உணர்வுகளின் விடுகதை 13

உணர்வுகளின் விடுகதை - 13

(தொடர்கதை EP 13)


அன்றைய இரவு ரமீஸ் உறங்காமல் நிறையவே கனவு கண்டான். ரைஹானாவின் கடிதம் ஒரு அற்புதப் புதையல் கிடைத்த மகிழ்ச்சியை கொடுக்க தலையனைக்கருகில் வைத்து விதம்விதமாக ரசித்துக் கொண்டிருந்தான். சலீம் வீட்டில் class நடத்திய நிகழ்வு தொடங்கி ரைஹானா அவனுள் update ஆனாலும் அவளது தந்தையைப் பற்றி அவள் சொன்ன சந்தேகம் இந்த விடயத்தில் தடையாகி விடுமா? என்ற அச்சம் மெல்ல தாக்கியது! 

‘சிலநேரம் ரைஹானா கடிதத்தில் சொன்னது போல் அவளது தந்தையை மீறி….. No No அல்லாஹ் தூய்மையான முடிவுக்கு தூய்மையான பதிலை தருவான்! தவக்கல்த்து அலல்லாஹ்’ என்ற தனது இறுதித் தீர்மானத்துடன் ஆயத்துல் குர்சியுடன் உறக்க துஆக்களை ஓதியதும் அவனது மனது அர்த்தமற்ற சஞ்சலங்களை Delete பண்ணுவதாகபட சற்று நிம்மதியாய் தெரிய உறங்கிவிட்டான்…. ஆனாலும் ரைஹானா கனவிலும் அவனை விடுவதாக இல்லை! இவனது கண் முன்னே அவளது தந்தை…..

“உனக்கு தாரத்தவிட நானே சாகடிக்கிறேன்…..” என்றவாறு ரைஹானாவை ஒரு புதைகுழியில் தள்ளிவிட அவள் கண்ணீர் சிந்தியவாறு இவனை நோக்கி கையை நீட்டி அழைத்தவாறு புதைந்து கொண்டிருந்தாள்! இவன் பதறியபடி அவளை மீட்க முயற்சிக்க….

“நீ படிச்ச ஹராம் ஹலால் சட்டமெல்லாம் எங்கடா போச்சு!?” என அவளது தந்தை கூற திடுக்கிட்டவனது காதில் “அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்…..” என அதான் ஔிக்க திடுக்கிட்டெழுந்தவனுக்கு அது அருகிலிருந்த தக்கியா பள்ளியின் சுபஹ் அதான் என புரிந்தது. ஆனாலும் அந்த கனவு மனதை ஏதோ செய்தது! 

விடிந்ததும் தாய் தந்தையிடம் விடைபெற்று தனது பணிக்காக புறப்பட்டு சென்றான். ஏறத்தாழ ஐந்து மணிநேர பயண தூரத்தில் அவனது NGO center இருந்தது. அங்கு சென்றதும் களப் பணிகளில் மூழ்கி இரண்டு நாட்கள் கடந்ததும் சலீமிடமிருந்து center க்கு வந்த Call…. 

“மச்சான் ஒரு முக்கியமான முடிவெடுக்க வேண்டியிருக்கு நீ உடனே புறப்பட்டு சாச்சா வீட்டுக்கு வா!” 

என்றதும் ஏதோ சிக்கல் நடந்ததாக ஊகித்தபடி திடீர் விடுப்பு போட்டபடி புறப்பட்டான். பல்வேறு யோசனைகள் சூழ சாச்சாவீட்டை அடையும் போது இரவு  ஒன்பதுமணி கடந்திருந்தது. அங்கு சலீமும் சாச்சாவும் இவனது வருகைக்காக காத்திருப்பது தெரிந்தது!

“வாங்க மகன் முதல்ல கைகால் கழுவிட்டு வந்து சாப்பிடுங்க! அப்புறமா பேசலாம்.” 

என சாச்சா கூற சற்ற குழப்பத்துடன் ரமீஸ் சலீமின் முகத்தைப் பார்க்க அவன்….

“சும்மா tention ஆகாத வா… நானும் இன்னும் சாப்பிடல!”

என்றவாறு மேல் மாடியறை நோக்கி அழைத்துச் சென்றான். அவனிடம் ரமீஸ்…. 

“என்ன மச்சான் ஏதாச்சும் சிக்கலா?”

என கேட்கவும் சலீம்…..

“இல்ல மச்சான் உன்னோட திருமணப் பேச்சுக்கப்புறம் சில குழப்பங்கள் நடந்ததா ரைஹானாட மாமா மூலமா தகவல் தெரிஞ்சிது! சில முடிவுகள அவசரமா எடுக்கத்தான் உன்ன வரச் சொன்னோம்!”

என கூறவும்…..

“ஏன் சாச்சா போய் பேசினப்ப ரைஹானாட வாப்பா negetive ஆ ஏதாச்சும் சொன்னாடா?”

எனக் கேட்கவும்….

“இல்ல மச்சான் மறுத்து சொல்லல… சரி பார்க்கலாம்னு சொல்லியிருக்காரு ஆனா Love எலவுன்னு சந்தேகப்பட்டு வீட்டில படையெடுத்திருக்காரு! அத்தோட  உன்னோட தொழில்….. சரி அதவிடு அந்த அப்பாடக்கர் சாலி நாநா தவிர எல்லாருக்கும் உடன்பாடு…. முக்கியமா ரைஹானா Perfect ஆ உன்னை நம்புறா! அதனால சாச்சா அவ மாமாகூட பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறாரு! சரி குளிச்சிட்டு வா சாப்பிட்டு பேசலாம் எனக்கும் கொலப் பசி!” 

என சலீம் சொன்னதும் பல்வேறு குழப்பங்கள் சூழ தனது வீட்டில் வைத்து கண்ட கனவு ரமீஸ் கண்முன் வந்து நின்றது!  

தொடரும்…

எம்.யூ.ஏ.ரஹீம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!