தொழிலதிபர்.
  • 2016 – மிருணாளினி சாராபாய், இந்திய நடனக் கலைஞர்.
  • 2019 – சிவக்குமார சுவாமி, இந்திய ஆன்மிகத் தலைவர்.

சிறப்பு நாள்:

  • தேசிய முத்த நாள் (National Hugging Day – ஐக்கிய அமெரிக்கா).

தகவல் உதவி: விக்கிப்பீடியா


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!