ஒரு வானவில் போலே 31

ஒரு வானவில் போலே - 31

தொடர்கதை பாகம் 31

பாவம் கயல்விழி! எங்கள் காதல் ராஜியத்தில் ஒரு இளவரசியாக வலம்வர வேண்டியவள்…. சம்பந்தமே இல்லாமல் சூழ்நிலை அவளையும் தண்டித்துவிட்டது! அவள் நெஞ்சம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும். அதுதானே இப்படி அவளை பேசத்தூண்டிச்சு. இவளது நிகழ்கால அபிலாசைகளையாவது தந்தையென்ற வகையில் செய்தே ஆகவேண்டுமென, மனதில் நினைத்தவாறு அவளது முகத்தை பார்த்தேன். என்னையே வைத்த கண் வாங்காமல் கூர்மையாக அவள் அவதானிக்கிறாள்! ஏன்? அவள் முகத்தில் ஒரு திருப்திமிக்க புன்சிரிப்பு இருந்திச்சு. இதே பாணி அஜந்தாவிடமும் உண்டு. எதையாவது சாதித்த திருப்தியை அவள் இவ்வாறுதான் வெளிப்படுத்துவாள்…. அப்படி பார்த்தாலும் சற்று முன் கோபமும் விரக்தியும் தெரிய பேசியவளிடம், எதை சாதித்த திருப்தி ஏற்பட்டிருக்க முடியும்!? சில நேரம் அவள் மனதிலுள்ளதை கொட்டிய திருப்தியாக இருக்குமோ? என சிந்தித்தவாறே வண்டியை ஓட்டினேன்.

“அந்த பங்களாவுக்கு தான் போகனும் left ல போட்டு U turn போடுங்க” 

என அவள் சொன்னதும் அவ்வாறே வண்டியை செலுத்தினேன். வெள்ளைகாரன் காலத்து பங்களா புதிதாக புணர் நிர்மாணம் செய்யப்பட்டிருந்திச்சு. விசாலமான portico வில் சில வேளையாட்கள் நின்றனர். கரை ஒரு ஓரமாக நிறுத்தி இருவரும் இறங்கியதும். ஒருவர் ஓடிவந்து பவ்வியமாக…

“அம்மா வணக்கம்மா…. எல்லமே நீங்க சொன்னபடி தயாரா இருக்கு. Airport க்கு போன வண்டியும் வந்திட்டிருக்கு” 

என்றதும் அவள் தலையாட்டிவிட்டு…

“வாங்க உள்ளுக்கு போவோம்” 

என என்னிடம் சொல்ல எதுவும் பேசாமல் அவள் பின்னால் சென்றேன். 

நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட பங்களாவின் Hall விலையுயர்ந்த வெளிநாட்டு பொருட்களால் நிரம்பியிருந்திச்சு! இதெல்லாம் இவளது சம்பாதிப்பா? அதுவும் இந்த இளவயதில்? அல்லது இதுவும் அந்த நாடகத்தின் இன்னொரு பாகமா என மனது  கூறிய போது….

“என்ன Sir… நாடகத்தின் ஒரு கட்டமாக இருக்குமோ என சந்தேகப்படுறீங்களா? Drama is over now fact and reality…. இது ஒரு tourist restaurant ஆக்குவதற்கு அப்பா… அதாவது Uncle என்னோட பெயரில எடுத்தது. For my request எனக்கு தந்திட்டாரு. இன்னும் கொஞ்ச நேரத்தில அவர் வந்திடுவாரு…. அதுவரை நீங்க கொஞ்சம் rest எடுங்க… வாங்க” என கயல்விழி என் மனதை படம்பிடித்தது போல் சொன்னாள். யாரோ ஒரு வேலையாள் முன்வந்து எனக்கு room க்கு போக வழிகாட்ட முன்வந்தும் அதற்கு இடங்கொடாது, அவளே அழைத்துச் சென்று காட்டினாள். 

அந்த room எனக்காகவே தயார்படுத்த பட்டது போல் இருந்திச்சு. அங்கு வீசிய மெல்லிய மல்லிகை பூ வாசனை எனக்கு அஜந்தாவை நினைவுபடுத்திச்சு…. எந்த இடத்தில் கண்டாலும் திருட்டுத் தனமாகவேனும் பறித்துவிடுவாள்! அவ்வளவு பிடிக்கும். சுவரில் ஒரு கவிதை எழுதப்பட்டிருந்திச்சு…. அதைப்பார்த்ததும் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றேன் அதில்……

தொடர்கதை எழுத நினைத்தேன்

முகவுரையில் அது விடுகதை

என்றது விதி!

காவியமாய் மாற நினைத்தேன்

வாய்ப்பே அதற்கு இல்லை

என்றது வாழ்க்கை!

இவள் சூழ்நிலை தீர்ப்பளித்த 

ஒரு ஆயுள் கைதி!

கனவுகளில் கண்ணீர் விழுந்து

கரைந்து போனது!

நினைவுகள் நிர்க்கதியாய்

யதார்த்தத்திடம் மண்டியிட்டது!

இது ஒரு தேய்பிறை

இனி முற்றிலும் அமாவாசை தான்!

முழு நிலவாய் என்னை காண 

நினைக்கும் கண்ணாளனே!

எம் உறவு தந்த உயிர் தவிர

உனக்காக என்னிடம் எதுவுமில்லை!

அஜந்தா…..

என எழுதப்பட்டிருந்திச்சு!

தொடரும்…..

எம்.யூ.அப்துல் ரஹீம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!