உணர்வுகளின் விடுகதை - 05
(தொடர்கதை EP 05)

“சலீம் please டா I am all right நடந்தத சொல்லு!”
என்றான் ரமீஸ்.
“அதானே சொன்னேன் நிலமை உனக்கு சாதகமா தான் இருக்கு. அத சொல்ல பார்த்துகிட்டு இருந்தப்பதான் நீ கவுந்து காயப்பட்டு வந்தே. அல்லாஹ் இத்தோட காப்பாத்தினான்.”
எனக் கூறியவாறே கைத்தாங்களாக ரமீஸை Doctor இடம் கூட்டிப்போனான் சலீம். சிராய்ப்பு காயங்களுக்கு மருந்திட்டு பலமாக அடிபட்ட இடதுகாலை x-ray எடுத்து பார்த்த போது பயப்படும் படியாக எதுவுமில்லை.
“அதானே சொன்னேன்டா ஒன்னும் இல்லைன்னு!”
என்றவனிடம்….
“ஓ ரைஹானாட துஆ கபூலாகியிருக்கும்.”
என்ற சலீமை பார்த்து ரமீஸ் முறைத்தாலும் அவளின் பெயர் multiple boost ஆக அவனுக்கு Extra energy யை கொடுத்ததை உணர்ந்தான். hospital சம்பிரதாயங்கள் முடித்து மீண்டும் வீடு நோக்கி பயணித்த போது….
“இல்ல மச்சான் சும்மா சுத்தி வளைச்சி போறதவிட direct ஆ போகலாம்னு விசயத்தை சாச்சா கிட்ட போட்டுட்டேன்!”
என சலீம் புதிரை உடைத்தான். ஒருவகை electric shock பட்டதுபோல் ரமீஸிற்கு இருந்தது.
“அல்லாவே நான் சாச்சாட மூஞ்சிய எப்படிடா பார்ப்பேன்!”
என்றவனிடம்…
” ஏண்டா முறை தவறி நடந்து அந்த விசயத்தை சொன்னது போல tension ஆகுறே!? உனக்கும் 25 வயசு உன் friend எனக்கு திருமணமாகி Baba கிடைக்கவும் இருக்கு. பொறுப்புன்னு உனக்கு ஒன்னுமில்லை. ஒரு பொண்ண பார்த்தே புடிச்சிருக்கு அத முறைப்படி ஹலாலா நிறைவேற்ற நினைக்கிறே what’s wrong டா!?”
என்ற சலீமிடம்….
“அது சரிடா சாச்சா மேல வச்சிருக்கிற மரியாதையில எந்த குறையும் வந்திடப்படாது!”
என்றான்.
“க்கும் சாச்சாகிட்ட கேட்டு Love பண்ணாப்ல….. ஆனா சாச்சா ரொம்ப சந்தோச பட்டாரு! அவசரமா கல்யாணத்த எடுக்கனும்னு வேற சொன்னாரு. உன் உம்மா வாப்பாக்கிட்ட சொல்லிட்டு அவங்க வீட்டில பேசுறதயும் அவரே செய்றதா சொன்னாரு!”
என்ற சலீம்….
“சரி இதுக்கப்புறம் சில்மியாவ வச்சு ரைஹானாவோட பக்கத்த கொஞ்சம் pulse புடிச்சி பார்க்கனும்!”
என்ற போதே வீடுவந்துவிட்டது.
“மச்சான்! நான் normal ஆ நடந்தே வாறேன். இல்லைன்னா கவலப்படுவாங்க!”
என்று 3wheel ல் இருந்து இறங்கிய சலீமிடம் மெதுவாக இடது காலை நிலத்தில் வைத்தவாறு ரமீஸ் கூற….
“யாரு ரைஹானாவா கவலைப்படுவா?”
என சலீம் கிண்டலாக கோட்க அதற்கு பதில் சொல்ல முன்பே இவனது தாய் தந்தை சின்னம்மா சிற்றப்பா என எல்லோரும் அருகில் வந்துவிட்டார்கள்.
” மகன மெதுவா பிடிச்சு கூட்டிண்டு வாங்க!”
என சலீமை பார்த்து அவனது தாய் கூற…
“எனக்கு ஒன்னுமில்லை உம்மா சின்ன அடிதான்!”
எனக் கூறியவாறு வலியை தாங்கியவாறு சாதாரணமாக நடக்க முயன்றான். வீட்டினுள் சென்ற அவன் மாடி ரூமுக்கு செல்ல கொஞ்சம் கைத்தாங்களாக சலீமை பிடித்தபடி படியேற முயன்றபோது சில்மியா ஓடிவந்து….
“நாநா பஸ்லியா தாத்தா உங்கள கொஞ்சம் பார்க்கனுமாம்!”
என்றாள்.
“சரிம்மா நீ போ நான் ready ஆகிட்டு வாறேன்.”
என்று கூறியவாறு சலீமுடன் மேலே ஏறினான் ரமீஸ். கல்யாண வீடு தன்னால் சற்று பதற்றப்பட்டிருப்பதை புரிந்து கொண்ட ரமீஸ் முழு பலத்தையும் பாவித்து சாதாரணமாக நடந்து நிலமையை கலகலப்பாக்க முயன்றான். இதற்கிடையில் அவனது தந்தையும் சிற்றப்பாவும் மாடி room க்கே வந்துவிட்டனர்.
” மகன் நீங்க tension ஆகாதீங்க எல்லா விசயங்களையும் நாங்க பார்த்துக்கிறோம். நீங்க time க்கு hall க்கு வந்திடுங்க.”
என்று கூற….
“நான் normal இப்ப வந்துடுவேன்!”
என இவன் கூறினான். அவர்கள் பத்து நிமிடமளவில் இருந்து பேசிவிட்டு செல்ல மறுபடியும் room கதவு தட்டப்பட்டது. சலீம் கதவை திறந்ததும் அங்கு சில்மியா காலை உணவை கொண்டு வந்திருந்தாள். அதுவும் நல்லதாக போய்விட்டதென மனதில் நினைத்தவாறு அந்த மரவையை கையில் எடுத்து மேசையில் வைத்தவாறு…..
“சில்மியாம்மா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்!”
என்று சலீம் கூற அவளது முகத்தில் சந்தேக ரேகைகள் படற தொடங்கியது.
“இங்க போசறது முறையில்ல நீ wash room போயிட்டு ரெடியாகு.”
என்று ரமீஸிடம் கூறியவாறு மாடிப்படியில் இறங்குமிடத்தில் வைத்து சில்மியாவிடம் Investigation ஆரம்பித்தான் சலீம்.
” நீ பயப்படும்படி ஒன்றுமில்லை நல்ல ஒரு விசயம் தான். அது ok ஆச்சுன்னா உனக்கு கூட மிச்சம் happy யா இருக்கும்!”
என்ற போது…. ‘க்ளுக்’ கென சிரித்த சில்மியா…..
“ரமீஸ் நாநா ரைஹானா Subject தானே!? நல்லா Commerce படிப்பிக்கீங்க அங்க Qc pass ஆகி sale’s room க்கும் போகப்போகுது! நீங்க இப்பதானா row material standard பற்றி பேசறீங்க!? வாப்பா பெரியப்பா பெரியம்மா கிட்டயும் போட்டுட்டாரு வலீமா முடிஞ்சப்புறம் அவங்க வீட்டுக்குப் போய் பேச இருக்காங்க! நீங்க தான் வாப்பாகிட்ட சொல்லி இருக்கீங்க. நான் எல்லாத்தையும் ஒட்டு கேட்டுட்டேன்!”
என்றாள்.
“அட அவ்வளவு speed ஆ நடக்குதா? நீ இங்க இருக்கவேண்டிய ஆளில்ல! எனக்கு ஒரு விசயம் தெரியனும். ரைஹானா இதுக்கு விருப்பமா?”
என்று சலீம் கேட்க….
” அவள் என்னோட best friend. ஆறாம் வகுப்போட பிரிந்து போனாலும் எங்களுக்குள்ள தொடர்பு இருந்திச்சு.அப்புறம் O/L க்கு பிறகுதான் வந்தாள் A/L first year வரை படிச்சிட்டு அப்புறம் School வரல காரணம் கேட்டா class லாம் போக வாப்பாக்கு பிடிக்கல சபபுக்காக Schoolல மட்டும் படிச்சிட்டு அர்த்தமில்லாத Exam செய்ய நானும் விரும்பல. என்னால இதுக்கு மேல போராட ஏலா என்று சொன்னா.”
“இப்ப கூட வாப்பா இந்தியாவுக்கு Business ல போனதாலதான் கொஞ்சம் free ஆ இருக்கா. Next week தான் வருவாரு. அவங்க வீட்ல கல்யாணம் பேசிகிட்டு தான் இருக்காங்க. அவங்க வாப்பாவின் condition க்கு யாரும் அமையாததால இன்னும் சரிவரல. But அந்த வீட்ட விட்டு போகனும் எங்கிறதுல உறுதியா இருக்கா. அது அவளை புரிஞ்சிக்கிற ஒருத்தனா இருந்தா போதுங்கிறதுதான் அவளோட முடிவு. ஒரு தடவ தான் ஒரு பொம்பிள பிள்ளையா பிறந்திட்டேனே என கூறி விம்மி விம்மி அழுதா!”
என்றபோது…
” என்னது இவ்வளவு பெரிய Story இருக்கா!? அதெல்லாம் பிறகு நான் விபரமா கேட்டுக்கிறேன். மற்றது அவங்களோட வாப்பா கொஞ்சம் குழப்பம்னு தெரியும். எனக்கு இப்போ தேவை ரமீஸை அவங்களுக்கு புடிச்சிருக்கா!? என்பதுதான்.”
என சலீம் கூறும் போதே….
“சில்மியா! சில்மியா!”
என அவளது தாய் அழைத்தவாறு மாடியின் கீழ்ப்பக்கம் வந்துவிட்டார்.
“சலீம் நாநா கல்யாணம் முடிஞ்சதும் அந்திக்கு நான் எல்லாத்தையும் சொல்றேன். இதெல்லாம் ரமீஸ் நாநா கிட்ட சொல்லத்தான் இருந்தேன்!”
என்றவாறு படிகளில் இறங்கி சென்றாள் சில்மியா.
தொடரும்….
எம். யூ.ஏ. ரஹீம்.