பெப்ரவரி 6 - வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்
பெப்ரவரி 6 (February 6) கிரிகோரியன் ஆண்டின் 37 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 328 (நெட்டாண்டுகளில் 329) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்:
60 – கிழமை (Week) முறை முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. பொம்பெயியில் கண்டெடுக்கப்பட்ட ஓவியம் இந்நாளை ஞாயிற்றுக்கிழமையாகக் காட்டியது.
1658 – சுவீடன் மன்னன் பத்தாம் குஸ்டாவின் படைகள் உறைந்த கடலைத் தாண்டி டென்மார்க்கை அடைந்தன.
1685 – இரண்டாம் சார்லசு மன்னரின் இறப்பைத் தொடர்ந்து அவரது சகோதரர் இரண்டாம் யேம்சு மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1788 – மாசச்சூசெட்ஸ் ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட 6-வது மாநிலமானது.
1792 – மூன்றாவது ஆங்கிலேய-மைசூர் போர்: சீரங்கப்பட்டினம் முற்றுகையின் போது திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டார்.
1819 – சேர் இசுடாம்போர்டு இராஃபிள்சு என்பவரால் சிங்கப்பூர் நகரம் அமைக்கப்பட்டது.
1820 – முதல் தொகுதி 86 ஆபிரிக்க அமெரிக்கர்கள் லைபீரியாவில் குடியேறுவதற்காக நியூயார்க்கிலிருந்து புறப்பட்டனர்.
1840 – நியூசிலாந்தில் பிரித்தானிய அரசுக்கும் மவோரி தலைவர்களுக்கும் இடையே ‘வைத்தாங்கி ஒப்பந்தம்’ எட்டப்பட்டது.
1851 – ஆத்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய காட்டுத்தீ விக்டோரியா மாநிலத்தில் பரவியதில் 12 பேர் உயிரிழந்தனர்.
1863 – ‘இலங்காபிமானி’ (Ceylon Patriot) இதழ் யாழ்ப்பாணத்தில் டபிள்யூ. சி. கதிரவேற்பிள்ளை என்பவரால் வெளியிடப்பட்டது.
1899 – எசுப்பானிய அமெரிக்கப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த பாரிஸ் உடன்படிக்கையை அமெரிக்க மேலவை ஏற்றுக்கொண்டது.
1900 – நெதர்லாந்தின் டென் ஹாக் நகரில் நிரந்தர நடுவர் நீதிமன்றம் நிறுவப்பட்டது.
1918 – பிரித்தானியாவில் 30 வயதிற்கு மேற்பட்ட, சொத்துரிமை கொண்ட பெண்களுக்கு முதல்முறையாக வாக்குரிமை வழங்கப்பட்டது.
1952 – ஆறாம் ஜோர்ஜ் மன்னரின் மறைவை அடுத்து இரண்டாம் எலிசபெத் ஐக்கிய இராச்சியத்தின் அரசியானார்.
1958 – மியூனிக் விமான விபத்தில் மான்செஸ்டர் யுனைட்டட் கால்பந்து அணியைச் சேர்ந்த 8 வீரர்கள் உட்பட பலர் உயிரிழந்தனர்.
1959 – ஜாக் கில்பி தொகுசுற்றுக்கான (Integrated Circuit – IC) முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்.
1959 – கண்டம் விட்டுக் கண்டம் பாயும் முதலாவது ‘டைட்டான்’ ஏவுகணை புளோரிடாவில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
2004 – மாஸ்கோ சுரங்கத் தொடருந்து நிலையத்தில் நிகழ்ந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
2022 – இந்தியாவின் கானக்குயில் லதா மங்கேஷ்கர் காலமானார்.
பிறப்புகள்:
1665 – பெரிய பிரித்தானியாவின் அரசி ஆன்.
1814 – காரல் கிரவுல், தமிழகத்தில் பணியாற்றிய செருமானியத் தமிழறிஞர்.
1890 – கான் அப்துல் கப்பார் கான் (எல்லைக் காந்தி), பாக்கித்தானிய விடுதலைப் போராட்ட வீரர்.
1911 – ரானல்ட் ரேகன், ஐக்கிய அமெரிக்காவின் 40-வது அரசுத்தலைவர்.
1912 – இவா பிரான், அடால்ஃப் இட்லரின் மனைவி.
1945 – பாப் மார்லி, உலகப்புகழ் பெற்ற ஜமைக்கா பாடகர்.
1956 – பிறைசூடன், தமிழகத் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர்.
1975 – ஆர்க்குட் புயுக்கோக்டன், ‘ஆர்க்குட்’ (Orkut) சமூக வலையமைப்பை உருவாக்கியவர்.
1983 – சிறிசாந்த், இந்தியத் துடுப்பாட்ட வீரர்.
இறப்புகள்:
1685 – இரண்டாம் சார்லசு, இங்கிலாந்து மன்னர்.
1804 – சோசப்பு பிரீசிட்லி, ஆக்சிஜனைக் கண்டறிந்த ஆங்கிலேய வேதியியலாளர்.
1827 – சியாமா சாஸ்திரிகள், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர்.
1931 – மோதிலால் நேரு, இந்திய அரசியல்வாதி மற்றும் வழக்கறிஞர்.
1952 – ஆறாம் ஜோர்ஜ், ஐக்கிய இராச்சியத்தின் மன்னர்.
1964 – எமிலியோ அகுயினால்டோ, பிலிப்பீன்சின் முதல் அரசுத்தலைவர்.
2022 – லதா மங்கேஷ்கர், புகழ்பெற்ற இந்தியப் பின்னணிப் பாடகி.
சிறப்பு நாள்:
வைத்தாங்கி நாள் (Waitangi Day – நியூசிலாந்து நிறுவப்பட்ட நாள்).
தகவல் உதவி: விக்கிப்பீடியா