உணர்வுகளின் விடுகதை 17

உணர்வுகளின் விடுகதை - 17

(தொடர்கதை EP 17)


ரைஹானாவின் மாமா சலீமின் கையில் bike key யினை கொடுத்து…

“வண்டிய எடுத்திட்டு போங்க!” 

என்று கூறியவாறு ரமீஸுடன் செல்ல 

மறுபக்கமாக சலீம் புறப்பட்டான். சலீமின் முகத்திலும் கோபத்தின் சூடு வெளிப்பட்டது. நேரடியாக சிற்றப்பாவிடம் நடந்ததை கூற அவரும் கோபப்பட்டு தனது போலீஸ் நண்பருக்கு call போட்டு விசயத்தை சொன்னார். அப்படியே அவரது ஆலோசனையை பெற்றபின்பு….

“என்ன மகன் எதையும் எங்க கிட்ட கொஞ்சம் கேட்டு செய்யப்படாதா? சரி வாங்க அவருகிட்ட போய் சூடா ரெண்டு கேள்வி கேட்டுட்டு வருவம். அப்பத்தான் கொஞ்சமாச்சும் பயம் வரும்!”

என்றவரிடம்….

“இந்தாள் சுத்த ஜில்மால் காரன் சாச்சா  போன ஆக்கள பேசி சமாளிக்கிறதுல number one…! ஆனாலும் வாங்க போய் பார்ப்பம்” 

என்ற சலீம் ‘இன்னைக்கு உனக்கு இருக்குடா மவனே!’ என சிற்றப்பாவுக்கு தெரியாமல் பல்லை கடித்துக் கொண்டான். ரைஹானாவின் வீட்டு அழைப்பு மணியை சலீம் அழுத்தி சிறிது நேரத்தில் சாலிஹ் நாநா கதவை திறந்தார்.

“அஸ்ஸலாமு அலைக்கும் வாங்க ஹாஜியார்” என்றவரிடம்…

“வஅலைக்குமஸ்ஸலாம் இருந்து பேசுற அளவுல நீங்க எதையும் செஞ்சு வைக்கல. இதுக்கு பிறகாவது நீங்க தண்ணியுள்ள நெருப்ப கொண்டு போற விளையாட்ட விடுங்க அத சொல்லிட்டு போகத்தான் வந்தேன்!” 

என்ற சிற்றப்பாவை பார்த்து…

“என் குடும்ப விசயத்தை நான் பார்த்துக்கிறேன் நீங்க ஒன்னும் சிறைக்க வர வேணாம்!” 

என்ற சாலிஹ் நாநாவை சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தவன் போல சலீம் பிடித்திழுத்து நையப்புடைத்தான். அந்த கோதாவின் சத்தத்திற்கு ஊரே கூடிவிட்டது. 

“இவன் பச்ச ஜில்மால் காரன் சாச்சா இவன்கிட்ட வாயால பேசி சரிவராது!”

என முறுக்கி நின்ற சலீமை ஊரவர்கள் பிடிக்க….

“டேய்! எனக்கே கைவச்சிட்டியா? உனக்கு இருக்குடா!” 

என சாலிஹ் நாநா அடிபட்ட பாம்பாக சீற அந்த மஹ்ரிப் நேரம் சச்சரவோடு ஊர் பேசும் சம்பவமாக மாறிப்போனது.

“என்ன இருந்தாலும் நீங்க கை நீட்டியிருக்கப்படாது மகன்!” 

என்ற சிற்றப்பாவிடம்….

“அவன் பேசின மாதிரிய பார்த்தீங்க தானே சாச்சா இவனுக்கு ரெண்டு போட்டாதான் அடங்குவான். ஊர்லயும் நிறைய பேர்கிட்ட வாங்கியிருக்கான்!”

என்ற சலீமிடம்….

“எப்படியோ இந்த குடும்பத்தோட சேர வாய்ப்பிருக்கு இல்லையா அதனால கொஞ்சம் நிதானமா நடக்க இருந்திச்சி!”

என்றார் சிற்றப்பா.

“ரமீஸ் நாநாக்கு இதெல்லாம் முடியாது! Supper வேலை செஞ்சீங்க சலீம் நாநா!”

என சில்மியா சலீமுக்கு மட்டும் கேட்குமளவில் மெதுவாக பாராட்டிக் கூறினாள்.

“சரி இப்போ ரமீஸ் மச்சானோட செய்தி என்னவோ தெரியல?”

என பஸ்லியாவின் கணவன் கூற அவர்களின் பேச்சின் திசை ரமீஸ் பற்றிய கவலையில் திசை திரும்பியது.

இதெல்லாம் இப்படி இருக்க மறுபக்கம் ரமீஸ் கோபமும் அவசரமும் சேர்ந்தியக்க வாகனத்தை செலுத்தினான். 

“மகன் ஒரு பள்ளிகிட்ட நிப்பாட்டுங்க தொழுதிட்டு போவம்!” 

என்ற ரைஹானாவின் மாமாவிடம்…

“இல்ல வத்தள பள்ளிக்கு போயே தொழுதுவிட்டு மிச்சத்தை பார்ப்போம்!”

என்ற ரமீஸின் கருத்துக்கு உடன்பட்டு

“ம் இன்ஷாஅல்லாஹ்” 

என்று மட்டும் சொன்னார் ரைஹானாவின் மாமா.

இன்னொரு பக்கம் சாலிஹ் நாநா Police க்கு போய் entry போட்டுவிட்டு வீட்டுக்கு வந்து யாருக்கோ call பண்ணி….

“இல்ல late ஆக்க ஏலாது நாளைக்கே எல்லாத்தையும் முடிச்சுடுவம்…….” 

என சொல்லிக் கொண்டிருந்தார். நேரம் போய்க்கொண்டிருந்தது. ரமீஸ் சொன்ன ஐந்து மணிநேரத்தில் ஏறத்தாழ இரண்டு மணிநேரம் கடந்தும் விட்டது. இந்நேரம் ரமீஸ் ரைஹானாவுடன் திரும்பிக் கொண்டிருப்பான் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் தெரியாத ஊரில் புரியாத மனிதர்களுடன் என்னென்ன சவால்களுக்கு ரமீஸ் முகங்கொடுப்பானோ? என்ற கவலை பெரியவர்கள் மனதில் இயல்பாகவே எழுந்தது. 

“எங்கட நாநா மைனியோட ஒரு ஹீரோவ போல வந்திறங்குவாரு இன்ஷா அல்லாஹ்!” 

என சில்மியா சொல்ல பஸ்லியா அதற்கு…. 

” ஆமீன் யாரப்பில் ஆலமீன்” 

என கூறவென ஒரு சொட்டு பச்சை தண்ணீர் கூட குடிக்காமல் எல்லோரும் காத்திருக்க ரமீஸ் குறிப்பிட்ட நேரமும் கடந்துவிட்டது. இப்போது எல்லோர் மனதிலும் ஒருவகை tension சூழ்ந்தது. மணிநேரங்கள் கடந்து இரவு மூன்று மணியை நெருங்கியபோது சிற்றப்பா வீட்டு தொலைபேசி அடித்தது. சிற்றப்பாவே அதையெடுத்து…..

“ஒவ் மங்தமாய் ஒவ் கியன்ன” (ஆம் நான் தான் ஆம் சொல்லுங்க) என்று விட்டு பேரதிர்ச்சி அடைந்தவராக “சுப்ஹானல்லாஹ் இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜியூன். என்றவாறு இரண்டு மூன்று இடங்களுக்கு call செய்து ஒரு வாகனத்தை வாடகைக்கு எடுக்க பேசிவிட்டு. 

“எல்லாரும் தயாராகுங்க ரமீஸிற்கு சின்ன ஒரு பிரச்சினை நாங்க எல்லோரும் போகனும்!” 

என்றுவிட்டு அவரும் தயாரானார்.

தொடரும்….

எம்.யூ.ஏ.ரஹீம்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!