உணர்வுகளின் விடுகதை 11

உணர்வுகளின் விடுகதை - 11

(தொடர்கதை EP 11)

ரைஹானாவின் கடிதத்துக்காக காத்திருந்த ரமீஸிற்கு இருப்பு கொள்ளவில்லை. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் சில்மியா வரவில்லை என்றவுடன் ஒருவகையில் சினமும் ஏற்பட்டது. மறுபக்கம் ஏதாவது சிக்கல் ஏற்பட்டிருக்குமோ என மனம் அஞ்சியது. கீழே இறங்கி வந்து சோபாவில் அமர்ந்தபோது ஒரு சிறு தூக்கம் அவனையறியாமல் அரவணைக்க தூங்கிவிட்டான்.

 “நாநா நாநா” 

என அழைக்கும் சத்தத்திற்கு தான் திடுக்கிட்டு எழுந்தான். அது சில்மியா…..


“ஓ வந்தாச்சா? Any positive news?” 

என உற்சாகத்துடன் கேட்டான். அவள்….

” ஆறுமணிக்கு news முடிஞ்சி இனி 12 மணிக்கு தான். அதுக்கு முன்னாடி உங்க கூட பேச முக்கியமான ஒருத்தர் வர இருக்கிறாங்க!” 

என்றபோது ‘ரைஹானாவா இருக்குமோ  இருக்காது என மனதில் நினைத்தவாறே எழுந்தபோது….

“இந்த மூஞ்சியோட இருந்தா பயந்திடுவாங்க கொஞ்சம் makeup touch up லாம் பண்ணிட்டுவாங்க!” 

என்று சில்மியா சொன்னபோது அவனுக்கு சற்று குழப்பமாகவே இருந்தது. 

“யாருன்னு சொன்னா குறைஞ்சு போயிடுமா? ரைஹானா தானே?” 

என்று ரமீஸ் சொல்ல சில்மியா 

“நினைப்பு தான் புழப்ப கெடுக்கும் என்பாங்க. போங்க போயி ரெடியாகி வந்தா கொஞ்ச நேரத்தில தெரிஞ்சிடும்!”

என்றதன் பின் அவன் மாடிப்படி ஏறினான். ரமீஸ் ரெடியாகி கீழே வந்தபோது முன் கதிரையில் அன்று ரைஹானா வீட்டுக்கு போனபோது இவர்களை வரவேற்று உபசரித்த அவளின் தாய் மாமன் அமர்ந்திருப்பது தெரிந்தது. ‘ஓ இவர்தானா அந்த VIP’ என மனதில் நினைத்தவாறே முன்னால் வர அவனருகில் வந்த சில்மியா…

“Interview start ஒழுங்கா பதில் சொல்லி pass ஆகிடுங்க நாநா! பஸ்லியா தாத்தாக்கு பதிலா ஒரு மைனி அவசரமா தேவை!” 

என்றாள்….


அதை காதில் வாங்கியும் வாங்காமல் ஸலாம் சொல்லியவாறு இவன் முன்னே சென்று அவருக்கு முன்னால் இருந்த கதிரையில் அமர்ந்தான். அவரும் பதில் ஸலாம் சொல்லியவாறு ஒரு புன்முறுவல் பூத்தார்.

“நீங்க சலீம் sir ட கூட்டாளியா? நான் அவங்க ஊர்தான்……. என தொடங்கி அவரை பற்றிய அறிமுகத்தை செய்தார். அதில் ஹைலைட்டான விசயம் ரைஹானா அவரது வீட்டில் தங்கித்தான் படித்துள்ளாள். Subject க்கு வருவார் என காத்திருந்தான். இதற்கு நடுவில் இவனைபற்றிய ஒரு அறிமுகத்தை “உங்கள பத்தி கொஞ்சம் சொல்லுங்க மகன்?” 

என அவர் கேட்டதும். தன் விபரங்களை சொல்ல தொடங்கினான். பொறுமையாக கேட்ட அவர்…. 

“தொழில் என்ன பண்றீங்க?” 

என கேட்டதும் 


” NGO ஒன்றில் field officer ஆக வேலை செய்கிறேன்!” 

என்றபோது அவரது முகத்தில் ஒருவித மாற்றம் ஏற்பட்டதை இவன் அவதானித்தான். டீ வந்தது அதை குடித்தவாறே…. 

“ரைஹானா விசயமா தான் பேசவந்தேன் நேரடியா நான் விசயத்துக்கே வாரேன் எதேச்சையா கல்யாணத்தில கண்டு கேட்டதா தான் மச்சான் கிட்ட சொல்ல போறேன். அதனால அந்த அளவுல நாங்க நடந்துகிட்டா இந்த விசயத்தை சுமூகமா முடிக்கலாம்னு மனசுலபடுது. மச்சான் கொஞ்சம் கண்டிப்பானவர் அத்தோட ஏதாச்சும் சிக்கலா புரிஞ்சிகிட்டா அந்த கோபத்தை என் சகோதரி…. அதாவது ரைஹானாட உம்மா மேலதான் காட்டுவாறு. அத்தோட நம்பி பழகவிட்டிருக்க வீட்டில இருந்து இப்படி ஒரு சம்பவம் நடப்பதை சந்தேகமா தான் யோசிப்பாரு. அதனால ரொம்ப பொறுமையா தான் விசயத்த நகர்த்தனும்!” 

என்று அவர் சொன்னதும்….

“நீங்க நினைக்கிற மாதிரி தப்பா ஒன்றும் நடக்கல. விருப்பம் வந்திச்சு but அத நேர்மையா நடத்திட தான் full try பண்றேன் uncle” 


என ரமீஸ் கூறியதும்…

“தெரியும் தம்பி ஆனா மச்சான் இத எப்படி எடுத்துப்பார் எங்கிற பயத்தில தான் சொல்லவந்தேன். ராத்தாவும் ரைஹானாவும் பாவம் நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் நடவால குழம்பிட்டு இருக்கிறாங்க. அவங்க சொன்னா எடுபடாது. நான் தான் இன்ஷாஅல்லாஹ் ஏதோ ஒரு வகையில விசயத்தை போட்டு நடத்தி முடிக்கணும். சரி அல்லாஹ் நாடினா சிறப்பாக நடக்கும்!” 

என கூறி விடைபெற்றார். 

“என்ன நாநா காயா பழமா என்ற சில்மியாவிடம்…

“No no இது Advice with discussion Interview இல்ல சரி letter எங்க?” 

என்றான் ரமீஸ்

“ஆச தோச அப்பளம் வட Advice அது இதுன்னு இப்பதானே சொன்னீங்க? அதுக்கிடையில கரணம் அடிச்சீங்களே நாநா!” 

என்றவளிடம்…

“இன்ஷா அல்லாஹ் Within two months அந்த கையையே பிடிக்க போறேன் அதனால எழுதுற letter என்ன letter  நான் உடுப்படுக்கனும்!” 

என்றவாறு மாடிப்படியேறினான் ரமீஸ். அவன் தாய் தந்தை மூவரும் அங்கிருந்து விடைபெற தயாராகினர். வழமைபோலவே அன்பாக கொடுத்தனுப்பும் பொருட்களை பொதி செய்து அவர்களின் bags களில் தம்பியும் சில்மியாவும் சேர்ந்து அடைத்தனர்.

“நாநா Extra bag ஒன்றும் ஈக்கிற bus ல mis பண்ணிடாம!” 

என்றான் தம்பி.


“சரிடா” 

என அவனது தலையை தடாவியபின் சில்மியாவிடம் ரமீஸ்…

“மேல் room லதான் அந்த one and only மேசையில இருக்கு If you don’t mind….” 

என்றபோது கண்கள் சற்று கலங்கியவாறு சில்மியா

“நாநா பேசாம அங்க வீட்ட கூலிக்கு குடுத்திட்டு சரி பெரியம்மாவயும் பெரியப்பாவயும் இங்கயே இருக்க விடலாமே!” 

என்றாள். அதற்கு உடன்பாடாக….

“ஓ தாத்தா நீங்க இங்கையே வந்து இருக்கலாமே? நாநாவும் அவரும் ஒன்னா கடைய பார்த்துக்கலாம் அவர்கூட சொன்னாரு” 

என சிறிய தாய் கூற….

“என்ன இருந்தாலும் சொந்த வீடு வாசல் மனசுக்கு திருப்தியா உழைக்கிற அவரோட சின்ன வருமானம் திருப்தியா இருக்கும்மா அல்ஹம்துலில்லாஹ் விட்டு வர மனசில்ல!” 

என்று ரமீஸின் தாய் கூற அதில் உள்ள நியாயத்தை புரிந்து மெளனமானார் சிற்றன்னை. திறீவீலர் வர…..

“சாச்சி கடைக்கு போய் சாச்சா கிட்ட சொல்லிட்டு போறோம் நாங்க போயிட்டுவாறோம்!” 

என்று ரமீஸ் கூறினான். 

“பீ அமானில்லாஹ்” 

என்ற வார்த்தை மூவரிடமும் இருந்து வந்தது. வண்டி புறப்பட தயாராக திறீவீலரிலருக்கு அருகில் வந்த சில்மியா மெதுவாக…. 

“நாநா உங்க side bag ல உங்க Suprise பத்திரமா இருக்கு don’t worry நீங்க ஏமாறல. அத்தோட ஒரு special gift ஆ மைனி கைப்பதத்தில sweet கூட இருக்கு!” 

என்றபோது…

“வல்லாஹி! ” 

என்றவாறு சந்தோசத்தின் உச்சிக்கே சென்றான் ரமீஸ்”

“ம் நீங்க ஏமாறல்ல நாநா இன்ஷா அல்லாஹ் ஏமாறவும் மாட்டீங்க பீ அமானில்லாஹ்!” 

என மறுபடியும் சொல்ல வண்டி புறப்பட்டது. 

‘வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா உன் நினைவில் என் நினைவே சொர்க்கம் தானம்மா..’ என

திறீவீலரில் மெதுவாக ஒலித்த அந்த சினிமா பாடல் அதுவரை அவ்வளவு உட்சாகம் காட்டாத அவனுக்கு அதன் அர்த்தத்தை ரசிக்க வைத்தது. அந்த கடிதத்தில் என்னதான் இருக்கும்!? என ஏங்கவைத்தது.

தொடரும்….

எம்.யூ.ஏ.ரஹீம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!