உணர்வுகளின் விடுகதை 06

உணர்வுகளின் விடுகதை - 06

(தொடர்கதை EP 06)

சலீமுக்கு இந்த விசயத்தில் ரைஹானாவின் தந்தை மூலம் மிகப்பெரிய சிக்கல்கள் இருப்பதாக உணர முடிந்தது. 

‘ரமீஸின் சித்தப்பாவை பாவித்து Smooth ஆக முடிக்கலாம்னு பார்த்தா கிணறு வெட்ட பூதம் கிளம்புவது போல இருக்கே!? ரமீஸும் நீதி நேர்மை அது இதுன்னு நிறைய rules லாம் follow பண்ணுவான்….. ஆனால் இதையெல்லாம் சொன்னால் அவன் ரொம்ப tension ஆகிடுவான். So முதல்ல positive ஆ சொல்லி பிறகு வாழைப் பழத்தில் Injection அடிக்கிற மாதிரி ஒவ்வொன்றையும் புரிய வைக்கனும்’….

என மனதில் நினைத்தவாறு room ற்கு சென்று கதவை திறந்தான். அங்கு ரமீஸ் புத்தாடை அணிந்து புன்சிரிப்புடன் சலீமை பார்த்தான். 

“டேய் dress ரொம்ப அசத்தலா இருக்குடா! யாரோட Selection?” 

என சலீம் கேட்க

“நான் இன்னும் தனிக்கட தாண்டா!…. நானேதான் select பண்ணினேன். சரி சில்மியா கிட்ட கேட்டியா? என்ன சொன்னா?” 

என்றவனிடம்….

“சரி சரி ரொம்ப வடியுது வாய துடச்சுக்க நானும் ரெடியாகிட்டு வந்து விசயத்தை சொல்றேன்.” 

என்றவாறு இவனது பதிலை எதிர்பார்க்காமல் wash room சென்றான். ரமீஸிற்கு இருப்பு கொள்ளவில்லை…. 

‘எப்படியோ அந்த அப்பாடக்கர் சாலி நானாவை கணக்கா lock பண்ணனும் இல்லைன்னா பருப்பு வேகாது. இதுக்கு நடுவில் இவனுக்காக ஒரு சமாளிப்பையும் தயாரிக்கனும்.’ 

என சிந்தித்தவாறே சலீமும் ready ஆனான். அப்போது கதவு தட்டப்பட்டது. ரமீஸ் சென்று திறந்து பார்த்ததும் அங்கு சிற்றப்பா நின்றார். 

“மகன் நீங்க ரெண்டு பேரும் ஹோலுக்கு போயி அங்கு வாரவங்கள கவனிங்க. Bike ல வேணாம் Van நிக்குது. Driver கிட்ட சொல்லிட்டேன்” என்றவரிடம்….

“சரி சாச்சா இப்ப வாறோம்” 

என்றான். காலை ஆகாரத்தை அவசரமாக சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது தான் மணப்பெண் தங்கை பஸ்லியா இவனை பார்க்கனும்னு சொன்னது ரமீஸிற்கு நினைவுக்கு வந்தது. சலீமின் கைத்தாங்களுடன் மெதுவாக படியிறங்கிய போது காலில் வலி தெரிந்தது. அதை காட்டிக் கொள்ளாமல் அவனது trade mark அமுல் பேபி புன்னகையை காட்டியவாறு சலீமிடம்….

“மச்சான் நான் பஸ்லிய கொஞ்சம் பாத்திட்டு வாரன்” 

என மணப்பெண் இருந்த அறையை நோக்கி சென்றான். கதவை தட்டியதும் யாரோ ஒரு பெண் தான் கதவை திறந்தாள். மணப்பெண்ணை அலங்கரிக்க வந்த பெண்ணாக இருக்கலாம். 

‘என்ன!?’ 

என்பதுபோல் ஒரு பார்வை தெரிய…

“நான் பஸ்லியாவோட நாநா அவங்க வரச் சொன்னாங்க!” 

என சொல்லும் போதே அந்த பெண்ணின் பின்னால் இருந்து சில்மியா….

“அது எங்க நாநா தாத்தா தான் வர சொன்னாங்க!” 

என்ற போது கதவு முழுதும் திறக்கப்பட்டது. தங்கை பஸ்லியா ஒரு தேவதை போல அலங்கரிக்க பட்டிருந்தாள். ரமீஸை கண்டதும் பஸ்லியாவின் கண்கள் கலங்கியது. 

“Nothing டா I am all right” 

என்றவனிடம்….

“நல்லாவே அடிபட்டிச்சா? இப்போ எப்படி இருக்கு?” 

என்றாள்.

“இந்தா இப்ப நான் hall க்கு போய் அங்கிருக்கிற வேலைல்லாம் செய்யப் போறேன். சும்மா அலட்டிக்காம happy யா இரும்மா. சரி நான் போயிட்டு வாரன்.”

என்றவனிடம்…. 

“நல்லாயிருக்கு நாநா புடிச்சிருக்கு”

என பிரேஸ்லெட்டை காட்டினாள். ஒரு சந்தோச புண்ணகையை உதிர்ந்து விட்டு திரும்பி கதவுப்பக்கம் வரும்போது தான் அங்கு கதவு மூளையில் இதெல்லாவற்றையும் அவதானித்தவாறு ரைஹானா நிற்பது தெரிந்தது. அவளது முகத்திலும் கவலையின் ரேகைகள் பூத்திருந்தது.  ஒரு புன்னகையை உதிர்த்தவாறு அந்த பார்வையை எதிர்கொள்ள சக்தியற்று கதவை திறந்து வெளியே வந்தான் அவனை தொடர்ந்து வெளியே வந்த சில்மியா….. 

“நாநா ஒரு நிமிசம்!” 

என்றாள். ‘என்ன?’ என்ற கேள்விக்குறியுடன் இவன் நிற்க…

” best selection நானா All the best”

என கூறி அவனது கையை பிடித்து குலுக்கிவிட்டு…. 

“நான் பிரேஸ்லெட்டை மட்டும் சொல்லல!”

என்றுவிட்டு கண்ணடித்துவிட்டு மீண்டும் ரூமுக்குள் சென்றாள். ரமீஸிற்கு உடலெங்கும் ஒரு அதீத புத்துணர்ச்சி ஏற்பட்டது. உடல் வலிகள் பஞ்சாய் பறந்து உணர்வுடன் hall க்கு போக புறப்பட்டான்.

தொடரும்…..

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!