ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான பொது அறிவு வினா – விடைகள் (2026) – 05

ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான பொது அறிவு வினா - விடைகள் (2026) - 05

  1. ஒருவர் மற்றொருவரின் தனிப்பட்ட விடயங்கள் சார்பாக செயற்படுவதற்கு அல்லது பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு எழுத்து மூலமாக வழங்கப்படுகின்ற சட்டரீதியான அதிகாரம்?
    விடை: அட்டோனி தத்துவப்பத்திரம் (Power of Attorney)

  2. இலங்கையில் Jury trial முறையிலான விசாரணையினை அறிமுகப்படுத்திய பிரித்தானிய ஆளுநர் யார்?
    விடை: Thomas Maitland – 1811

  3. Trial at Bar விசாரணையில் எத்தனை நீதிபதிகள் காணப்படுவர்?
    விடை: 3 நீதிபதிகள்

  4. இலங்கையில் மரண தண்டனை வழங்குவதற்கு நியாயாதிதிக்கமுடைய நீதிமன்றம் எது?
    விடை: மேல் நீதிமன்றம் (High Court)

  5. அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகள் எந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படல் வேண்டும்?
    விடை: உயர நீதிமன்றம் (Supreme Court)

  6. இலங்கையின் நீதிமன்ற நடைமுறைத்தொகுதி எவ்வகையானது?
    விடை:
    விரோத / மாற்றான் முறைமை (Adversarial System)

  7. இலங்கையின் பொதுச்சட்டமாக அறியப்படுகின்ற சட்டம் எது?
    விடை: உரோமன் டச்சு சட்டம்

  8. சர்வதேச நீதிமன்றத்தின் தற்போதைய தலைவர் யார்?
    அவர் எந்நாட்டவர்?
    விடை: யுஜி இவ்சவா – ஜப்பான்

  9. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தற்போது எத்தனை உறுப்பு நாடுகள் காணப்படுகின்றன? இறுதியாக இணைந்து கொண்ட நாடு?விடை:
    125வது நாடு – உக்ரைன்

  10. ரஷ்யா நாட்டின் பாராளுமன்றம் எப்பெயரினால் அழைக்கப்படுகிறது?
    விடை: டுமா (Duma)

  11. இலங்கையில் இலவசக்கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு யாது?
    விடை: 1945 – C.W.W. Kannangara அவர்களால்.

  12. இலங்கை திறந்த பல்கலைக்கழகம் தாபிக்கப்பட்ட வருடம்?
    விடை: 1980

  13. இலங்கை திறந்த பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவதற்கான கருத்திட்டத்தினை முன்வைத்த முன்னோடி யார்?
    விடை: Dr. Nissanka Wijeratna

  14. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக அண்மையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டவர் யார்?
    விடை: Upali Mampitiya (6வது வேந்தர்)

  15. மகாத்மா காந்தியினை சுட்டுக்கொலை செய்தவரின் பெயர்?
    விடை: Nathuram Godse

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!