உணர்வுகளின் விடுகதை 07

உணர்வுகளின் விடுகதை - 07

(தொடர்கதை EP 07)


Wedding hall ல் ஏற்பாடுகள் சிறப்பாக நடந்திருந்தது. ரமீஸும் சலீமும் Over role எல்லாவற்றையும் பார்த்துவிடவும் மணப்பெண்ணுடன் Car வரவும் சரியாக இருந்தது. அலங்காரத்தை ஒரு மீள்பார்வை பார்த்துவிட்டு மணமேடையில் அமர வைப்பதற்காக அதற்கென இருந்த அறைக்கு அழைத்துச் சென்றனர். ரமீஸின் உறவினர்கள் சிலர் தாமாக முன்வந்து அங்கிருந்த வேலைகள் சிலதை பொறுப்பெடுத்தனர். ளுஹர் தொழுத பின் மணப்பெண்ணை மேடையில் அமரவைப்பதாக இருந்தது. பெண்கள் பகுதி பிரத்தியேகமாக இருந்ததது. மணப்பெண்ணுடன் வந்தவர்களை உன்னிப்பாக பார்த்த ரமீஸின் கண்கள் ஏமாற்றம் கண்டது. போதாக்குறைக்கு சில்மியா சைகை மூலம் பெண்கள் பகுதியின் Main door பக்கமாக இருந்து இவனை சைகை மூலம் அழைத்தாள். அருகில் சென்றவனிடம்….
“தேடி ஏமாறாதீங்க அவள் வரல்ல” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

ரைஹானா வருவாள் என்ற ஆழமான எதிர்பார்ப்புக்கு ஆப்பு விழுந்தது. ஆனால் திருமண வீட்டில் எவ்வித குறையும் வரக்கூடாது என்பதற்காக ஒட்டு மொத்த மனதையும் ஒன்றுபடுத்தி வரவேற்பு பகுதிமுதல் kitchen வரை முழு கவனத்தையும் குவித்தான் ரமீஸ். சலீமின் பலமான உதவியும் சேர நிகழ்வுகள் சிறப்பாக நடந்தது. குறையற்ற விதத்தில் எல்லாம் சிறப்பாக நிகழ்ந்து முடிய மூன்று மணியாகிவிட்டது. சலீமுடனும் மற்றும் சில நண்பர்களுடனும் ஒன்றாக சாப்பிட அமர்ந்த போதும் உணவு தொண்டை குழியை தாண்டி இறங்க மறுத்தது. ” டேய்! இவனுக்கும் wedding fever பிடிச்சுட்டுடா!” என நண்பனொருவன் கிண்டலடிக்க சலீமுக்கு சிரிப்புடன் புறக்கேறியது. இதையெல்லாம் கவனிக்காமல் ரமீஸின் சிந்தனை அவள் வராத ஏமாற்றத்தில் தவித்தது. இன்று எப்படியும் சில்மியாவிடம் தானே சிலதை கேட்பதென முடிவு செய்தான். அஸர் பிந்தியே வீட்டுக்கு வர முடிந்தது.

வீட்டுக்கு வந்தபின்பும் நிறைய வேலைகள் இருந்தன. “மகன் நீங்க போய் கொஞ்சம் rest எடுங்க. நாங்க பார்த்துக்கிறோம்” என இவனது தந்தை கூற சிற்றப்பா ஆமோதித்து தலையாட்டினார். ரமீஸிற்கும் ஓய்வு தேவையாக இருந்தது. “சரி வாப்பா” என கூறியவாறு மெதுவாக மாடிப்படி ஏறிய போது கால் வலியை உணர்ந்தான். இவன் ஏறிச் செல்வதை கண்ட சலீம் ஓடிவந்து ” சொன்னா நான் வரமாட்டனாடா” என்ற போது “இல்ல மச்சான் வேலைங்க இருக்கு அதுதான் உன்ன பேசல” என்றவாறு மெதுவாக ஏறினான். இதையெல்லாம் சற்று தூரத்தில் இருந்து இரு சோடி கண்கள் அவதானிக்க தவறவில்லை.

“ஹ்ம்ம் இது காதலா கருணையா அக்கறையா!?” என சில்மியா கேட்க சற்று திடுக்கிட்ட ரைஹானா….
“ஒரு நம்பிக்கையின் மீதான கவலை என சொல்லலாம்” என பதில் சொன்னாள். அதற்கு……
“அதுதான் உன் நம்பிக்கையை Wedding hall ல ஏங்க வச்சியோ!?” என்ற சில்மியாவை பார்த்து…..
“என் வீட்டோட situation தெரிஞ்சும் இப்படி பேசுறியே! பாவம் உம்மா அவங்க கூட வரமுடியலைன்னு ரொம்ப கவலபட்டாங்க. ஒரு பெண்ணுக்கு வாப்பான்னா ஹீரோ. ஆனா எனக்கு…. (ஒரு ஏக்க பெருமூச்சுடன்) Dada ன்னு Montessori வயசுல அடுத்த பிள்ளைங்கள பார்த்துட்டு கூப்பிட்டதுக்கே காய்ச்சல் வார அளவுக்கு அடிச்சாரு! போதாக் குறைக்கு உம்மாவை வேற அடிச்சாரு! மூத்தது பொம்புளையா பிறந்தது அவரோட கெட்ட காலம்னு சொல்லாத நாளே இல்ல. (என்று அவள் சொல்லும் போதே அவளது கண்கள் கலங்கி கண்ணீர் எட்டிப்பார்த்தது) இந்த குடும்பத்த பார்த்து நான் எவ்வளவு ஆச்சரிய படுறேன் தெரியுமா? நினைவு தெரிஞ்ச நாள்ள இருந்து நான் சுமந்து வார ஏக்கமும் எதிர்பார்ப்பும் கொஞ்ச நேரமாவது இங்க வந்தா கிடைக்கிது.” என்ற போதே “அடி அதுக்கெல்லாம் சேர்த்து தான் எங்க family யா என்னோட மைனியா மாறப்போறே be happy டா” என்ற சில்மியா “வாடி வாடி பஸ்லியா தாத்தாவ கொஞ்சம் கொலப்பிட்டு வருவம்” என ரைஹானாவை கையை பிடித்து இழுத்து சென்றாள்.

ரமீஸிற்கு உறக்கம் வரவில்லை. வுழூ செய்துவிட்டு வந்து மஹ்ரிப் இஷா இரண்டையும் கதிரையில் இருந்தவாறே சேர்த்து தொழுதான். நீளமாகவும் உருக்கமாகவும் தனது மனப்போராட்டத்திற்கு நல்ல முடிவை கேட்டு நின்றான். ஓரளவு அமைதி கிடைத்த திருப்தியில் இருந்த போதே கதவு தட்டப்பட்டது. போய் திறந்தான்; அங்கே சலீம் ஸலாம் சொல்ல இவன் பதில் கூறியபின். “ஒரு நல்ல செய்தி ஆனால் அதில ஒரு problem” என்றான் சலீம். “ஏற்கனவே குழம்பி போய் இருக்கேன் தெளிவா செல்லு” என்றான் இவன். “சாச்சி ரைஹானாட உம்மா கிட்ட கேட்டிருக்காங்க அவங்க ரொம்ப சந்தோச பட்டாங்க. அவங்கள பொறுத்தமட்டில மட்டும் தான் ஆனா….” என்ற போதே…..
“என்ன என்ன என்ன problem?” என ரமீஸ் சற்று tension ஆகிவிட்டான்.
“இந்த tension தாண்டா உன்கிட்ட பிடிக்கல இதுக்கு முன்னாடி எப்பவுமே உன்கிட்ட இருக்கல BP யும் Sugar ம் சொந்தக்காரங்க போல Love ம் tension ம் சொந்தக்காரங்க போல. தயவு செய்து நீ tension ஆகாம இருந்தா நான் மேற்கொண்டு சொல்றன். இல்லைன்னா சொல்லல” என சலீம் சொன்னதும்…..
” ok டா நீ சொல்லு” என்றான் ரமீஸ்.
“அதாவது உன் கதையில வில்லனே sorry வில்லங்கமே ரைஹானாட வாப்பா தான். உனக்கும் அவருக்கும் ஒத்துப்போகும் ஒரே விசயம் இப்ப உன்கிட்ட வந்திருக்கே இந்த tension தான்! மத்தபடி எட்டாப் பொறுத்தம். ஆனாலும் ஒரு சின்ன நம்பிக்கை சாச்சா மூலமா அவரை சமாளிக்க முடியும்னு சாச்சி நினைக்கிறாங்க but one thing இது வீட்டில விருப்பபட்டு நடக்கிற விசயம்போல இருக்கனும் இல்லைனா பருப்பு வேகாது” என்று விட்டு “இப்போவாவது கொஞ்சம் happy யா இரு உன் புதிய மச்சான் ரொம்ப இயல்பா பழகுறாரு! வா போய் பேசிட்டு வருவம்” என சலீம் ரமீஸை அழைக்க இருவரும் கீழே வந்து பஸ்லியாவின் ரூமுக்கு சென்றனர்.

வாசல் கதவு திறந்திருக்க அங்கு புதுமாப்பிள்ளை மட்டும் அவரது நண்பர்கள் சிலரோடு பேசிக் கொண்டிருந்தார். “Excuse me” என பின்னாலிருந்து சில்மியாவின் sound வர ரமீஸும் சலீமும் திரும்பி பார்க்க “யாராச்சும் வந்தா அனுப்பதான் பாத்திட்டு இருந்தோம் இத உள்ள குடுங்க கொஞ்சத்தில கோப்பி எடுத்துட்டு வாறோம்.” சில்மியாவும் ரைஹானாவும் இரண்டு பலகார மரவைகளை நீட்டினர். மரவைகள் கைமாறியதும். “கோப்பி ரைஹானா போட்டது sample பார்த்து decide பண்ணுங்க ரமீஸ் நாநா” என சில்மியா சொன்னதும் ரைஹானா அவளை முறைத்தாள்.

தொடரும்...

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!