வினா இலக்கம் 01
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
அல்ஹம்துலில்லாஹ்! அருள்கள் நிறைந்த புனித ரமழான் மாதம் இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்த மாதம் எம்மை வந்தடைந்தமைக்காக அல்லாஹ்வுக்குப் புகழாரங்கள் உரித்தாகட்டும்.
நோன்பு என்பது வெறும் பசியோடு இருப்பது மட்டுமல்ல, அது ஆத்மாவின் தூய்மைக்கும் இறையச்சத்தை (தக்வா) அடைவதற்கும் வழங்கப்பட்ட ஒரு கட்டாயக் கடமையாகும். இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களில் ஒன்றாகத் திகழும் நோன்பு, முந்தைய சமூகத்தினர் மீதும் கடமையாக்கப்பட்டு இருந்தது என்பதனை அல்குர்ஆன் சுட்டிக்காட்டுகிறது.
இன்றைய முதல் வினா (Quiz) இந்தப் புனிதமான கடமையின் அடிப்படையைப் பற்றியதாகும்:
கேள்வி 01: நோன்பு கடமை என்பதை கூறும் குர்ஆன் வசனம் எது?
அறபு, தமிழ், வசன (எண்)