பட்டதாரி ஆசிரியர் போட்டிப் பரீட்சை - 2026 (திருத்தப்பட்ட அறிவித்தல்)
இலங்கை ஆசிரியர் சேவையின் தரம் 3-I (வகுப்பு 3 – தொகுதி I) இற்கு 23,000 இற்கும் அதிகமான பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான திருத்தப்பட்ட அறிவித்தலுக்கு (Amendment Notice) அமைவாக விண்ணப்ப முடிவுத் திகதிகள் மற்றும் மேலதிக விபரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
| பதவி மற்றும் வெற்றிட விபரங்கள் | தகவல்கள் |
|---|---|
| மொத்த வெற்றிடங்கள் | 23,344 |
| பரீட்சைப் பிரிவு | திறந்த மற்றும் வரையறுக்கப்பட்ட (Open & Limited) |
| பாடசாலை வகை | தேசிய மற்றும் மாகாண பாடசாலைகள் |
| விண்ணப்ப முடிவுத் திகதிகள் | இறுதித் திகதி |
| வரையறுக்கப்பட்ட (Limited) பிரிவு | 2026.02.19 (இன்னும் 2 நாட்களே உள்ளன) |
| திறந்த (Open) பிரிவு | 2026.03.05 |
| விண்ணப்பிக்கும் முறை | Apply Online |
விண்ணப்பதாரிகளுக்கான முக்கிய குறிப்பு:
முடிவுத் திகதி:
வரையறுக்கப்பட்ட (Limited) போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பவர்கள் எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்களை இணையவழியாகச் சமர்ப்பிக்க வேண்டும்.திருத்தங்கள்:
வயது எல்லை மற்றும் ஏனைய தகைமைகள் தொடர்பாக வெளியாகியுள்ள புதிய திருத்தங்களை வர்த்தமானி ஊடாக உறுதிப்படுத்திக் கொள்ளவும்.விண்ணப்பம்:
பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
Limited (வரையறுக்கப்பட்ட) பிரிவு என்பது ஏற்கனவே அரச சேவையில் உள்ளவர்களுக்கானது.
Open (திறந்த) பிரிவு என்பது புதிதாக வேலை தேடும் பட்டதாரிகளுக்கானது.