ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான வினா-விடைகள் (2026) – 07

ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான வினா-விடைகள் (2026) - 07

  1. இலங்கையின் நீதிமன்ற முறைமையினை டிஜிட்டல் மயமாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கிய திட்டத்தின் பெயர்?
    விடை: E-court

  2. டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் இலங்கைக்கு ஏற்பட்ட மொத்தச் சேதமாக மதிப்பிடப்பட்டுள்ள தொகை?
    விடை: 4.1 Billion $

  3. 2025ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியாகத் தொகைமதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் குறிப்பிடப்பட்ட வளர்ச்சி வீதம்?
    விடை: 5.4%

  4. இலங்கையின் காந்தி என அறியப்படுகின்ற நபர் யார்?
    விடை: A.T. Ariyaratna

  5. உலகில் அமைதி அரசியலமைப்பினைத் கொண்டுள்ள நாடு எது?
    விடை: Japan

  6. சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்குடன் செயற்படுகின்ற உலக நிறுவனம் எது?
    விடை: UNICEF

  7. இலங்கையின் தற்போதைய பாராளுமன்றத்திலுள்ள அமைச்சரவை (Cabinet) அமைச்சர்களின் எண்ணிக்கை?
    விடை: ஜனாதிபதி உட்பட 23 (23 Including President)

  8. தற்போதைய பாராளுமன்றத்திலுள்ள பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை?
    விடை: 22 MPs

  9. 1978 – 2ம் குடியரசு யாப்பில் தற்போது வரை எத்தனை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?
    விடை: 21 திருத்தங்கள் (21 Amendments)

  10. இலங்கையில் பரப்பளவின் அடிப்படையில் இரண்டாவது மிகப் பெரிய மாகாணம்?
    விடை: கிழக்கு மாகாணம்

  11. ஜூரி விசாரணை முறைமையானது எந்நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்படும்?
    விடை: மேல் நீதிமன்றம்

  12. இறுதியாக நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி பெற்றுக்கொண்ட மொத்த வாக்கு வீதம் யாது?
    விடை: 61.56% — 159 ஆசனங்கள்

  13. 2025 இல் காலமான ஜப்பான் அரசியலின் தந்தை என அறியப்படும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் யார்?
    விடை: டோமிச்சி முராயாமா

  14. 2025ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை பாராளுமன்றத்தினால் மொத்தமாக எத்தனை சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன?
    விடை: 26 சட்டங்கள்

  15. திடீர் மரணப் பரிசோதகர் (Coroners) யாரால் நியமிக்கப்படுவார்?
    விடை: நீதியமைச்சு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!