ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான பொது அறிவு வினா – விடைகள் (2026) – 03

ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான பொது அறிவு வினா - விடைகள் (2026) - 03

  1. வினா: இலங்கையினை ‘தப்ரபேன்’ எனும் பெயரினால் அழைத்தோர் யாவர்?
    விடை: கிரேக்கர்கள் மற்றும் தொலமி

  2. வினா: பெண்களுக்கு முதன்முதலாக வாக்குரிமையினை வழங்கிய நாடு எது?
    விடை: நியூசிலாந்து

  3. வினா: இலங்கை உயர்நீதிமன்றமானது எத்தனையாம் ஆண்டு உருவாக்கப்பட்டது?
    விடை: 1801

  4. வினா: தற்போது இலங்கை உயர்நீதிமன்றமானது கொண்டுள்ள மொத்த நீதியரசர்களின் எண்ணிக்கை யாது?
    விடை: தலைமை நீதியரசர் (CJ) உட்பட மொத்தம் 17 பேர் (தலைமை நீதியரசருடன் 6 க்குக் குறையாமலும் 16 க்கு மேற்படாமலும்)

  5. வினா: இலங்கை உயர்நீதிமன்றத்தின் தற்போதைய (49வது) தலைமை நீதியரசர் யார்?
    விடை: பிரீத்தி பத்மன் சூரசேன

  6. வினா: இலங்கையின் முதலாவது பெண் நீதி அமைச்சர் யார்?
    விடை: தலதா அத்துக்கோரள

  7. வினா: பிரித்தானிய கோமறைக்கழகத்தில் (Privy Council) மேன்முறையீடு செய்யும் முறை ஒழிக்கப்பட்டு, இலங்கை உயர்நீதிமன்றமானது இறுதி மேன்முறையீட்டு நீதிமன்றமாக எப்போது மாற்றப்பட்டது?
    விடை: 1972

  8. வினா: இலங்கை குடியரசு தினமாக எப்போது நினைவுகூரப்படுகிறது?
    விடை: மே 22 (1972)

  9. வினா: அண்மையில் வெள்ளம் மற்றும் சூறாவளி இயற்கை அனர்த்தங்களினால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆசிய நாடுகள் யாவை?
    விடை: இலங்கை (டித்வா), இந்தோனேசியா (சென்யார்), தாய்லாந்து (சென்யார்)

  10. வினா: ‘டித்வா’ (Ditwah) என்ற சூறாவளிக்கு பெயரிட்ட நாடு எது?
    விடை: யெமன்

  11. வினா: டித்வா சூறாவளியின் பின்னர் இலங்கைக்கு இந்தியாவினால் வழங்கப்பட்ட உடனடி மனித நேய நிவாரணப் பணிகள் எப்பயரினால் அழைக்கப்படுகின்றது?
    விடை: Operation Sagar Bandu

  12. வினா: டித்வா சூறாவளியின் பின்னர் இதுவரைக்குமான நிவாரண வழங்கல்களில் எந்நாடு இலங்கைக்கு மிகப்பெரிய தொகையினை நிவாரணமாக அளித்துள்ளது (Largest Donor)?
    விடை: மாலைதீவு (Maldives) – 2.4 மில்லியன் $

  13. வினா: உலக வானிலை அமைப்பின் (WMO) தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
    விடை: ஜெனிவா, சுவிட்சர்லாந்து

  14. வினா: இலங்கையின் முதலாவது சட்டமா அதிபரான இலங்கையர் யார்?
    விடை: John William Ronald Illangakoon (1936)

  15. வினா: இலங்கை சட்டத்தரணிகள் சங்கமானது (BASL) உருவாக்கப்பட்டு 2025 இல் எத்தனை வருடங்கள் நிறைவடைந்துள்ளன? அதன் தற்போதைய தலைவர் யார்?
    விடை: 51 வருடங்கள் (1974 இல் ஸ்தாபிக்கப்பட்டது)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!