உணர்வுகளின் விடுகதை 01

உணர்வுகளின் விடுகதை 01

(தொடர்கதை EP 01)

அந்த கடிதத்தை உற்றுப்பார்த்தபடி நடந்த சம்பவத்துக்குள் ரமீஸ் சென்றான். அவன் உயர்தரம் வரை படித்துவிட்டு ஒரு N.G.O வில் field officer  ஆக பணியாற்றிக் கொண்டிருப்பவன்.  அவனது துடிப்பும் ஆற்றலும் இறை திருப்தியை மையப்படுத்திய சமூக சேவைக்கென இயங்கிக் கொண்டிருந்தது. நான் எனக்கு எனது என ஓடும் உலகில் இவன் போன்ற புறநடைகள் பெரிதாக கண்டுகொள்ள படுவதில்லை. இருந்தாலும் தனிப்பட்ட உணர்ச்சிகளும் அவனுக்கென நியாயமான சில எதிர்பார்ப்புகளும் சமூகத்திடமிருந்து இருந்தன…… ஆனால் அவை கூட அவனது பொது இலட்சியத்தின் மூலம் வேலியிடப்பட்டிருந்தது. அந்த வேலிக்கப்பால் ஒரு தடவை எட்டிப்பார்த்ததன் முடிவுதான் இந்த கதை. 

ரைஹானா பேரழகி அல்ல. ஆனால் அவளது அறிவு மற்றும் பழக்க வழக்கங்கள் ஒரு பேரழகை அவளை சுற்றி கட்டமைத்திருந்தது. சலீமின் ஊருக்கு சில official வேலைகளுக்காக சென்றிருந்த போதுதான் ரமீஸ் முதல் தடவையாக அவளை சந்தித்தான். அது ஒரு தனிக்கதை. சலீம் ரமீஸின் நெருங்கிய நண்பன். அத்துடன் ஆசிரியர். சில வேலைகளை மறுநாள் தான் செய்யவேண்டும். அன்றிரவு சலீம் வீட்டில் தங்கி மறுநாள் வேலைகளை முடித்து செல்ல தீர்மானித்தான் ரமீஸ்.

“இன்னைக்கு தங்கனும்னா evening class ஒன்னு இருக்கு அதை நீ செய்”

என்றவாறு கண்ணடித்தான் சலீம். 

“சும்மா விளையாடாத syllabus touch விடுபட்டு ரொம்ப நாளாவுது”

என்று ரமீஸ் வாய் மூடுமுன்…. 

“டேய்! உன்னப்பத்தி தெரியாமயா class எடுக்க சொல்லுறன்! நீ படிப்பிக்கிற அழகிலேயே உன்னை Love பண்ணவன்டா நான் இல்லை இல்லை பலபேறு இருந்தாங்க!” 

என்ற சலீமை பார்த்து முறைத்தவாறு…

“சரிடா ரொம்ப Ice வைக்காத செய்கிறேன்” 

என ரமீஸ் சொன்னதும் 

“அப்போ bike ல சின்ன வேலை கொஞ்சம் இருக்கு அதை முடிச்சுட்டு வாரன் மஹ்ரிப் தொழுதிட்டு beach போவம்” 

என்றான் சலீம். 

“அடப்பாவி இதுக்குத்தானா இம்புட்டு பெரிய Ice!?” என்றான் ரமீஸ்.

ஆண்கள் பெண்களென சுமார் 20 பிள்ளைகள் சலீம் வீட்டின் வெளியே  வலதுபுறம் கொட்டில் அமைப்பில் கட்டப்பட்ட வகுப்பறைக்கு வந்திருந்தனர். அவர்களிடம் சலீம் 

“இந்த Sir தான் இன்றைக்கு பாடமெடுப்பார்” 

என கூறிவிட்டு சென்றதும் அன்று படிப்பிக்க வேண்டிய Subjects களை short notes எடுத்த paper இனை ஒரு தடவை பார்த்த பின் Commerce பாடத்தை ஆரம்பித்தான். அது O/L வகுப்பு. அதற்கு ஏற்ப பாடத்தை மிக நிதானமாகவே ரமீஸ் கற்பித்தான். அவனது கற்பிக்கும் முறைக்கு வகுப்பே கட்டுண்டு கிடந்தது. அப்போதுதான் அந்த இருபதில் ஒன்றாக ரைஹானா அவனது கண்ணில் ஒரு Student ஆக பட்டாள். அந்த சம்பவம் அப்படியே காலத்தால் மறந்தே போனது. 

அன்றைய வகுப்பை திருப்தியாக முடித்து மறுநாள் தனது வேலைகளையும் முடித்து ரமீஸ் கிளம்பினான். 

“உனது ஆற்றல் எல்லாம் அநியாயமா போகுது! பேசாம நீ teaching செய்யலாமேடா?” 

என்ற சலீமை பார்த்து ஒரு புன்சிரிப்பை மட்டும் உதிர்த்து விட்டு பஸ் ஏறினான் ரமீஸ். 

“Teaching ஒரு job அல்ல! ஆனா சமூகமும் teachers மாரின் உணர்வுகள் அடிப்படை தேவைகள் இப்படி எல்லாத்தையும் சரியா புரிஞ்சுகனும். அப்படி ஒரு situation வந்தால் நிச்சயமா நான் ஒரு teacher ஆவேன்” 

என்று முன்பு ஒருதடவை ரமீஸ் சொன்னது சலீமின் மனக்கண்முன் repeat ஆனது.

இப்படியே மூன்று வருடங்கள் கடந்திட ரமீஸ் ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொள்ள சிறிய தாயின் வீட்டுக்கு சென்றிருந்தான். அங்கு யாரோ ஒரு அறிமுகமற்ற இளம் பெண் இவனை பார்த்து சிரித்தவிட்டு தலையில் இருந்த முந்தானையை சரி செய்தவாறு உள்ளே சென்றாள். யாரது!? என்னை எப்படி தெரியும் என சில கேள்விகள் உதித்தாலும் கல்யாண வீட்டின் வேலைகளுடன் அதெல்லாம் மறந்து போனது. 

“ரமீஸ் நானா உங்ககிட்ட ரைஹானா பேசணுமாம்!” 

என சிறிய தாய் மகள் சில்மியா சொன்ன போதுதான் திடுக்கிட்டு திரும்பி பார்த்தான் ரமீஸ். அங்கு சிரிப்பால் புதிர் போட்டு சென்ற அந்த பெண் தங்கையுடன் நிற்பது தெரிந்து. யாரது!? என்ற அவனது high speed தேடலில் விடை வரவில்லை. அதை காட்டிக் கொள்ளாமல் ஒரு மெல்லிய புன்சிரிப்பை மட்டும் உதிர்க்க புதிரின் விடையை அவளே அவிழ்த்தாள்.

“நீங்க தானே மூன்று வருசத்துக்கு மொதல்ல சலீம் sir ட வீட்டில ஒருநாள் Class செஞ்சீங்க? உங்க பெயரும் ரமீஸ் Sir னு சலீம் sir சொன்னாரு.”

என்ற போதுதான் அந்த இருபதில் ஒன்று என இவனுக்கும் புரிந்தது.

“yes yes ஆனா ஒரு சின்ன திருத்தம் நான் Sir லாம் இல்லை” 

என்றவுடன்…. 

“எப்படியோ எங்களுக்கு படிப்பிச்ச முறையில Sir தானே!” 

என்ற logic முன் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆனால் தங்கை சில்மியா…. 

” ஆமா இவரு சமூகம் சேவை மார்க்கம் இயக்கம்னு சுத்துவாறு!” 

என்ற போது அவளது முகத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டதை இவன் அவதானித்தான். 

“ஆமா கஞ்சா அடிச்சிட்டு jolly பண்ற இளமையையும் ஹராம் ஹலால பத்தி கணக்கே இல்லாத சம்பாத்தியத்தையும் ஏகத்துக்கும் உலகம் நம்மல ஏத்துக்காது”

என்று இவன் சொன்ன போது ஒரு அழகான சிரிப்பை உதிர்த்தாள் அவள்.

“ஆனா Sir ஒரு சந்தேகம்?” 

என புதிர் போட்டாள்.

என்ன என்பதுபோல் ரமீஸ் நிமிர்ந்து பார்த்தான். 

“அன்னைக்கு class எடுக்கும்போது Commerce படிச்சு தந்தீங்க! அதுல வங்கி வட்டி அப்படி இப்படின்னு நீங்க சொல்ற ஹராம் ஹலாலு க்கு விரோதமா ஏகப்பட்டது வருதே!” 

என்றவளின் கண்களை முதல் தடவையாக ஊடுறுவி பார்த்தான் ரமீஸ்.

“Good question ஆனால் பதிலை two three words ல சொல்லமுடியது!” 

என்றபோதே தம்பி ஏதோ வேலைக்காக அழைக்க Excuse me என்றவாறு இடத்தை விட்டு நகர்ந்தான். ஆனால் சந்திந்த கண்களின் மோதலில் வழமைக்கு மாற்றமான ஏதோ ஒன்றை உணர்ந்தான் ரமீஸ்.

(தொடரும்…..)

M.U.A.Raheem

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!