சில்லென்று ஒரு காதல் - 02
(தொடர்கதை EP 02)

“என்ன சமி திடீர்னு இப்படி சொல்றீங்க!? நா ஓகனைஸ் பண்ண ட்ரிப்! போயாகனுமே! அதுவும் நான் வரலைன்னு சொன்னா….. இது பைனல் இயர் பைனல் ட்ரிப் வேர…”
என்றவனிடம்…..
“உண்மையில எனக்கு பிடிக்கல! இங்க உங்க பிரண்ட்ஸோட போக்கு சரியில்ல. அவங்கள பத்தி எனக்கு நோ ப்ராப்ளம் ஆனா எந்த நம்பிக்கையோட உங்கள விரும்பினனோ அந்த நம்பிக்கையில ஒரு சின்ன சந்தேகம் வந்தாலும் எனக்கு தாங்க ஏலா!”
என்றாள் அவள்.
“ஐ நோ மை லிமிட் சமி! எப்பவும் நான் லிமிட் தாண்ட மாட்டேன். அது இந்த கொஞ்ச நாள்லயே உங்களுக்கு புரிஞ்சிருக்கும். ஆனா இப்ப கொஞ்ச நாளா உங்க கிட்ட ஒரு பதட்டம் தெரியுது! ஏன்னு புரியல!?”
என்றவனிடம்…..
“எனக்கு ரொம்ப பயமா இருக்கு! இது நடக்குமா என்கிற சந்தேகம். அவசரப்பட்டு உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்திட்டமோ எங்கிற பீலிங்! எதுக்காகவோ இங்க வந்திட்டு எதையோ செஞ்சிகிட்டிருக்கோம்! எது எப்படியோ இப்போ உங்கள பிரிஞ்சு இருக்கிறது ரொம்ப கஸ்டமா இருக்கு!”
என்றாள் அவள்.
“டோன்ட் வோரி சமி! எங்க வீட்டில எந்த ப்ராப்ளமும் இருக்காது. ஆனா எனக்கின்னு ஒரு டார்கட் இருக்கு. அது என் சொந்த சம்பாத்யத்தோட நாம சேரனும் அல்ஹம்துலில்லாஹ் அதுக்கு ஏத்த மாதிரி உனக்கு இன்னும் ஓவர் த த்ரீ இயர்ஸ் இருக்கு நானும் டிகிரி எடுத்த கையோட சார்ஜா போயிடுவேன். அதுக்கு நடுவுலயும் ஏதாச்சும் வாரண்டி வேணும்னா என் வீட்டில சொல்லி புரபோஸ் பண்ணிடலாம்!”
என்று இவன் கூறினான்.
“சரி அப்போ நீங்க ட்ரிப் போறத்தோட நானும் வீட்டுக்கு போயிட்டு மூணு நாளைக்கப்புறம் வாறேன்.”
என்றாள். அந்த மூன்று நாட்கள் ஏதோ யுகம் போல ரொஷானுக்கு இருந்தது. ஒரு வகையில் சம்ஹாவின் ஆதங்கம் ஏக்கம் கவலை எல்லாவற்றிலும் உள்ள நியாயத்தை உணர்ந்தான். நண்பர்கள் விமர்சிக்கும் அளவுக்கு அந்த ட்ரிப்பில் கூட டல்லாகவே இருந்தான்! அது அவனுக்கே புரிந்தது. சம்ஹாவின் புன்சிரிக்கும் முகத்தை பார்க்க வேண்டும் என்ற ஒரே ஆர்வம் தவிர வேறு எதுவும் அவனது மனதில் இருக்கவில்லை.
“மச்சான் அந்த போட்டோ சாம்பலா போயிடும்டா! பார்த்து பார்த்தே எரிச்சிடுவான்! இவனும் லவ்சும் படுகிற பாடு!”
என சக நண்பனொருவன் சொன்ன போதுதான் சுயநினைவுக்கே வந்தான். எப்படியோ ட்ரிப் முடிந்து ஹாஸ்டல் வந்து ஒரு வாரமாகியும் சம்ஹா வராதது ஏறத்தாழ பித்துபிடித்த அளவுக்கு இவனை மாற்றியது. ஒரு வாரம் கழித்து வந்தவளிடம் நிறைய மாறுதல்கள் தெரிந்தது. அந்த புன்சிரிப்பு டிரேட் மார்க் இனம்புரியாத ஒரு சோகத்தால் ஆக்கிரமிக்க பட்டதை இவனால் உணர முடிந்தது!
பலதடவை அதைப்பற்றி கேட்டும் திருப்தியளிக்கும் பதிலேதும் சொல்லாமல் மழுப்பல் பதில்களே அவளிடமிருந்து கிடைத்தது.
“சமி எக்ஸாம் முடிஞ்சிது நெக்ஸ்ட் வீக் பெயார்வெல்லுக்கு அப்புறம் புல் ஸ்டப் டூ யுனிவர்சிட்டி லைப். அடுத்தது சார்ஜா பயணம். நீங்க பாஸ்ட் அவுட்டாகி வரும்போது இன்ஷா அல்லாஹ் எனக்கென ஒரு லைப் அதில சம்ஹா என்ற சமி என் வைப்….!!!!”
என அவன் சொன்னபோது வார்த்தைகள் வராமல் விம்மியவாறு கண்ணீரால் பதில் சொன்னாள் அவள். அன்று யூனிவர்சிட்டியில் அவனது இறுதிநாள் அவர்கள் வழமையாக சந்திக்கும் மரத்தடியில் நீண்ட நேரம் எதுவும் பேசாமல் மெளனமாக இருந்தனர்.
“சமி ஜஸ்ட் பியூ மந்ஸ் நினைக்க முடியாத நெருக்கத்தை ஏற்படுத்திட்டு. இப்பவே உங்களை கூட்டிட்டு போகனும்போல பீலிங்!”
என்றபோது முதல் முறையாக இவனது தோல் சாய்ந்து அவள் விம்ம தொடங்கியது சுகவுணர்வுகளை தாண்டி வியப்பை இவனுக்கு கொடுத்தது. அதிலும்….
“ஒரு முக்கியமான விசயத்த உங்ககிட்ட இன்னைக்கு சொல்லியே ஆகனும்!”
என அவள் சொன்ன போது இவனது நெற்றியில் ஆச்சரியம் கலந்த கேள்வி ரேகைகள் தோன்றியது.
தொடரும்…..
எம்.யூ.ஏ.ரஹீம்