உணர்வுகளின் விடுகதை 08

உணர்வுகளின் விடுகதை - 08

(தொடர்கதை EP 08)

தங்கை பஸ்லியாவின் கணவன் குடும்பத்துக்கு ஏற்றால் போல் கிடைத்தது பழகிய சிறிது நேரத்திலேயே ரமீஸிற்கு புரிந்துவிட்டது.

“எனக்கென்னா கோப்பி பிடிபடல!” 

என சலீம் ரமீஸை பார்த்து கண்ணடித்து கூற…

“No no கட்டார்ல இருந்து வந்ததுக்கு ஒரு best Coffee இன்னைக்கு தான் கிடைச்சிது!” 

என பஸ்லியாவின் கணவன் கூறிய போது ரமீஸிற்கு ஏதோ Award கிடைத்த திருப்தி முகத்தில் தெரிந்தது. அதற்கு சலீம்…

“ஆகா இனி நாமல்லாம் தேவல்ல உனக்கு support க்கு ஆள் கிடைச்சாச்சி!”

என்றதும்… 

“யாரு மச்சான் coffee ஊத்தினது?”

என பஸ்லியாவின் கணவன் கேட்க சலீம்….

” உங்க தங்கச்சி தான்!” 

என கூற… 

“ஓ மச்சாண்ட wife ஆ!” 

என அவர்கூற…. 

” இல்ல மச்சான் இவன் ஓவரா குழப்புறான்!” 

என ரமீஸ் கூற…. தொடங்கிய அறிமுகம் அந்த மூன்று நாளைக்குள் ரைஹானா விசயத்தில் அவரையும் enter ஆக்கியது. அதன்பின் பஸ்லியாவை கணவன் ஊரில் விட்டுவந்த பின் கவலையும் கலகலப்பும் போன நாட்களென இரண்டும் கடந்தது.

சலீமும் போய்விட்டான். ரமீஸும் தனது விசயத்தை பேசும் சூழ்நிலை இல்லையென ஊகித்தவாறு.

“சாச்சா எனக்கும் ஏகப்பட்ட வேலை pending உம்மா வாப்பாவ அந்திக்கு கூட்டிண்டு போய் ஊர்ல விட்டுட்டு நாளைக்கு duty யில joint ஆகனும்!” 

என சிற்றப்பாவிடம் கூறினான்.

” ஏன் மகன்? அப்படி அவசரமா போகனும்னா நாளைக்கு போகலாம் இன்னைக்கு அந்திக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு 4.30 மணிக்கெல்லாம் ரெடியாகி இருங்க!”

என்றுவிட்டு…. 

“நான் town வரைக்கும் கொஞ்சம் போயிட்டு வாரன்” 

என கிளம்பினார். அன்றைய நான்கு மணி ரமீஸ் வாழ்க்கையில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்கதாக அமைய போவது தெரியாமல் சரியென தலையாட்டினான். சிற்றப்பா சென்றதும் இதையெல்லாம் அவதானித்துக் கொண்டிருந்த சில்மியா இவனருகில் வந்து….

“இன்னைக்கு ரைஹானா வீட்டுக்கு போவதா பெரியப்பா பெரியம்மா கூட வாப்பாவும் உம்மாவும் நேத்தி ராவு பேசிகிட்டிருந்தாங்க அதத்தான் வாப்பா surprise வச்சுட்டு போறாரு. இன்னும் ரைஹானாட வாப்பா இந்தியாவுல இருந்து வரல. ஆனாலும் ஒரு சபபுக்காக போயிட்டு வாறது நல்லதுன்னு பேசிகிட்டாங்க!” 

என்றதும் சந்தோசம் மனதில் கரைபுரண்டோட 

“அடி உனக்கு சில்மியா ன்னு பெயர் வச்சதுக்கு நோக்கியா ன்னு வச்சிருக்கலாம்! ஒரு நோக்கமாதான் சுத்திகிட்டிருக்கே!” 

என்றான் இவன்.

“ரைஹானோட best friend எங்கிற வகையில இந்த நல்ல விசயத்துல என்னோட Involvement with support எப்பவும் இருக்கும்.” 

என்றாள் சில்மியா.

“அப்போ இந்த வேலையில ரொம்ப experience இருக்கோ?” 

என்றான் ரமீஸ். சற்று கோபப்பட்ட சில்மியா…

“நாநா நான் உங்க தங்கச்சி. School ல சரி இப்போ சரி அதபு ஒழுக்கம் எங்கிற விஷயத்தில நான் எப்படி எங்கிறது உங்களுக்கு நல்லா தெரியும். இது வேற. அவளோட சூழ்நிலை தெரிஞ்சா நீங்க இப்படி பேச மாட்டீங்க!” 

என்றாள்.

“அப்படி என்ன சிக்கல் இருக்கு?”

இதுதான் விபரங்களை கறக்கும் சந்தர்ப்பமென கேள்வியை போட்டான்.

“உண்மையை சொல்லனும்னா நானும் எங்க வீடும் தான் அவளுக்கு ஒரு புது நம்பிக்கையை கொடுத்துது. பெண்கள கறாரா நடத்தனும் எங்கிறது அவளோட வாப்பாட policy யோ என்னதோ அவங்க உம்மாவும் அவளும் அதைத்தான் அனுபவிக்கிறாங்க. அவளோட ரெண்டு தம்பிமாருக்கும் இருக்கிற கவனிப்போட பார்க்கும் போது இவங்கமேல சந்தேகம் அவநம்பிக்கை இப்படி ஏகப்பட்ட சிக்கல் அவங்க வீட்டுக்குள்ளயே இருக்கு! ஒரு பெண் எங்கிற வகையில வெளியாடி சொல்ல முடியாத எத்தனையோ பிரச்சினைங்க அவள் கிட்ட இருக்கு. இத்தனைக்கும் கண்டிப்பான மனுசன் எங்கிற நல்ல பெயர்தான் குடும்பத்திலயும் சமூகத்திலயும் அவங்க வாப்பா ஏற்படுத்தி வச்சிருக்காரு! இப்ப கூட அதநம்பித்தான் வாப்பா அவர்கிட்ட உங்க விசயமா பேச இருக்கிறார். அவளுக்குள்ள இருக்கிற ஆற்றல் ஆளுமை எல்லாத்தையும் negative ஆ பார்க்கிற ஒருத்தர் வாப்பாவா கிடைச்சதால ஏற்பட்ட பாதிப்பில இருந்து மீள நினைக்கிறா. அது நம்பிக்கையான ஒருத்தன் கணவனா கிடைச்சா நடக்குமென எதிர்பாக்கிறா. But அந்த நம்பிக்கைக்காக அலையல….! தனியா முயற்சிக்கக்கூட இல்ல! ஏன்னா நம்பிக்கை எந்த ஆம்புள மேலயும் வரல! ஆனா உங்கள அவளுக்கு பிடிச்சிருக்கு. அவளது நம்பிக்கை என்ற கனவுக்குள்ளாடி நீங்க மட்டுமே ஒரு ஹீரோவா enter ஆகிட்டீங்க. இந்த 22 வயசுல first time தன்னோட நியாயமான எதிர்பார்ப்பு சாத்தியமாகுங்குற சந்தோசத்தோட இருக்கா! இது போதுமா இன்னும் வேற ஏதாச்சும் கேட்கனுமா அருமை நாநாவே!” 

என்றவளிடம் அவன்…

“So நான் அவள் தப்பிக்க பயன்படுத்தும் ஒரு tool அவ்வளவு தானா?” 

என்றவன் கூறியதும்…

“தப்பு நாநா அவள் உங்க மேல கொண்ட நம்பிக்கை தான் காதல்! இந்த குடும்பம் அதோட இருக்கிற உங்க ஈடுபாடு நீங்க எங்க மேல காட்டுற அன்பு இதுக்கும் மேல சில்மியா எங்கிற நான் குடுத்தீற certificate எல்லாம் அவ தேடிக்கிட்டிருந்த விடைகளுக்கு பொருத்தமா அமைஞ்சிரிச்சு! அந்த நம்பிக்கைய வாழவைக்கிற பொறுப்பு உங்களுக்கு இருக்கு. ஒரு நல்ல பொண்ணு மனசுல சுலபமா ஒரு ஆணால இடம்புடிக்க முடியாது. அவள் ஒரு நல்ல பொண்ணு. இப்போ நான் அவங்க வீட்டுக்கு தான் போறேன். ஏதாச்சும் சொல்ல இருக்கா?”

என்ற சில்மியாவிடம் 

“அப்படின்னா உன் friend எங்கிற இளவரசியை திருமணம் எங்கிற பல்லாக்கில் வைத்து மீட்க இந்த இளவரசன் தயார்னு சொல்லு!”

என்றபோது சில்மியா…

“ம்கும் சுத்தம்! முன்ன பின்ன Love பண்ணவங்கள கண்டிராத ஒரு பேங்கு நாநாவின் தங்கையாய் ஒரு 100 ரூபா chocolate வாங்கி கொண்டு போய் குடுத்து நானே சொல்றேன்!”

என்றவளிடம்…. 

“ஓ அனுபவமோ!?” 

என்றான் இவன். அதற்கு சற்று கோபத்துடன்…..

“வாங்கி திங்கிறதுக்கெல்லாம் காதல் வரனும்னு இருந்தா நாங்க school போற காலத்திலேயே நிறைய ok பண்ண வேண்டி இருந்திருக்கும். ஆனா Confirm பண்ண பின்னாடி வாங்கி கொடுத்தா அது வேற லெவல்!” 

என கூறியவாறு சென்றாள் சில்மியா.

  எம்.யூ.ஏ.ரஹீம்.                   

 தொடரும்…

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!