உணர்வுகளின் விடுகதை - 09
(தொடர்கதை EP 09)

லுஹருக்கு பின் ஏனோ தன்னை அழகுபடுத்தி பார்க்க வேண்டும் போல ரமீஸிற்கு தோன்றியது. தாடியை கொஞ்சம் கத்தரிக்கனும் தலைமுடியை கொஞ்சம் குறைக்கனும் அப்படி செய்யனும் இப்படி செய்யனும் என ஏகப்பட்ட மாற்றங்களை தனக்கு செய்யவேண்டும் என feeling வர Saloon சென்று தன்னை இன்னும் ஐந்து வருடங்கள் குறைப்பதற்கு முயற்சித்தான். சில்மியாவின் Advice க்கு இணங்க ஒரு high quality chocolate pack கும் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வரும்போது மூன்றுமணி. அவனை பார்த்து ஆச்சரியமும் கிண்டலும் கலந்து சில்மியா…..
“Accident ஆகிய உராய்வு காயங்களின் வடுக்கள் முற்றாக போகாமல் அப்படியே இருக்கின்றது இளவரசே! அது ரைஹானா என்ற இளவரசியை மீட்க நடத்திய போராட்டத்தின் விழுப்புண்ணாக காண்பிக்கவோ!? அப்படியானால் தாங்கள் அந்த நாய்க்கும் நன்றி சொல்ல வேண்டும்!இருந்தாலும் தாங்கள் பத்து வயது குறைந்த சிறுவன் போல் இருப்பதால் இது தங்களின் தம்பியாக இருக்குமோ என இளவரசி சந்தேகப்படாமல் இருந்தால் சரிதான்!”
என்றதும் ஒரு வெட்கச் சிரிப்பை உதிர்த்துவிட்டு இவன்….
“என் இளவரசிக்காக அன்பு பரிசொன்றும் இருக்கின்றது அன்னமே!”
என்றதும் அவள்…
“அடிங்.. அன்னம் எம்பீங்க அந்தப்புரத்து சேவகி எம்பீங்க கடைசியில நான் தங்கச்சி என்பதையே மறந்துடுவீங்க! செல்லாது செல்லாது இனி நீங்களே பார்த்துகங்க!”
என்றவளிடம்…
“Please மா please மா கொடுத்திடு first & last”
என கெஞ்சும் போதே கையில் இரண்டு பார்சல்களை எடுத்துக் கொண்டு சிற்றப்பாவும் ரமீஸின் தந்தையும் வருவது தெரிந்தது.
” மகள்! இதெல்லாம் ஒழுங்கா எடுத்து வைங்க!”
என சில்மியாவிடம் சிற்றப்பா கூறவும் அந்த பார்சல்களை எடுத்துக் கொண்டு ரமீஸை பார்த்து கண்சிமிட்டி விட்டு உள்ளே எடுத்துச் சென்றாள் சில்மியா.
” மகன் இங்க வந்து உக்காருங்க கொஞ்சம் உங்க கூட பேசணும்!”
என சிற்றப்பா கூறவும்
“சரி சாச்சா”
என சொன்று சோபாவில் சற்று ஓரமாக அமர்ந்தான் ரமீஸ்.
“மகன் உங்க விசயத்த சாச்சா சொன்னாரு இன்னைக்கு அவங்க வீட்டுக்கு போறதா இருக்கோம் சும்மா போறதா இருந்தாலும் எங்க நோக்கத்தை சம்பிரதாய பூர்வமா போட்டு வைக்கதான் போறோம். இன்னும் அந்த புள்ளயோட வாப்பா Business ல இந்தியா பெய்த்து வரல. அவுங்க உம்மாவ பொறுத்தவர விசயம் தெரிஞ்சாலும் மேற்கொண்டு அவகிட்ட பேசுறது முறையில்ல. மிச்சத்த சாச்சா அவர் வந்ததுக்கு அப்புறம் பேசிட்டு எங்களுக்கு மேற்கொண்டு என்ன செய்யனும் தகவல் தருவாரு. அமைஞ்சிரிச்சுன்னா ஆக கூடினா இரண்டு மாசத்துக்குள்ள கல்யாணத்த முடிக்கணும் உங்க கருத்த சொல்லுங்க!”
என்றார் தந்தை.
“ஆமா இந்த விஷயம்லாம் நாள் நீட்டிகிட்டு போறது நல்லதில்ல!”
என்றார் சித்தப்பா.
‘இரண்டு மாசமா!?’ திக்கென இருந்தது ரமீஸிற்கு. இருந்தாலும் சரியென தலையாட்டினான்.
“செலவு அது இதுன்னு யோசிக்காதிங்க அதெல்லாம் பார்த்துக்கலாம் இன்ஷா அல்லாஹ்”
என சிற்றப்பா சொன்ன போதே அஸருக்கு அதான் சொன்னது.
“மாஷாஅல்லாஹ் நல்ல சகுனம். தொழுதிட்டு ரெடியாகுங்க நாலு வீடு தள்ளிதானே இருக்கு எல்லோருமா சேந்து பொடி நடையாவே போயிடலம். பொண்டுங்க முன்னாடியே போகட்டும்”
என கூறியவாறு சிற்றப்பா எழுந்தார். பள்ளிக்கு சென்று வந்தபோது ரமீஸின் தாய் சின்னம்மா சில்மியா ஆகியோர் அழகாக பொதி செய்யப்பட்ட பொருட்கள் சிலதை எடுத்துக்கொண்டு ரைஹானா வீட்டுக்கு செல்ல தயாராக இருந்தனர். இவனுக்கருகில் வந்த சில்மியா….
“என்னையும் செப்பு தூக்க வச்சிட்டீங்க”
என கண்ணடிக்க…
“தோள் கொடுப்பாள் தோழி ஆனாலும் வாங்கியதை கொடுக்க முடியாமல் தவிக்கிறான் இளவரசன்!”
என்றான் இவன். அவர்கள் சென்று பத்து நிமிடத்தில் இவர்கள் மூவரும் சென்றனர். அழகான நிறப்பமான வீடு சொன்ன சம்பவங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் இருந்தது. ரைஹானாவின் தாய்மாமன் முறையான ஒருவர் வரவேற்று உபசரித்தார். ஒரு சில நேரம் ரைஹானாவின் தாயிடம் தகவல் சொன்னதன் பின் இந்த ஏற்பாடுகளை செய்திருக்கலாம். அழகான அன்பான உபசரிப்பு கிடைத்தது. இடைக்கிடை வெளியே வந்த சில்மியா கண்ணையும் மூக்கையும் காட்டி இவனுக்கு பழிப்பு காட்டினாள். இந்த சந்தோசப் பொழுதுகள் தொடரவேண்டுமென ரமீஸ் பிரார்தித்தான். விடைபெற்று வந்த பின்பும் அந்த இனிய நிகழ்வுகள் அவனை சுற்றி ஓடிக்கொண்டே
இருந்தது.
“ஹ்ம்ம் யோசனை பலமாயிருக்கு!”
என்றவாறு முன் முற்றத்தில் கதிரை போட்டு தனியாக அமர்ந்திருந்த ரமீஸிடம் சில்மியா தேநீர் கோப்பையை நீட்டியவாறே கேட்டாள்.
” வா வா உன்னத்தான் எதிர்பார்த்தேன் உள்ளுக்கு என்ன பேசிகிட்டாங்க?”
என்றவனிடம்…
“வெறும் சம்பிரதாய பூர்வமாக பேசினாங்க தவிர இதபத்தி எதுவும் பேசல ஆனா ஒரு முக்கியமான விசயம் உங்க கிட்ட சொல்ல இருக்கு ஏன் surprise னும் சொல்லலாம்.”
என்றவளிடம்…..
” surprise லாம் வேணாம்….. சும்மா சொல்லிடு நாளைக்கு நான் போகனும்”
என்றவனிடம்….
“ரைஹானா முதல்ல உங்க கூட பேசணும்னுதான் சொன்னாள் அதுவும் நீங்க போறதுக்கிடையில என்று ஆனா திடீரென முடிவ மாத்திகிட்டு ஒரு letter தாரதாவும் உங்ககிட்ட குடுத்திடுன்னும் சொன்னாள்!”
என்றாள்.
“letter ஆ எங்க குடு குடு ”
என்றவனிடம்….
“அவசரத்த பாரு நாளைக்கு காலையில வீட்டுக்கு என்ன வரச்சொன்னா so காலை வரைக்கும் wait பண்ணுங்க!”
என்றவளிடம்….
“ஒரே ஒரு help ஒருதடவை meet பண்ணனும் !?”
என்றான்.
“என்னது? இது உங்களுக்கு சரியாப்படுதா? உங்க Out of policy நீதி நேர்மை மார்க்கம் ஹராம் ஹலால்லாம் எங்க போச்சு!?”
என்றவளிடம்….
“அதுவும் சரிதான் ஆனா மனசுல இப்படி ஒரு தப்பான குடைச்சலான பாகம் இருக்குன்னு இப்பதான் புரியுது என்ன பண்றதுன்னு புரியல! ம்ம்ம் ஒரு week ல இவ்வளவு மாற்றங்கள் தந்தவன் நல்ல முடிவையும் தரணும். ஏன்னா படிக்கிற காலத்தில கூட விளையாட்டு தனமாகூட இந்த Love எங்கிற பாகத்துக்குள்ள போகல்ல. சொல்லப்போனா பாவமா ரொம்ப தப்பா தெரிஞ்சிது ம் இப்போ ஒருவகையில சுயநலத்துக்காக Compromice ஆக பார்க்கிறேன்!”
என்றவன் இஷாவுக்கு அதான் ஒலிக்க
“பள்ளிக்கு போயிட்டு வாரன்”
என எழுந்து சென்றான்.
தொடரும்…
எம்.யூ.ஏ.ரஹீம்.