இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பொதுவான நிலை: நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையற்ற, தெளிவான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.
பனிமூட்டம்: மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
மாலை நேர மழை: களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மட்டும் மாலை 4.00 ணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது.
வெப்பநிலை: பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 28°C ஆகவும், இரவு நேர குறைந்தபட்ச வெப்பநிலை 20°C ஆகவும் நிலவும்.
வாகன சாரதிகள் அதிகாலை வேளையில் நிலவும் பனிமூட்டமான நிலையின் போது அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
