சனவரி 23 (January 23) கிரிகோரியன் ஆண்டின் 23 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 342 (நெட்டாண்டுகளில் 343) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்:
- 393 – உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியசு, தனது 8 வயது மகன் ஒனோரியசை துணைப் பேரரசராக அறிவித்தார்.
- 1368 – சூ யுவான்சாங் சீனாவின் கோங்வு பேரரசராக முடிசூடினார். இவரது மிங் அரசமரபு மூன்று நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டது.
- 1556 – சீனாவின் சென்சி மாகாணத்தைத் தாக்கிய நிலநடுக்கத்தில் 830,000 பேர் வரை இறந்தனர். உலக வரலாற்றில் மிக அதிகமானோர் கொல்லப்பட்ட நிலநடுக்கம் இதுவாகும்.
- 1570 – இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னரின் அரசப் பிரதிநிதி யேம்சு ஸ்டுவர்ட் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1579 – நெதர்லாந்தில் புரட்டத்தாந்து குடியரசு அமைக்கப்பட்டது.
- 1719 – புனித உரோமைப் பேரரசின் கீழ் லீக்கின்ஸ்டைன் வேள்பகுதி உருவாக்கப்பட்டது.
- 1750 – அழகுமுத்துக்கோன் கட்டாலங்குள மன்னராக முடிசூட்டிக்கொண்டு எட்டயபுரம் பாளையத்தை ஆட்சி செய்தார்.
- 1789 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது கத்தோலிக்கக் கல்லூரியான ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
- 1793 – உருசியாவும் புருசியாவும் போலந்தைப் பிரித்தன.
- 1816 – கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னர் விக்கிரம ராஜசிங்கனும் அவரது குடும்பமும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
- 1833 – போக்லாந்து தீவுகளை பிரித்தானியா மீண்டும் கைப்பற்றிக் கொண்டது.
- 1846 – தூனிசியாவில் அடிமை வணிகம் ஒழிக்கப்பட்டது.
- 1870 – அமெரிக்கா, மொன்ட்டானாவில் அமெரிக்கப் படைகளினால் பெண்கள், குழந்தைகள் உட்பட 173 பழங்குடியினர் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1874 – விக்டோரியா மகாராணியின் மகன் அல்பிரட், உருசிய இளவரசி மரீயா அலெக்சாந்திரொவ்னாவை திருமணம் புரிந்தார்.
- 1899 – முதலாவது பிலிப்பீன் குடியரசு நிறுவப்பட்டது. எமிலியோ அகுயினால்டோ அதன் முதல் அரசுத்தலைவரானார்.
- 1900 – இரண்டாம் பூவர் போர்: பிரித்தானியப் படைகளுக்கு எதிரான சமரில் தென்னாபிரிக்கக் குடியரசு படைகள் வென்றன.
- 1924 – விளாதிமிர் லெனின் சனவரி 21 இல் இறந்ததாக சோவியத் ஒன்றியம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
- 1937 – ஜோசப் ஸ்டாலின் அரசைக் கவிழ்க்க முயன்றதாக 17 கம்யூனிஸ்டுகளின் மீது மாஸ்கோவில் விசாரணைகள் ஆரம்பமாயின.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: நியூ கினி மீதான சப்பானிய முற்றுகை ஆரம்பமானது.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: லிபியாவின் தலைநகர் திரிப்பொலியை நாட்சிகளிடம் இருந்து பிரித்தானியா கைப்பற்றியது.
- 1950 – இசுரேலின் சட்டசபை எருசலேமை இசுரேலின் தலைநகராக அறிவித்தது.
- 1957 – சென்னை மாகாணத்தில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.
- 1958 – வெனிசுவேலாவில் ஏற்பட்ட அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து அதன் அரசுத்தலைவர் மார்க்கோசு சிமேனசு நாட்டை விட்டு வெளியேறினார்.
- 1963 – கினி-பிசாவு விடுதலைப் போர் ஆரம்பமானது.
- 1973 – வியட்நாமில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் அறிவித்தார்.
- 1996 – ஜாவா (Java) நிரலாக்க மொழியின் முதற் பதிப்பு வெளியானது.
- 1998 – யாழ்ப்பாணம், புங்குடுதீவில் ஈபிடிபி முகாம் விடுதலைப்புலிகளால் தாக்கியழிக்கப்பட்டது.
- 2002 – அமெரிக்க ஊடகவியலாளர் டேனியல் பெர்ல் கராச்சியில் கடத்தப்பட்டார்.
- 2003 – பயனியர் 10 விண்கலத்திலிருந்து கடைசித் தடவையாக சமிக்கை கிடைத்தது.
- 2005 – திருச்சி ஸ்ரீரங்கம் கல்யாண மண்டபத் தீ விபத்தில் 62 பேர் உயிரிழந்தனர்.
- 2018 – அலாஸ்கா வளைகுடாவில் 7.9 அளவு நிலநடுக்கம் தாக்கியது.
பிறப்புகள்:
- 1814 – அலெக்சாண்டர் கன்னிங்காம், பிரித்தானியத் தொல்லியலாளர்.
- 1832 – எடுவார்ட் மனே, பிரான்சிய ஓவியர்.
- 1833 – முத்து குமாரசுவாமி, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, வழக்கறிஞர்.
- 1838 – மேரியான் கோப், கத்தோலிக்கப் புனிதர்.
- 1862 – டேவிடு இல்பேர்ட்டு, கணிதவியலாளர்.
- 1869 – எர்பெர்ட்டு குரோலி, அமெரிக்க கல்வியாளர்.
- 1893 – ஆர். அனந்த கிருஷ்ணர், கருநாடக இசைக் கலைஞர்.
- 1894 – ஜோதிர்மாயி தேவி, இந்திய எழுத்தாளர்.
- 1897 – சுபாஷ் சந்திர போஸ், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
- 1907 – ஹிடேகி யுகாவா, நோபல் பரிசு பெற்ற சப்பானிய இயற்பியலாளர்.
- 1926 – பால் தாக்கரே, சிவசேனா கட்சித் தலைவர், அரசியல்வாதி.
- 1930 – டெரெக் வால்காட், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்.
- 1971 – நிரோஷா, தென்னிந்திய திரைப்பட நடிகை.
- 1983 – நாரா லோகேசு, இந்திய அரசியல்வாதி.
- 1984 – விமலா ராமன், திரைப்பட நடிகை.
இறப்புகள்:
- 1622 – வில்லியம் பாஃபின், ஆங்கிலேய நாடுகாண் பயணி.
- 1744 – கியாம்பாட்டிஸ்டா விக்கோ, இத்தாலிய வரலாற்றாளர்.
- 1791 – யொகான் பிலிப் பப்ரிசியஸ், செருமனிய மதப் போதகர், தமிழறிஞர்.
- 1944 – எட்வர்ட் மண்ச், நோர்வே ஓவியர்.
- 1966 – த. மு. சபாரத்தினம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி.
- 1967 – அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், கருநாடக இசை வித்துவான்.
- 1975 – தியடோர் சாமர்வெல், ஆங்கிலேய மருத்துவர்.
- 1975 – பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார், வீரகேசரி நாளிதழைத் தொடங்கியவர்.
- 1989 – சால்வதோர் தாலீ, எசுப்பானிய ஓவியர்.
- 2014 – எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா, இலங்கை நீதிபதி.
- 2015 – அப்துல்லா, சவூதி அரேபிய மன்னர்.
- 2015 – இரா. இளவரசு, தமிழகத் தமிழறிஞர்.
- 2017 – யாரொசுலாவ் வாச்செக், செக் தமிழறிஞர்.
சிறப்பு நாள்:
- சுபாசு சந்திர போசு ஜெயந்தி (பராக்ரம் திவாஸ் – ஒடிசா, திரிபுரா, மேற்கு வங்காளம்).
தகவல் உதவி: விக்கிப்பீடியா