Islamic February 28, 2026 Rawfan

ரமழான் விசேட வினா – விடை போட்டி (வினா இலக்கம் 10)

வினா இலக்கம் 10

ரமழான் மாதம் என்பது வெறும் நோன்பு மற்றும் ஆன்மிகப் பயிற்சிகளுக்கான காலமாக மட்டுமல்லாது அது இஸ்லாமிய வரலாற்றில் முக்கியமான திருப்புமுனைகளும் நிகழ்ந்த மாதமாகும். இந்த புனிதமான மாதத்தில் நடந்த சில சம்பவங்கள், முஸ்லிம்களின் ஈமான், தியாகம் மற்றும் அல்லாஹ்வின் மீது கொண்ட உறுதியான நம்பிக்கையை உலகிற்கு எடுத்துக்காட்டுகின்றன. குறிப்பாக, ஒரு முக்கியமான போர் ரமழானில் நடைபெற்றது; அது இஸ்லாமிய சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானித்த வரலாற்றுச் சம்பவமாக அமைந்தது.

அந்தப் போரின் போது, எண்ணிக்கையில் குறைவாக இருந்த நபித்தோழர்கள் மிகுந்த சவால்களை எதிர்கொண்டனர். ஆனால் அல்லாஹ் தனது உதவியை வழங்கியதாக குர்ஆன் தெளிவாக குறிப்பிடுகிறது. அந்த உதவி எவ்வாறு வந்தது? யார் உதவியாக அனுப்பப்பட்டார்கள்? மேலும், எந்த வசனத்தில் அது குறிப்பிடப்பட்டுள்ளது? போன்றவற்றை அறிந்து வைத்திருப்பது இஸ்லாம் சார்ந்த எமது புரிதலை பறைசாற்றுகிறது

இன்றைய வினா – வினா இலக்கம் 10

ரமழானில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க போர் எது ? அங்கே நபித்தோழர்களுக்கு உதவியாக வந்தவர்கள் என அல் குர்ஆன் யாரை கூறுகின்றது ? (வசனம் , வசன எண் )

இந்த வினாவிற்கான விடையை கீழே உள்ள button ஐ கிளிக் செய்து நிரப்புங்கள்