உணர்வுகளின் விடுகதை - 10
(தொடர்கதை EP 10)

அன்றைய இரவு ரமீஸிற்கு விடிவதாக இல்லை. கைக்கடிகாரத்தையும் சுவர்க் கடிகாரத்தையும் மாறி மாறி பார்தே வெறுத்துப்போனது. எப்போது விடியும் ரைஹானாவின் கடிதத்தை சில்மியா எப்போது கொண்டு வந்து தருவாள்? அந்த கடிதத்தில் என்னதான் எழுதியிருப்பாள்? சுவர்க்கோழியின் கீச்சிடும் சத்தம்வேறு எரிச்சலூட்டியது.
தூரத்தில் எங்கோ ஒரு நாய் குரைக்கும் சத்தம் கேட்க Accident ஆனது நினைவுவர வடுக்களாக மாறிவரும் சிராய்ப்பு காயங்களை பார்த்து ‘இன்ஷா அல்லாஹ் இரண்டு மாசத்தில அவளை கைப்பிடிக்கும் போது இதெல்லாம் அடையாளம் தெரியாமல் போய்விடும்’ என்று தனக்குள் கூறிக்கொண்டான். இன்னொரு பக்கம் நான்தானா இப்படி மாறிவிட்டேன்!? என்ற சுய விமர்சனமும் வர தனக்குள் சிரித்துக் கொண்டான். ‘With in halal னா Ok’ என அதற்கு தீர்ப்பும் கூறியபின் மெதுவாக உறக்கம் அவனை அரவணைத்தது. அதுகூட கனவுக்கும் நிஜத்திற்கும் நடுவில் இருக்கும் ஏதோ ஒன்றுபோல நடந்தவைகளையும் எதிர்பார்ப்பவைகளையும் போட்டு சுழன்றடிக்கும் ஒன்றாகவே இருந்தது.
சில்மியா கடிதத்தை கொண்டுவந்தது போல் feeling வர “please மா கடிதத்தை கொடுத்திடு!” என உறக்கத்தில் வாயுலட்டினான். சுபஹிற்கு சற்று முன் எழுந்து காலைக்கடன்களை முடித்து தயாராகி விழிப்பில் மறுபடியும் கனவு காணும்போது அதான் ஒலித்தது. கீழே இறங்கி வந்தபோது வாப்பாவும் சிற்றப்பாவும் முன் கதவை திறந்து பள்ளிக்கு செல்வது தெரிந்தது. மறுபடி கதவை மெதுவாக திறந்து மறுபடியும் சாத்தியவாறு இவனும் அவர்கள் பின்னாடியே சில மீட்டர்கள் இடைவெளியில் பள்ளிக்கு சென்றான்.
இமாம் ஜமாத் முடிந்ததும் தந்தையும் சிற்றப்பாவும் பயானில் இருந்தனர். ரமீஸ் வீட்டுக்கு வந்த பின்புதான் தம்பி பள்ளிக்கு போவது தெரிந்தது. அவன் சோபாவில் அமர்ந்து மறுபடியும் தன் கனவுக்குள் புகுந்தான்.
” அஸ்ஸலாமு அலைக்கும் மகன் என்ன யோசன! காலையோட ரெடியாகிட்டீங்க?”
என சிற்றன்னை கேட்டதும்தான் மறுபடியும் சுய நினைவுக்கு வந்தான்; எவ்வளவு நேரமோ தெரியாது. சிற்றன்னை நீட்டிய கோப்பியை வாங்கியவாரு….
“வஅலைக்குமஸ்ஸலாம் பள்ளிக்கு போக ரெடியானன் சாச்சி.”
என்ற போது தம்பி குர்ஆன் ஓதும் சத்தம் கேட்டது.
“அப்போ சில்மியா இன்னும் எந்திரிக்கலையா சாச்சி?”
என்றவனிடம்…
“இப்பதான் எந்திரிச்சி பாத்ரூம் போனா. ம் பஸ்லியா இருந்தா முதல்ல அவதான் எந்திரிச்சி எல்லா வேலைங்களையும் இழுத்திட்டு செய்வா! போன இடத்திலயும் நல்லா இருக்கனும் ”
என்று சிற்றன்னை சொன்னதும் அதை வைத்தும் அவனது சிந்தனை காதல் குளத்தில் குதித்து நீச்சல்லடித்தது; ஏனென்றால் பஸ்லியா போலவே ரைஹானாவும் தலைப் பிள்ளை ‘So அவளும் அவ்வாறே Insha Allah’ என தனக்குள் கூறிக்கொண்ட போதே சிற்றன்னை செல்ல சில்மியா வருவதும் தெரிந்தது.
” அஸ்ஸலாமு அலைக்கும் ஏன் பெருச்சாளிக்கு சுபஹுக்கு முன்னாடி எந்திரிக்க முடியாதா?”
என்றான் இவன்.
“வஅலைக்குமஸ்ஸலாம் அதெல்லாம் நாங்க சரியான நேரத்தில சரியா செய்வம்ல. ஏனிந்த அதிரடி Advice!?”
என்றாள் சில்மியா.
“இல்ல சாச்சி பஸ்லியாவ பத்தி சொன்னா அதான் கேட்டேன்”
என்றான்.
“ம்ம்ம் அவ போனதில இருந்து புலம்பிட்டுதான் இருக்கா. எனக்கும் கூட கவலதான் ஏன்னா என்ன கூட காலையில பஸ்லிதாத்தா தான் எழுப்புவா. இரண்டுவருச different இருந்தாலும் friends மாதிரி தான் இருந்தோம். But இப்போ நான் யாரும் தட்டி எழுப்பி எந்திரிக்கல விதிவிலக்கான சிலர் தவிர பெண் என்பதன் பொறுப்புணர்ச்சி automatic ஆ ஏற்படும். ஆனா பிறந்த வீட்டு உலகம் போல போன இடத்தில கிடைப்பது அபூர்வம். அப்படி நடப்பது பெண்களின் வாழ்வில் ஒரு சிலருக்கு தான். எல்லோருமே அந்த ஒரு சிலரா இருக்கத்தான் ஆசப்படுவோம். ஆனால் நிச்சயமில்லை. அதனால பிறந்த வீட்டு உலகம் up-to-date ஆ அமைஞ்சா அதை அனுபவிக்க புத்திசாலியான பெண்கள் முயற்சிப்பாங்க. அப்போ உங்க தங்கச்சி ஒரு புத்திசாலி என்பது புரியலையா? “
என்றவளிடம்….
“ம்ம்ம் வாயாடியா இருந்தாலும் உண்மதான் All the best ”
என்றவாறு தங்கையின் புரிதலையும் அறிவார்ந்த பேச்சின் உண்மையையும் புரிந்து தலையாட்டினான் ரமீஸ்.
“சரி காலையோட ரெடியாகிட்டீங்க அப்போ அந்த Surprise வேணங்கிறீங்க! அப்படித்தானே?”
என்றாள் சில்மியா. பதறிய அவன்….
“No no அதுக்காகத்தான் ரெடியாகி இருக்கேன்!”
என்றவனை பார்த்து….
“சுத்தம்! ஒரு letter க்கே இந்த மரியாதைன்னா ரைஹானாட புகுந்த வீடு மாஷாஅல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் Supper! நீ lucky டீ நண்பியே no no மைனியே.”
என சில்மியா சொல்லியவாறு வீட்டுக்கு முன்புறம் சென்று முற்றம் கூட்ட தொடங்கினாள். சிறிது நேரத்தில் தந்தையும் சிற்றப்பாவும் வந்தனர்.
“இன்றைக்கு அந்திக்கு போவம் வாப்பா”
என ரமீஸ் கூற….
“சரி மகன்”
என ஆமோதித்தார் தந்தை. சிற்றப்பாவின் கடை திருமண சோலிக்காக ஒரு வாரம் பூட்டியிருந்தது. ஏழரை மணியளவில் கடையை திறக்க அவர் செல்ல அவருடன் ரமீஸின் தந்தையும் சென்றார். அவனுக்கு நேரம் போவதாகவே தெரியவில்லை. அப்படியே சோபாவில் அசந்து தூங்கிவிட்டான்.
“மகன் மகன் எந்திரிச்சு கால சாப்பாடு சாப்பிடுங்க!”
என தாய் தட்டி எழுப்பிய போதுதான் time பார்த்தான் 8.30 மணி.
“இல்ல உம்மா பசிக்கல கொஞ்சம் late ஆகி சாப்பிடுறேன் என்றான்.
“ரெண்டு வாய் போட்டுட்டு போய் room ல தூங்குங்க”
என தாய் சொன்னதும்
“சரிம்மா”
என்றவாறு dining room க்கு சென்று பெயருக்கா இரண்டு வாய் சாப்பிட்டுவிட்டு அவதானித்த போதுதான் சில்மியா இல்லாதது தெரிந்தது.
“சாச்சி சில்மியா எங்க?”
என இவன் கேட்டபோது
“ரைஹானா வீட்டுக்கு போயிருக்கா இப்போ வருவா” என பதில் வந்தது.
மாடி room க்கு சென்று அந்த Surprise first letter பற்றி யோசித்தபோது உடலெங்கும் சொல்ல முடியாத ஒரு மகிழ்ச்சி பிரவாகம் பரவியது. ரைஹானாவுக்காக வாங்கிய அந்த first gift டை ஒரு தடவை தொட்டு பார்த்தான். எப்படியாவது சில்மியா மூலம் அதை கொடுத்துவிட வேண்டுமென மனதில் நினைத்துக் கொண்டான்.
தொடரும்….
எம்.யூ.ஏ.ரஹீம்.