உணர்வுகளின் விடுகதை 14

உணர்வுகளின் விடுகதை - 14

(தொடர்கதை EP 14)

காதலின் சந்தோசங்களை கற்பனை செய்த அதேஅறையில் அதன் சிக்கல்களால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தான் ரமீஸ்! அன்றைய இரவும் இன்னொரு விடியாத இரவாக ரமீஸிற்கு இருந்தது. சலீம் தொடர்ச்சியாக பல Advice களை கூறி அவனை சம்மதிக்கவைக்க முயற்சி செய்தான். 

“இங்க பாரு இது பாவம் இல்லை சூழ்நிலைகள் சில அடிப்படை நிபந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்துது. இது உலகத்தில பரவலா நடக்கிது. உனக்கு தான் first time இல்ல! அதுதான்டா சாச்சா கூட இந்த முடிவ சொல்ல காரணம்!”  

என்ற சலீமிடம்……

“மார்க்கத்தோட நிபந்தனைகளுக்கு முரணா அவங்க வாப்பா நடக்கிறதாவும் எனக்கு படல! சாச்சா கேட்டப்ப பார்க்கலாம்னுதான் சொல்லியிருக்காரு தவிர உறுதியா கூறல மச்சான்! சரி நான் இங்கிட்டு இருக்கேன் எங்கிற துணிவுல ரைஹானா வீட்டில முரண்டு பிடிச்சா கூட Convince ஆக வாய்ப்பிருக்கு…. அதுல ஒரு நியாயம் கூட இருக்கு. மாத்தமா ஒரு திருட்டு கல்யாணம் போல நடத்த நினைக்கிறது தப்புதாண்டா. நாளைக்கு இதே situation சில்மியா விசயத்தில வந்தா எங்களுக்கு எப்படி இருக்கும்!” 

என்றவனிடம்….

“ஆனா எங்க சாச்சாவோட corrector அப்படி இல்லையேடா!” 

என்றான் சலீமிடம்….

“ம்ம்ம் அதுதான் point. இது corrector சம்பந்தப்பட்ட பிரச்சனை! மாத்தமா ஒருத்தரோட உரிமையிலயும் மானத்திலயும் விளையாடுற விஷயமில்லை!” 

என்றான் ரமீஸ்.

” சாலி நாநா இன்னொரு மாப்பிளைய பார்த்து அவசரமா கல்யாணத்த எடுக்கிற முயற்சியில இருக்கிறத ரைஹானாட சாச்சா conform பண்ண பின்னாடிதான் அவர்கூட பேசி இந்த முடிவுக்கே சாச்சா வந்திருக்காரு! சரி இப்ப முடிவா என்னதான் சொல்ல வாரே!?”

என்ற சலீமிடம்…..

“எனக்கு இரண்டு விசயம் தேவைப்படுது! ஒன்னு அவசரமா ரைஹானா கூட பேசணும். அடுத்தது அவங்க வாப்பா கூட பேசணும். இதுக்கு ஏதாவது வழி இருந்தா சொல்லு!”

என்றவனிடம்…

“முதலாவதை அவங்க மாமாகிட்ட பேசி பார்க்கிறேன் அடுத்த விசயத்துக்கு நாங்க ரெண்டு பேரும் நேரடியா சென்று பார்ப்போம்!” 

என்றான் சலீம்… சுபஹிற்கு அதான் கூற அந்த உறக்கம் தொலைத்த இரவின் முடிவுரைக்காக இருவரும் பள்ளிக்கு கிளம்பினர்.

அசதி சோர்வு என ஒருபக்கம் இருந்தாலும் தீர்வு என்ற தேடலுக்காக நிமிர்ந்து நின்றான் ரமீஸ். சலீமும் அவனுக்கு துணையாக நின்றான். அவர்களுடன் பஸ்லியாவின் கணவனும் சேர்ந்து கொண்டார்.

“மச்சான் பஸ்லி எல்லாம் சொன்னா! ஆனா இவ்வளவு சிக்கலாகும்னு நான் நினைக்கல! யாரும் காயப்பட கூடாது என்பதுதான் என்னோட விருப்பமும். ஆனாலும் ஒரு Compromise நடக்காம எப்படி முடிவெடுத்தாலும் ஏதோ ஒருதரப்பு பாதிக்கப்படத்தான் போகுது….. அதனால உங்களுக்கும் இந்த குடும்பத்துக்கும் இலாபம் தரக்கூடிய முறையில நல்ல முடிவெடுங்க உங்களுக்கு நானும் support ஆ இருப்பேன் இன்ஷா அல்லாஹ்” 

என்றார் பஸ்லியாவின் கணவர். 

“மச்சான் ஏதாவது நல்ல  முடிவெடுக்கிறது எங்கிறதவிட சத்தியத்துக்கு கட்டுப்பட்டு நியாயத்தின் பக்கமிருந்து முடிவெடுக்கும் போது ஒரு தரப்பு பாதிக்கப்பட்டாளும் தவிர்க்க முடியாம அதை ஏத்துகிட்டுதான் ஆகனும். ஆனால் நீங்க சொன்ன மாதிரி Compromise ஆகுறதுக்காக முழுமூச்சா போராடுறதும் தப்பில்லை. இந்த  விசயத்தில சுயநலத்துக்காக மட்டும் முடிவெடுக்க கூடாது!” 

என்றான் ரமீஸ். சிற்றப்பா வருவதை கண்டு எல்லோரும் மெளனமாயினர். 

“என்ன முடிவெடுத்தீங்க மகன்?”

என்றவரிடம் 

“இன்ஷா அல்லாஹ் இன்னும் கொஞ்ச நேரத்தில சொல்றேன் சாச்சா!” 

என்று ரமீஸ் கூறியதும் அவர் அவ்விடத்தை விட்டும் நகர்ந்தார். பஸ்லியா tea எடுத்துவந்தாள்.

“நாநா சில்மியா உங்க கிட்ட ஏதோ பேசணுமாம்!” 

என்றவுடன் tea கோப்பையை கையில் எடுத்துக் கொண்டு. 

“கொஞ்சம் இருங்க என்னன்னு கேட்டுட்டு வாறேன்!” 

என கூறியவாறு வாசலில் நின்ற சில்மியாவின் பக்கம் நகர்ந்தான் ரமீஸ். அவள் அவனிடம்…..

“அங்கயிருந்து மூன்று call வந்திச்சு! ரொம்ப tention ல இருக்கா! ஆனாலும் உங்கமேல வெச்ச நம்பிக்க மாறல! அத்தோட நீங்க வந்தது ரைஹானாட வாப்பாக்கு இதுவரைக்கும் தெரியாது. உங்களையும் கூட தெரியாது. நீங்க வந்ததா தெரிஞ்சா சிக்கல் அதிகமாயிடும். அத்தோட இன்னைக்கு அந்திக்கு town private hospital க்கு அவங்க உம்மாவ காட்டவருது போல போல வருவாங்கலாம். உங்களை சந்திக்க தான். போய் பேசிட்டு நல்ல முடிவெடுங்க!” 

என்ற போது எதுவும் கூறாமல் சரியென தலையாட்டினான் ரமீஸ்.

தொடரும்…

எம்.யூ.ஏ.ரஹீம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!