ஒரு வானவில் போலே - 30
தொடர்கதை பாகம் 30
“Sorry மா அதிர்ச்சியாவும் ஆச்சரியமாவும் இருக்கு! அஜந்தா எங்கிற வட்டத்தில இருந்தே சிந்திச்சு பழக்கப்பட்டிட்டு! இயற்கை சிலநேரம் ஒரு சோதனையா அவளோட உருவத்தில உன்னை எனக்கு மகளா தந்திருக்களாம்…. நினைச்சு கூட பார்க்க முடியல!”
என்றேன். அவள் ஆழமாக எதையே சிந்திப்பது தெரிஞ்சிச்சு. பின்னர்…..
“ஆனா அதே இயற்கை என்னை எதுக்காக இதுல சம்பந்தப்படுத்திச்சு!?” I mean யார் உன்னோட அப்பான்னு கேட்டா… ஒவ்வொரு காலத்துக்கு ஒவ்வொரு பதிலை சொல்லிட்டு இருக்க வந்திருக்கு! I have been disappointed in the matter of privacy” என்று விட்டு எனது முகத்தை பார்த்தாள்.
எனக்கு எந்த பதிலும் சொல்ல தோன்றவில்லை.
“இப்ப கூட உங்களுக்கு அம்மாவை பத்தின feelings and emotions இருக்கும் தவிர, என்னை பற்றி பெரிசா எதுவும் வராது… இதை ஒரு குற்றச்சாட்டாக சொல்லவில்லை. ஆனால் சம்பிரதாயங்களோடு முரண்பட்டு அவசரப்படும்போது இப்படி நடக்கும்னு அந்த சூழ்நிலை யாருக்கும் கத்துக் கொடுக்காது…. ஆனா காலம் அதனோட விளைவை காட்டும் போது அதுக்கு தீர்வு இருக்காது! I am sorry அப்படி அவசரமா உங்களை father ன்னு சொல்ல முடியாம இருக்கிறது Sir! ஆனால் compromise with nature என்ற வகையில இப்போதைக்கு ஏத்துக்கிறேன். சரி வாங்க போய் அம்மாவை பத்தின விபரங்களை தேடலாம்” என அவள் சொன்னதும் கொஞ்சம் வலிச்சாலும் அதிலிருந்த உண்மை புரிஞ்சிச்சு.
மறுபடி பயணத்தை தொடங்கியதும் அவளை பற்றி அறியும் ஆர்வம் முதல் தடவையா வந்திச்சு. அதாவது அஜந்தாவை பற்றி அறிந்து கொள்வதற்காக அவளை தேடியதற்கும் இதற்கும் வித்தியாசமிருந்திச்சு. இதற்கிடையில் ஏதோ ஒரு பாதையால் திருப்பும்படி கூறினாள். அது ஒரு Estate gateway …..
ஒரு சொற்ப தூரம் முன்னால் போனதும் Welcome to Kayal vili Estate என்ற board வரவேற்றது. மௌனத்தை உடைத்து….
“தப்பா நினைக்கலைன்னா உன்னோட உண்மையான பெயரை தெரிஞ்சிக்கலாமா?” என்றேன். அதற்கு சிரித்தவாறே….
“இப்போதுவரை கயல்விழி”
என்றாள். அப்படியானால் இந்த Estate இவளது பெயரிலேயே இருக்கிறது! சில km கள் பயணித்ததும் ஒரு பங்களா கண்ணில் பட்டது.
தொடரும்…….
எம்.யூ.அப்துல் ரஹீம்