ஒரு வானவில் போலே….! 04

ஒரு வானவில் போலே - 04

தொடர் கதை பாகம் 04

 

“Sir… today is my birthday…” என்றவாறு ஏதோ ஒரு Sweets box னை என்னை நோக்கி நீட்டினாள் மதுபாசினி…..
“Wow what a shine full day! Wish you many more happy returns of the day” என்றவாறு அந்த Sweets ல் ஒன்றை எடுத்து சுவைத்தேன்…. அதே சுவை ம்ம்ம் அதே சுவை இதற்கு முன் அஜந்தா இதே இனிப்பை எனக்கு தந்திருக்கிறாள்!
“Mmm yammi! please one’s more…..” என்றவாறு இன்னொன்றை எடுத்து சுவைத்தவாறு “it’s home made?” என்றேன்
“yes sir my Grandmas special.. now I can do well” என வெகு இயல்பாக சொன்னாள். “Lucky girl” என நான் சொல்லவும் “thank you sir” என்றவாறு உதட்டோரம் படரும் அந்த மந்திரப் புன்னகையை உதிர்த்து அடுத்தவர்களுக்கு Sweet கொடுக்க நகர்ந்தாள் மதுபாசினி. அப்படின்னா Grandma நிச்சயம் அஜந்தாவின் அம்மாவாக இருக்கலாம் என மனதில் ஏதோ ஒரு பட்சி சொன்னது. சிறிது நேரத்தின் பின் அவள் வந்து இரண்டு நாள் விடுமுறை எடுத்து சென்றாள். எதற்கு? என கேட்க நினைத்தாலும் நாகரீகம் கருதி கேட்கவில்லை.

Off ஆகி இருப்பிடம் வந்த பின்னும் மனதை ஏதோவெல்லாம் நெருடியது. குளித்துவிட்டு கட்டிலில் சாய்ந்தவாறு அந்த Sweets பற்றிய sweet memories க்குள் நீந்த தொடங்கினேன்…… அஜந்தா வந்தாலென்ன ஆட்டுக்குட்டி வந்தாலென்ன என மனதின் ஒருபக்கம் சொன்னாலும்…. இன்னொரு பக்கம் நீ கல்லெடுத்து அடித்தது பெரிய தப்புதான் என பழைய சம்பவங்களை ஞாபகப்படுத்தியது.
” அண்ணே இந்தா பிடி” என ஏதே ஒரு bag னை தங்கை என்னிடம் நீட்ட கேள்விக் குறியோடு அவளை பார்க்க….. சிரித்தவாறு
“நீ கல்லால அடிச்ச என்னோட friend குடுத்தாங்க” என்றவும் புரிந்தது. “ஓ அந்த அஜந்தாவா? அப்படி என்ன பொல்லாத friend Ship உங்களுக்குள்ள?” என கேட்டேன். ” அவளை போலவே அவள் மனசும் ரொம்ப அழகண்ணே! இந்த நாலு வருசத்திலயும் வாரத்துக்கு ஒரு letter அவகிட்டயிருந்து வந்திரும்…. அது நான் பதில் போடாட்டியும் கூட வந்திடும்! என்ன ஆரம்பத்தில English ல வந்திச்சு. ரொம்ப சிரமப்பட்டு பதில் எழுதினேன். ஆனா என் English knowledge improvement ஆச்சு. ஆனா கடந்த ரெண்டு வருசமா அவ தமிழிழ expert ஆகிட்டா!” என்றதும் எனக்கு ஆச்சரியமா இருந்திச்சு.

“அத்தோட உன்னோட Accident அவளால தான் நடந்திச்சு என்ற feeling ரொம்பவே அவகிட்ட இருக்கு. அது அவ நெத்தியில நீ பதிச்சத விட அவளுக்கு பெரிசா தெரியிது! அவ கண்ணாடிய பார்க்கிற நேரம் அந்த சம்பவங்களும் நீயும் அவ கண்முன்னாடி வருவதா அடிக்கடி அவ எழுத்தால சொல்லுவா! இன்னைக்கு இங்க வந்தப்ப கூட சொன்னா!” என தங்கை கூறவும் ஏதோ ஒரு நெருடல் எனக்குள்ள ஏற்பட்டிச்சு….. எதுவும் பதில் கூறாமல் என்னோட room க்கு சென்று அந்த gift னை பிரித்தேன். அது ஒரு Book…. Cricket பற்றிய சகல விபரங்களும் அடங்கியது. அத்தோடு அன்று மிகவும் பெறுமதியானது. எனக்கு cricket பிடிக்கும் School team ல் விளையாடுவது…. இப்படி பலதை தெரிந்து அதை வாங்கியிருக்கலாம் என புரிஞ்சிச்சு.
கல்வியை சுமந்து பயணிக்கும்
விளையாட்டும் அர்த்தமுள்ளது!
விளையாட்டுத் தனமாக சுமக்கும்
சுமக்கும் கல்வி பிரயோசனமற்றது!
இவள் அஜந்தா….
என தமிழ் தத்துவக் கவிதை மூலம் உட்புற முன் அட்டையில் சிந்தனை துளியாக இருந்த அஜந்தாவின் முகம் அந்த பத்து வயது குதிரைக்காரியாகவே தெரிய. அதை delete பண்ணி இப்போதைய முகத்தை மிக அவசரமாக replace பண்ண என்னை தூண்டியது.

தொடரும்…..

எம்.யூ.அப்துல் ரஹீம்

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!