ஒரு வானவில் போலே….! 02

ஒரு வானவில் போலே - 02

தொடர் கதை பாகம் 02


மது பாசினி எனக்கு PA வாக மாறியதும் வெளித் தெரியாமல் மறைத்திருந்த அஜந்தாவின் நினைவுகள் மறுபடியும் முறுக்கேரி என் உணர்வுகளை ஆட் கொண்டது. அஜந்தாவை பற்றி கேட்டு ஒரு clarification செய்தால் என்ன? என மனசு சொல்லியது….. ஆனாலும் ஒருவரை போல ஏழு பேர் இருப்பாங்க என்ற விஞ்ஞான பூர்வமற்ற வழக்காற்று பேச்சு ஞாபகம் வந்திச்சு. அத்தோட ஒரு common sense இல்லாம எதற்கோ அலையும் ஒருவனாக என்னை இனங்காட்டிடுமோ எங்கிற பயம் அப்படி செய்ய விடவில்லை. “Sir today evening management meeting!” என PA மது ஞாபகப்படுத்தவும் தான் அஜந்தாவின் நினைவுகளால் படர்ந்த போதை கொஞ்சம் கீழிறங்க “ம் ok” என்றேன். அத்தோடு கொஞ்சம் job ல் கவனம் எடுக்கனும் என புரிய laptop னை open செய்தேன். ஆனாலும் என்னோட இருபது வருட service experience க்கு நானே ஆப்பாகிடுவேனா என்ற கேள்வியுடன் மிக அவதானமாக நடக்க ஆரம்பித்தேன். ஒரு மாதிரியாக ஒரு வாரம் கடக்க ‘கதிர் you can manage it டா’ என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அப்படியே பழைய நினைவுகளில் கொஞ்சம் மூழ்கினேன்.

யாழ்ப்பாணத்தில் சிறு வயதில் வீதியோர கிரிக்கெட் பிரபல்யம். சுற்றியிருந்த வீட்டு யன்னல் கூறை முற்றம் என பந்து போய் படவும் விழவும் ஏச்சு பேச்சு திட்டென ஒரு பக்கம் கிடைத்தாலும் எம்மை சூழவிருந்த பெருசுகளில் ஒரு தொகுதி எம்மை ரசித்ததையும் மறக்க முடியாது. ஆனால் தமயந்தி அக்கா வீட்டு பின்புறம் பந்து போய் விழுந்தால்…. அவ்வளவுதான் திருட்டு தனமாக மதில் ஏறி குதித்து தான் பந்தை எடுக்க முடியும். தமயந்தி அக்காவின் அப்பா ரொம்ப கடுமை. Area Hitler என்றே அவரை அழைப்போம். அவரது மூத்த மகனின் மகள் தான் அஜந்தா. மகன் தனது இஷ்டத்துக்கு ஒரு சிங்கள பெண்ணை திருமணம் முடித்ததால் நீண்ட காலம் பேச்சோ தொடர்போ இல்லாமல் இருந்தார்கள். ஆனால் இறுதியில் வழமையான movie கள் போல Hitler க்கு கொஞ்சம் கடுமையாகி Hospital ல் admit ஆக family சேர்ந்துவிட்டது. அப்போதுதான் தர்சனும் அஜந்தாவும் எங்க area பசங்க மத்தியில அறிமுக மானாங்க. தர்சன் அஜந்தாவின் அண்ணன். ரொம்ப friendly யா பழகுவான். அவங்க அதற்கப்புறம் ஒவ்வொரு School vacation க்கும் யாழ்ப்பாணம் வருவாங்க. தர்சன் வந்தப்புறம் Hitler தன்னோட policy ய கொஞ்சம் மாத்திகிட்டார். ஏன்னா அவர் பேரன் area பசங்க கூட இருப்பதாகும். ஆனா எட்டே வயசான அஜந்த ரொம்ப திமிரா நடந்துப்பா! Hitler ன் வால், குதிரைக் காரி என பல்வேறு பெயரில் தான் அவளை அழைப்போம்.

ஒரு தடவை அவங்க School vacation வந்திருந்தப்ப தமயந்தி அக்கா வீட்டுக்கு பின்புறம் விழுந்த பந்துகளை தர்சனின் உதவியோடு தேடினாலும் கிடைக்கவில்லை. இப்படி பல தடவை நடந்திச்சு. அதுவும் ஒரு தடவை அவங்க வீட்டில யாருமே இல்லாத நேரம் தேடிய போது அங்கிருந்த பாதி மூடப்பட்ட பாழ் கிணற்றில் எல்லா பந்துகளும் இருந்தது! So இதெல்லாம் எதேச்சையாக நடக்கவில்லை Hitler தான் புதிதாக ஏதோ சதி வேலை செய்வதாக நினைச்சோம். இதை உறுதிப்படுத்த தர்சனின் உதவியை நாடினோம். அப்போதுதான் அது அஜந்தாவின் வேலையென தெரிய வந்திச்சு. எமக்கெல்லாம் கடும் கோபம்…. வெளிப்படையாகவே அவளை சீண்ட ஆரம்பிச்சோம். எமது கோபத்தை6 வெளிப்படுத்த வேண்டும் அது மட்டும் தான் எங்களோட இலக்கு.

அப்படி ஒரு தடவை தமயந்தி அக்கா வீட்டை தாண்டி சென்ற போது ” ஆட்டக்காரி குதிரைக்காரி ஓட்டை பல்லி….” என ஒரு பட்டப் பெயர் அகராதியையே அவள் மீதி கொட்டிவிட்டு நகர்ந்தேன்….. அவளும் பதிலுக்கு ஏதோ ஆங்கிலத்தில் சொன்னாள்! எனக்கு அப்போது ஆங்கிலமெல்லாம் ABCD இடியப்ப தாடி மட்டும்தான். ஆனால் சில சந்தர்ப்பங்களில் அதை மீண்டும் என் மீது அவள் கொட்டிய போது அர்த்தம் தெரியா விட்டாலும் அந்த pronounce னை உச்சரிக்க முடிஞ்சிது. அவள் சொன்னது stupid clowns என்ற வார்த்தைகள்…. இதை அடிக்கடி அவளது Hitler தாத்தா எங்களுக்கு திட்டும் போது பாவிப்பது. ஆனால் அர்த்தம் தெரியாது. English School ல் அவள் படிப்பதாக தெரியும். அந்த திமிரு தான் என முடிவெடுத்தேன். அவள் மீதான கோபம் மிக மூர்க்கமாக அதிகரிக்க ஒரு தடவை ஒரு கல்லை எடுத்து அவள் தலையை குறிபார்த்து அடித்தது…. வலது பக்க நெற்றி ஓரத்தை நன்றாகவே பதம்பார்த்தது. இரத்தம் சொட்ட அவள் மயங்கி விழுந்த போது அதிர்ச்சியில் திக்பிரமை பிடித்து நின்றேன்.

தொடரும்…..

எம்.யூ.அப்துல் ரஹீம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!