உணர்வுகளின் விடுகதை 03

உணர்வுகளின் விடுகதை - 03

(தொடர்கதை EP03)

சிற்றன்னை கொடுத்த லிஸ்ட்படி குறித்த கடையில் பொருட்களை வாங்கி திறீவீலரில் எடுத்து சென்று ஹோலில் சேர்ப்பிக்கவும் ளுஹர் பிந்தியது. இவனும் அருகிலிருந்த பள்ளியில் தொழுதுவிட்டு வந்தான். சிற்றப்பாவும் அப்போது தொழுதுவிட்டு ஹோலுக்கு வந்தார். 

“சாச்சா நீங்க வீட்டுக்கு போங்க நான் பாத்துக்கிறேன்!” 

என இவன் சொன்னதும்…. 

“சரி வாப்பா உன்னப்பத்தி தெரியும்தானே!” 

என்று கூறியவாறு அவனது தலையை வருடிவிட்டு அவர் வீட்டுக்கு சென்றார். செல்லும்போது…. 

“அந்த ஸ்டாது அடிக்கிற வேலைக்கு மூனு பேர் வருவாங்க தேவையானதை செய்து குடுத்திடு” 

என்றவாறு pocket ல் இருந்து பணம் கொடுத்தபோது….

“பரவாயில்லை சாச்சா நான் பார்த்துக்கிறேன்” 

என்றதும்….

“உன்கிட்ட நிறைந்த குணமும் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் ஆற்றலும் இருக்குன்னு தெரியும்! ஆனா…”

என்றவாறு அவனது கையில் கொஞ்சம் பணத்தை திணித்துவிட்டு….

 “இது உன்னோட கை செலவுக்கு!”

 என்றுவிட்டு சென்றார். சிற்றப்பா வழமையாக செய்யும் இவ்வாறான அன்பு பரிசை ரமீஸ் எதிர்பார்க்கா விட்டாலும் மறுப்பதில்லை. இன்னும் திருமணமாக இருக்கும் பெரிய தங்கைக்கு அவனது மூன்று மாத உழைப்பில் மிச்சம் பிடித்ததுடன் ஒரு சிறுகடனும் வாங்கி ‘பிரேஸ்லெட்’ செய்திருந்தான். திருமணத்திற்கு முந்தைய நாள் இரவில் சப்ரைசாக அதை கொடுக்கவும் நினைத்திருந்தான்.

இவனுக்கு வேறு சகோதரங்கள் இல்லாத நிலையில் சிற்றன்னை குடும்பம் மீது இவனுக்கு மிகுந்த அன்புண்டு. அந்த சகோதரங்களும் இவனை சொந்த சகோதரமாகவே மதித்தனர். எவ்வளவு தான் கல்யாண வேலைகளில் கவனம் செலுத்தினாலும் ரைஹானாவின் நினைவு இவனை விடுவதாக இல்லை! 

இரண்டுமணி தாண்டியதும் சிறிய தந்தை கூறியதுபோல மூன்று பேர் வந்தனர். அவர்கள் வேலையை தொடங்கினர். அப்போது தம்பி வந்து….

“நாநா நான் இருக்கேன் நீங்க வீட்டுக்கு போய் சாப்பிடுங்க அங்கு பெரியம்மா பெரியப்பாவும் சலீம் நாநாவும் வந்தீர” 

என்றவாறு கையிலிருந்த ஹெல்மெட்டை நீட்டினான்.

“ஓ உம்மாவும் வாப்பாவும் வந்தாச்சா. சலீமை கூட்டிண்டு வரயீந்திதே?”

என்றபோது ஸலாம் சொல்லும் சத்தம் கேட்டது. அது சலீம் இவன் பதில் ஸலாம் சொல்லியவாறு தம்பியின் முகத்தை பார்க்க அவன்…

“நான் அவரோட பைக்லதான் வந்தேன் நாநா” 

என்றதும் சலீம் வந்து கட்டி தழுவவும் சரியாக இருந்தது. 

“வா வா போவம் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்!” 

என ரமீஸ் கூறியதும்…. 

“அப்படி என்னடா தலை போற விஷயம்?”

என சலீம் கேட்க…..

“தலையில்லை இதயம் போர விஷயம்!” 

என யாருக்கும் கேட்காமல் முணுமுணுத்தவாறு ரமீஸ் வேகமாக நடக்க சலீம் பின் தொடர்ந்தான்.

ரமீஸ் கீயை வாங்கி பைக்கை எடுக்க சலீம் பின்னால் அமர்ந்தான். மெயின் ரோட்டை தொட்டதும் வண்டி சீறியது. சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் வந்து அங்கிருந்த ஓபன் கிரவுண்ட் ஒன்றின் மரத்தடியில் வண்டியை நிறுத்தினான். 

“என்னடா மச்சான்! அப்படி என்னதான்  பெரிய விஷயம்!?” 

என்றதும் ரமீஸ் கிளிப்பிள்ளை போல் நடந்ததை ஒப்புவித்தான்.

“விஷயம்னா பெரிசு தான்! ஆனா நீ இவ்வளவு அவசரமா கவுந்துருவேன்னு நினைக்கல!” 

என்ற போது…. 

“இல்ல மச்சான் இப்போ விஷயத்தை damage இல்லாம done பண்ணனும். அல்லது out ல போகாம Dumped  பண்ணனும். வழிய சொல்லுடா!?”

என்றான் ரமீஸ்…..

“கொஞ்சம் பொறுமையா இரு யாருன்னு சொன்னே ரைஹானாவா!? மூனு வருஷத்துக்கு முதல் என்னோட Student. yes நல்ல talent நல்ல result. 

ஆனா படிப்ப பாதியில நிறுத்திட்டா! அவளோட உம்மா ஊருக்கு வந்து Settled ஆகிட்டாங்க… இவ மூத்த பிள்ளை இரண்டு தம்பிங்க ஆனா வாப்பா சாலிஹ் நாநா என்னோட ஊர்தான் தான்….. ஆனா ஆள் கொஞ்சம் கொழப்பம்! யார வச்சு deal பண்ணாலும் அவரோட 3wheelக்கு நாலு tires னு நிப்பாரு. அவரோட wife ட ஊர்தான் இது. உன் சாச்சா family யோட எப்படிங்கிறத வச்சுதான் மேற்கொண்டு என்ன செய்யலாம்னு பார்க்கலாம்!” 

என சலீம் சொன்னதும்… 

“சாச்சா கிட்ட இத பத்தி பேச எனக்கு தைரியம் இல்லடா! Please நீயே பேசுடா! நான் உம்மா கிட்ட சொல்லி வாப்பாவ சமாளிக்கிறன்!” 

என்றான் ரமீஸ். 

“சரி முதல்ல தங்கச்சிட கல்யாண சோலி முடியட்டும். அதுக்கு முன்னாடி ரைஹானாவை கொஞ்சம் clarify பண்ணனும்!” 

என்று கண்ணடித்த சலீமை முறைத்தான் ரமீஸ்.

அஸர் பிந்தியே இருவரும் சிற்றன்னை வீட்டுக்கு சென்றனர். நெருங்கிய, தூரத்து உறவுகள் என நிறையபேர் வந்திருந்தனர். ரமீஸ் குடும்பத்துக்கு மிக முக்கியமான கல்யாணமது…. தாய் வழி சகோதரங்களை பொறுத்தவரை தலைக்கல்யாணமென்றே சொல்லலாம். மூத்த சகோதரியான ரமீஸின் தாய்க்கு மூன்று சகோதரிகள். ரமீஸ் குடும்பத்தின் தலைப்பிள்ளை. அடுத்ததாக சிற்றன்னை மகள் தங்கை பஸ்லியா அதாவது சில்மியாவிற்கு இரண்டு வருடங்கள் மூத்தவள். அவளுக்கு தான் திருமணம். மாப்பிள்ளை கட்டாரில் ஏழுவருடங்கள் இருந்துவிட்டு வந்துள்ளார். மூன்று மாதத்தில் திரும்பவும் சென்றுவிடுவார். ஆறு மாதத்தில் தங்கையை அங்கு எடுப்பதற்கான முடிவில் இருப்பதாக கூறிய பின்னரே சிற்றப்பா விரும்பியதுவரை ரமீஸிற்கு தெரியும். 

ரமீஸ் தங்கை பஸ்லியாவிடம்…

“உனக்கு விருப்பமா?” 

என பேச்சுவார்த்தை நடந்த நேரத்தில் கேட்க…. 

“நீங்கல்லாம் பார்த்து ஓகேன்னா எனக்கு ஓகே” 

என சொன்னது ஞாபகம் வந்தது. சிற்றப்பா ஓரளவு வசதியானவர் என்ற வகையில் பொருளாதார ரீதியில் அங்கு சிக்கல்களில்லை. ஆனால் ரமீஸின் குடும்பம் அவர்களுடன் ஒப்பிடுகையில்  சற்று வசதி குறைந்தவர்கள். சிற்றப்பா உறவுகளுக்கு உதவுவதில் பின் நிற்காதவர். இவனது குடும்பத்துக்கும் பல வழிகளில் உதவிக் கொண்டிருப்பவர். இன்னும் Social work, சீர்திருத்தம் அப்படி இப்படி ரமீஸ் ஈடுபடும்போது அதை அவனது தாய் தந்தையே விமர்சித்தபோது…. 

“குடி சூது கஞ்சா ரெஸ்டியாது, குப்பாடித்தனம் என்று சுத்தாம ஒரு தூய்மையான பிள்ளையா அவன் இருப்பது புடிக்கலையோ!” 

என யதார்த்தமாக கேட்டு இவனுக்கு சப்போர்ட் பண்ணியது வரை சின்ன வயதில் இருந்தே சிற்றப்பாவை இவனுக்கும் ரொம்ப பிடிக்கும். அந்த மரியாதை தான் ரைஹானா விசயத்தை அவரிடம் சொல்ல கூச்சப்படுத்தியது.

“டேய் உனக்கு இனி பசிக்காது ஆனா எனக்கு பசிடா! பகல் சாச்சா கேட்டப்ப உன்கூட சாப்பிடுவதா சொன்னது தப்பா போச்சு!” 

என சலீம் சொன்னபோது தான் அவன் சாப்பிடாமல் இருப்பது நினைவில் வந்தது. 

“Sorry டா கொஞ்சம் இரு kitchen க்கு போய் பார்த்திட்டு வாறேன்” 

என ரமீஸ் நகர்ந்தான். சின்னம்மாவிடம் சொல்லி சாப்பாட்டை மாடி ரூமில் வைத்துவிட்டு சலீமை கூப்பிட வந்தான். அங்கு சலீம் ரைஹானாவுடன் பேசிக் கொண்டிருந்தான். பக்கத்தில் தங்கை சில்மியா…… ரைஹானாவை கண்டதும் ஏதோ ஒரு சொல்லமுடியாத உணர்வு மின்சாரம் போல் உடலில் ஓடுவதை உணர்ந்தான். 

தொடரும்…..

M.U.A.Raheem.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!