உணர்வுகளின் விடுகதை - 15
(தொடர்கதை EP 15)

“சின்ன ஒரு சந்தேகம் சில்மி!?…. first time என்கூட ரைஹானா பேசினப்பவே கொஞ்சம் logic ஆ Intelligent ஆ கேள்வில்லாம் கேட்டா! அதுமாதிரி தன்னோட உரிமைக்காக நியாயத்துக்காக அவங்க வாப்பாகிட்ட பேசவே மாட்டாளா!?”
என்ற ரமீஸின் கேள்வி சில்மியாவை கொஞ்சம் சினங்கொள்ள வைத்தது.
“நாநா உங்க பார்வையின் பலவீனத்த எப்படி புரியவைக்கிறதுன்னு தெரியல எங்களோட கணிப்புக்கு அப்பால சில reality ங்க வேறுபடும். உதாரணமா உங்க கிட்டயும் இந்த வீட்டிலயும் இவ்வளவு துணிவா கறாரா பேசுற நான்…. பொதுவுல போனா இப்படில்லாம் பேசமாட்டேன். அதுக்கு காரணம் இங்க எனக்கு தரப்பட்டிருக்கிற சுதந்திரம் மீதான நம்பிக்க. அதை கெடுத்திட கூடாதெங்கிற எச்சரிக்கையுணர்வு! ஆனா அவள் அவங்க வீட்ல மட்டுமில்ல பொதுவில கூட அதிர்ந்து பேசமாட்டாள்! உங்க கிட்ட அன்னைக்கு அப்படில்லாம் கேள்வி கேட்டப்ப எனக்கும் கூட ஆச்சரியமா இருந்திச்சு! உண்மை என்னன்னா இந்த வீடு அவளுக்கு புடிச்சி போனதால இந்த வீட்டுக்குறிய reality மீது ஒரு நம்பிக்கை வந்திருக்கு…. அது அவளை பேசவச்சுது. ஆனா அவங்க வாப்பாகிட்ட அப்படில்லாம் பேசமாட்டா. சொல்லப்போனா உங்களுக்கு எழுதின letter கூட என்னோட தூண்டுதலால எழுதினது! ஏன் வெட்கத்தை விட்டு சொல்லனும்னா அவளுக்கு எழுத வரலன்னு என் Advice படி எழுதினது!”
என்றாள்.
“So இந்த விசயத்தில ஒரு கை ஓசை கதைதானா!?”
என்றவனை. பார்த்து மறுபடியும் முறைத்துவிட்டு….
“அவளோட வாப்பாவ தாண்டி இவ்வளவு தூரம் நகர்த்த துணிவு வந்திருக்கு இது போதாதா? இன்னொரு வகையில நடக்காதுன்னு தெரிஞ்சும் அவங்க வாப்பா கூட போராடுறது அர்த்தமில்லைன்னு கூட முடிவெடுத்திருக்கலாம். But இப்போ எனக்கும் அவள் வீட்டுக்கு போக வேணாம்னு எங்க வாப்பா சொல்லிட்டாரு. அவளுக்கு எங்க வீட்டுக்கு வந்து போய்க்கிட்டிருந்த சுதந்திரமும் பறிக்கப்பட்டிருக்கு! யோசிச்சு பாருங்க அங்கயும் ஒரு வகையான போராட்டம் நடந்துகிட்டுதான் இருக்கு. சும்மா ஒரு கை ஓசை அது இதுன்னு சினிமா டைட்டில் எல்லாம் விடாம அந்திக்கு அவங்க சொன்ன இடத்தில போய் சந்திக்க பாருங்க. எனக்கு வேற வேலை இருக்கு!”
என்றவாறு உள்ளே சென்றாள் சில்மியா.
ஆனாலும் ஒரு தடவை ரைஹானாவின் தந்தையை சந்தித்து பேசினால் என்ன? என்ற கேள்வி ரமீஸ் மனதில் எழுந்தது.
“மச்சான் சலீம் நான் சொன்னதுபோல ரைஹானாட வாப்பாவ ஒரு தடவை நேரடியா சந்திச்சு பேசுவம். Evening ரைஹானாவ சந்திக்க அவங்களே இடமும் time ம் தந்திருக்காங்க. சில முடிவுகளுக்கு வர சரியா இருக்கும்! சாச்சாக்கு தெரியாம face to face பேசி பார்த்திடலாம்!”
என்ற ரமீஸிடம்….
“But உன்னோட இந்த முடிவு சிக்கலை வேறு கோணத்தில் நகர்த்தும்னு எனக்குப்படுது! என்னவோ போ அவுலியா குஞ்சி நான் சொல்லி கேட்கவா போறே! ஒன்னோட பிடிவாதம்தான் தெரியுமே! சரி வா போவோம்! ஆனா மச்சான் சாலி நாநா லேசுப்பட்ட ஆளில்ல! அவருக்கு பெயரே அப்பாடக்கர் சாலி எங்கிறதுதான்!”
என்றான் சலீம். இருவரும் ரைஹானா வீட்டுக்கு சென்றனர். அழைப்பு மணியை அழுத்தி சில நொடிகளில் ஒரு சிறுவன் கதவை திறந்தான்.
“அதுதான் ரைஹானாட இரண்டாவது தம்பி!”
என மெதுவாக சொல்லியவாறு….
” அஸ்ஸலாமு அலைக்கும் மகன் வாப்பாவ கொஞ்சம் பேசுங்க!”
என்றதும் அவன் உள்ளே சென்றான். சில நொடிகளில்….
“யாரது!”
என கூறியவாறு வந்தவர் சலீமை கண்டதும்….
” அஸ்ஸலாமு அலைக்கும் சலீம் Sir மிச்ச நாளைக்கப்புறம் வாங்க வாங்க!”
என்றதும் பதில் ஸலாம் சொல்லியவாறு இருவரும் உள்ளே சென்றனர். சத்தியராஜ் உயரம் மன்சூர் அலிகான் உடல் சங்கிலி முருகன் voice என இருந்தாலும் நம்பியார் தன சிரிப்புடன் நெப்போலியனது வெட்டு பார்வையில் ரமீஸை ஏற இறங்கப் பார்த்துவிட்டு
“இது யாரு சலீம் Sir?”
என்ற கேள்வி அவரிடமிருந்து வந்தது.
“இது என்னோட best friend ரமீஸ் ஒரு முக்கியமான விசயமா உங்க கூட பேச வந்திருக்கோம்!”
என்ற சலீமிடம்….
“ஓ ஏதாவது donation விசயமா பேச வந்தீங்களா?”
என்றவர்….
“மகன் மகன்”
என மகனை அழைத்து….
“ரெண்டு கோப்பி கொண்டு வாங்க”
என்றுவிட்டு…
“சரி என்ன திடீர்னு இந்தப்பக்கம்!?”
என்றார்.
“இல்ல…… இது ரமீஸ் என்னோட best friend இவருக்குத்தான் உங்க மகள நூர்தீன் ஹாஜியார் பேசி வந்தாரு….”
என்றபோதே….
“ஓஓஓ அந்த விசயமா உங்க friend என்ற போதே கொஞ்சம் சந்தேகம் வந்திச்சு ஆனா நேரடியா வீட்டுக்கு வருவீங்கன்னு எதிர்பார்க்கல ஆனா நல்ல விசயம்! ஆனா அல்லாட ஏற்பாடுன்னு ஒன்னிருக்கல்ல! அதுவும் கொமரு காரியம்…. என்னோட கடமையையும் பொறுப்பையும் ஒழுங்கா செய்யனும்! இன்ஷா அல்லாஹ் சொல்றேன்!”
என்றபோதே ஏதோ கணக்குப் போடும் விதமாக அவரது நெற்றி ரேகைகள் சுருங்கி விரிந்தாலும் சிரிப்பிலும் பேச்சிலும் வித்தியாசம் காட்டாமல்….
“இல்ல நீங்க சரியான ஒரு முடிவு சொல்லல அதுதான் ஒரு confirmation க்காக வந்தோம்!”
என சலீம் சொல்ல…
“ம்ம்ம் அல்ஹம்துலில்லாஹ் அதுதான் கொஞ்சம் time கேட்டனே?”
என அவர் சொன்னதும்…..
“இல்ல நாள் கடந்து போகுது…..”
என சலீம் சொல்ல…..
“Sir இது love கிவ்வு இல்லையே? எதுக்கு நீங்க அவசரப்படணும்? நான் தேடிப்பார்த்து பிடிச்சிருந்தா நிச்சயம் மேற்கொண்டு அடுத்த வேலைகள செய்யலாம்!”
என்றபோதே கோப்பி வந்தது.
“ம் குடிங்க”
என்பதிலிருந்து எல்லாமே சாதாரணமாகவே இருந்தது. முகத்திலும் பேச்சுவார்த்தையிலும் சலனங்களை காட்டாத சிரிப்பு முன்னாள் நடிகனும் பின்னாள் அமெரிக்க ஜனாதிபதியுமாக இருந்த ரெனால்ட் ரேகனை விஞ்சியது. அந்த கோப்பி முன்பொருமுறை ரைஹானா போட்ட கோப்பியின் கைப்பதத்தை நினைவுபடுத்த இருவரும் விடைபெற்றனர்.
“ஒரு வாப்பா என்ற வகையில நான் நிச்சயம் சரியான முடிவெடுப்பேன்”
என்று அவரும் வழியனுப்பினார்.
“மச்சான் நினைச்சது போல அப்படி அவரு மோசமால்லாம் இல்ல போல!”
என்ற ரமீஸிடம்….
“அப்பாடக்கர் சாலிஹ் நாநாவ பத்தி நீ என்கிட்ட சொல்றியா!? அவர் எங்கட ஊர்டா எனக்கென்னமோ நீ மொதல்ல அவங்க மாமா சொன்ன மாதிரி evening ரைஹானாவ சந்திச்ச பிறகு அவரை சந்திக்க போயிருக்கலாம்னு தோனுது!”
என்றான் சலீம்.
தொடரும்…..
எம்.யூ.ஏ.ரஹீம்.